Ads Top

நாமக்கல் கவிஞரின் மேற்கோள்கள்: NAMAKKAL KAVIGNAR QUOTES IN TAMIL | NAMAKKAL KAVIGNAR THOUGHTS IN TAMIL

நாமக்கல் கவிஞரின் மேற்கோள்கள்: NAMAKKAL KAVIGNAR QUOTES IN TAMIL | NAMAKKAL KAVIGNAR THOUGHTS IN TAMIL

நாமக்கல் கவிஞர்

  • நாமக்கல் கவிஞரின் மேற்கோள்கள்: NAMAKKAL KAVIGNAR QUOTES IN TAMIL | NAMAKKAL KAVIGNAR THOUGHTS IN TAMIL: நாமக்கல் கவிஞர் (அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்னும் ஊரில் வேங்கடராமன் - அம்மணி அம்மாள்க்கு அக்டோபர், 19 1882 அன்று பிறந்தார்.
  • இவருடைய இயற்பெயர் வெ. இராமலிங்கனார்.
  • “கத்தியின்றி இரத்தமின்றியுத்த மொன்றுவருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
  • To know more about SBI EMI CALCULATOR 
  • முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
  • தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.
  • அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 
  • 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • ‘தமிழனென்றுசொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக்கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இவரின் மலைக்கள்ளன் நாவல் எம்ஜிஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.
  • ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், ‘பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.

சிறந்த தொடர்கள்

  • நாமக்கல் கவிஞரின் மேற்கோள்கள்: NAMAKKAL KAVIGNAR QUOTES IN TAMIL | NAMAKKAL KAVIGNAR THOUGHTS IN TAMIL: கத்தி இன்றி ரத்தமன்றி யுத்தமொன்று வருகுது
  • தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு
  • தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
  • இந்திய நாடு என்னுடைய நாடு
  • என்று தினம்தினம் நீயதைப் பாடு
  • பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
  • காந்தியை மறக்காதே - என்றும் சாந்தியை இழக்காதே
  • சத்தியத்தின் நித்தியத்தை, நம்பும் யாரும் சேருவீர்
  • காந்தி என்ற சாந்த மூர்த்தி, தேர்ந்து காட்டும் செந்நெறி
  • மாந்தருக்குள் தீமை குன்ற வாய்த்த தெய்வ மார்க்கமே
  • அமிழ்தம் அவனது மொழியாகும், அன்பே அவனது வழியாகும்

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழ்தம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ

No comments:

Powered by Blogger.