முடியரசன் முடியரசன் மேற்கோள்கள்: MUDIYARASAN QUOTES IN TAMIL | MUDIYARASAN THOUGHTS IN TAMIL: முடியரசன் (அக்டோபர் 07, 1920 – டிசம்பர் 03, 1996) தேனி மாவட்டத்தில் பெரியகுளம் என்னும் ஊரில் சுப்பராயலு – சீதாலட்சுமிக்கு அக்டோபர் 07, 1920 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் துரைராசு. இவர் மீனாட்சி சுந்தரனார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். பூங்கோடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். சிறந்த தொடர்கள் ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னை மொழி பேசுவதற்கு நாணுகின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி? இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும் மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள் வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர் பிணவினையில் தமிழுண்டோ காசுக்குப் பாடுபவன் கவிஞன்
Comments
Post a Comment