Ads Top

அடிக்கும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி? / HOW TO MAKE PINEAPPLE JUICE IN TAMIL

HOW TO MAKE PINEAPPLE JUICE IN TAMIL

ஆரோக்கிய குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தும் பழங்களில் ஒன்று அன்னாசி. இந்த அன்னாசி பழம் கொண்டு சுவை நிறைந்த 'மில்க் ஷேக்' ஒன்றை செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் 

  • அன்னாசி பழம் - 1.
  • பால் - அரை கப்.
  • கிரீம் (வெண்ணிலா) - 1/4 கப்.
  • சர்க்கரை - 2 ஸ்பூன்.
  • வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்.
  • ஐஸ் துண்டுகள் - 1/2 கப்.

செய்முறை

  • மில்க் ஷேக் செய்ய தேவையான அளவு அன்னாசி பழம் எடுத்து சுத்தம் செய்து, தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டி தயார் படுத்திக்கொள்ளவும். அதேநேரம், மில்க் ஷேக்குக்கு தேவையான மற்ற பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸ் ஜார் எடுத்து, அதில் அரை கப் பால் மற்றும் இந்த அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பழத்தை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காமல் இருப்பது அவசியம்.
  • பின்னர் இதனுடன் ஒரு ½ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் அல்லது 2 சிட்டிகை வெண்ணிலா தூள் சேர்க்கவும். இந்த வெண்ணிலா எசன்ஸ், மிக்ல் ஷேக்கின் சுவையை அதிகரிக்க உதவும்.
  • பானத்தின் சுவையை கூட்ட இதனுடன் 2-3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டும் சேர்க்கலாம்.
  • அன்னாசி பழ மில்க் ஷேக்கின் குளுமையை மேலும் அதிகரிக்க, ஐஸ் கட்டி துண்டுகளை இதனுடன் சேர்த்து ஒரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐஸ்கட்டிகள் பானத்தின் திரவ தன்மையை மேலும் அதிகரிக்கும்
  • இறுதியாக இந்த அன்னாசி மில்க் ஷேக்கில் சிறிது இலவங்கப்பட்டை (அ) ஏலக்காய் பொடியை சேர்த்து அரைத்து, தனியே ஒரு குடுவையில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் மில்க் ஷேக் தயாராகிவிட்டது!
  • குடுவையில் இருக்கும் அன்னாசி மில்க் ஷேக்கினை, ஒரு கோப்பையில் ஊற்றி அதன் மீது ஒரு கரண்டி கிரீம் வைத்து குளிர்ச்சியாக பரிமாற வேண்டியது தான். அழகுக்கு கோப்பையின் விளிம்பில் ஒரு அன்னாசி துண்டை செருகிக் கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.