Ads Top

LOVE QUOTES IN TAMIL / LOVE KAVITHAI IN TAMIL / காதல் மேற்கோள்கள் / காதல் கவிதை

 LOVE QUOTES IN TAMIL / LOVE KAVITHAI IN TAMIL / காதல் மேற்கோள்கள் / காதல் கவிதை

LOVE QUOTES IN TAMIL / LOVE KAVITHAI IN TAMIL / காதல் மேற்கோள்கள் / காதல் கவிதை

என் வாழ்வின் பாதி நான் என்று
பார்க்கும் போதெல்லாம்
சொல்லிக் கொண்டே இருப்பாய்..
அப்போது தெரியவில்லை
இப்போது தான் தெரிகிறது
என்னை பாதியிலேயே
விட்டு சென்ற போது..
நீ சொன்ன பாதி இதுதானோ என்று..!
வார்த்தையால் வாழ்க்கை இழந்தவர்கள்
வானத்து நட்சத்திரம் போல
என்னில் அடங்காதவர்கள்.
உன்னை நேசிக்கும் அன்பை
நீ உதறி சென்றால் அதன் வலி
என்னவென்று உனக்கு தெரியாது..
நீ நேசித்து செல்லும் இதயம்
உன்னை உதறிவிட்டு செல்லும்
போதுதான் அந்த வலி
உனக்கு புரியும்..
நீ திருப்பி வரும் வரை
நீ உதறி சென்ற இதயம்
உனக்காக அங்கேயே காத்திருக்கும்
உந்தன் அன்புக்காக..
அதுதான் உண்மையான அன்பு.
ஒவ்வொரு நாளும்
உன்னிடம் பேசி விட்டு
ஒரு நிமிடம் உன்னிடம்
பேசாமல் இருந்தால்
என் இதய துடிப்பு கூட
என்னை மதிக்காமல்
உன்னை போலவே
பேசாமல் இருக்கிறது.
பிரிந்து செல்ல தான் வந்தோம்
இருந்தாலும் இடையே
சில உறவுகளால் பிணைக்கப்பட்டோம்
பிரிவு என்பது எழுதி இருந்தாலும்
அதை ஏற்றுக் கொள்ள
மனமானது தடுமாறுகிறது.
மீண்டும் மீண்டும் மறக்க மட்டுமே
நினைக்கிறேன் முடியவில்லை
மறக்கப்போகிறேன் என்றே தினமும்
உன்னை நினைத்து விடுகிறேன்
நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
உன்னை மறக்க உன் காதல்
வெறும் நினைவல்ல
உன்னை மறக்காமல்
நினைக்க வைக்கும்
என் மனதே உன் காதல்.
ஆறாத ரணங்கள் அவ்வப்போது
காட்சிகளாக கண்முன்னே
வந்து நிற்கிறது..
மறந்து விட தான் நினைக்கிறன்
ஆனாலும் அதிகமாக நினைவில்
வலம் வருவதே அதுதான்
இறந்தகாலம் இரக்கம் இல்லாமல்
என்னை வதைக்கிறது.
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன்
என் காதலை கரை சேர்க்க
வழி தெரியாமல்.
பிரிந்தாலும் ஒரு முறையாவது
உன்னைப் பார்க்கவே
உயிரோடு இருக்கிறேன்
உன்னைப் பார்க்க முடியாது
என்றால் இறந்து மீண்டும்
பிறந்து வருவேன்
உன்னைப் பார்க்க.
நான் உன்னைப் பிரிந்து
காதல் வலியோடு இருக்கிறேன்
என்று யாருக்கும் தெரியாது
அந்த காதல் வலியிலும்
உன்னை நினைத்தே வாழ்கிறேன்
என்று உனக்கே தெரியாது
என்னாலும் என்னை
மாற்றிக் கொள்ள முடியாது.
ஏதோ ஒன்று இழந்தது போல
எப்போதும் எதையாவது மனமானது
தேடி அலைகிறது
வெறுப்பாய் வாழ்ந்து வரும் வாழ்வில்
இதுபோன்று நெருப்பாய் சுடும்
நிமிடங்கள் சிலநேரங்களில்
வந்து செல்கிறது.
சருகான நினைவுகள்
மறக்க நினைத்தாலும்
வாழ்ந்த இடத்தின் வடு அழியாமல்
அப்படியே இருக்கும்..
நினைவுகள் சருகானாலும்
நிஜம் சருகாவதில்லை.
நீ தான் என் உயிர் என்று சொன்னாய்
நான் மகிழ்ந்தேன் அன்று..
மற்றொருவரை காண்பித்து இவர்தான்
என் உயிர் என்றாய் நான்
மரணித்து போனேன் இன்று..
காதலே வேண்டாம் என்றிருந்தேன் அன்று..
மரண வலியை தந்து சென்றாய் இன்று.
நீ என்னைப் பார்க்கும் போது
உன் எதிரில் நிற்க கூட என்னால்
முடியவில்லை
உன் காதல் பிரிவால்
என் விழியில் வரும் கண்ணீரையும்
என்னால் நிறுத்த முடியவில்லை.
ஒரு தடவை நீ என்னைப் பார்க்காமல்
போகும் போதே என் இதயத்துடிப்பு
சில நொடி நின்று துடிக்கிறது
நீ என்னை பிரிந்து சென்றால்.??
கண்களோடு சண்டை போட்டு
கண்ணீரோடு கரையும் நினைவுகள்
என்னை நீங்கி உன்னை
தழுவாமல் சென்றது ஏனோ.
பிறந்ததில் இருந்து இறப்பை நோக்கி
நான் சென்றாலும் நான் இறந்தாலும்
என்னை நினைத்து வாழும்
ஒரு பெண் இருப்பால் அது நீயே
உன்னைப் பிரிந்தாலும் என் காதல்
நீ என்பது உண்மையே.
என் காதலி நான் உன்னிடம்
ஒன்று மட்டுமே கேட்கிறேன்
என் காதலுக்கு
நீ பிரிவே முடிவாக கொடுத்தாலும்
நான் உன்னை நினைப்பதற்கு..
உன்னை காதலிப்பதற்கு
முடிவைக் கொடுத்து விடாதே
என்னை உயிரோடு கொன்று விடாதே.
என்னை பிரிந்தாலும் மறந்தாலும்
காதல் என்பதை நீ நினைக்கும்
ஒவ்வொரு கணமும் என்றும்
உன்னுடன் இருப்பேன்
நீ மறந்து போன காதலாக.
தூங்கும் முன்பு கண்களை மூடினாலும்
கனவில் வந்து உன்னுடன் வாழ்ந்த
அந்த நாட்களை என்னை
தொல்லை செய்கிறது..
என்னை தூங்க விடாமல் ஒவ்வொரு நாளும்
எனக்கு மரண வலி தருகிறது
ஒவ்வொரு நாளும் என்னை
தனிமையில் கொல்கிறது
உன் நினைவுகள்.
காதல் இல்லாத வாழ்க்கை மலர்கிறது அல்லது பழம் இல்லாத மரம் போன்றது.
உங்கள் நாள் எவ்வளவு இருட்டாக இருந்தாலும், உங்கள் பங்குதாரர் உங்கள் இதயத்தை ஒளிரச் செய்தால், இவை அவர்களுக்கு சரியான காதல் மேற்கோள்கள்
நேசிப்பதை விட நேசிப்பதும் இழப்பதும் நல்லது.
காதல் ஒரு வைரஸ் போன்றது. இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
காதல் என்பது நீங்கள் உணருவது மட்டுமல்ல, நீங்கள் செய்வதுதான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்.
என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை நேசித்தேன்; உங்களைக் கண்டுபிடிக்க எனக்கு நீண்ட நேரம் பிடித்தது.
என்னால் காத்திருக்க முடியாது … என் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் செலவிட.
ஒருபோதும் நேசிக்காததை விட நேசித்த மற்றும் இழந்திருப்பது நல்லது.
நாம் தகுதியானவர்கள் என்று நினைக்கும் அன்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
உன்னால் செய்தேன் என்பதை விட, உனக்காக செய்தேன் என்பது தான் உச்சக்கட்ட மகிழ்ச்சி!
உடல்களால் ஒன்றோடு ஒன்றிணைவதெல்லாம் காதல் என்பதில்லை, உணர்வுகளால் இதயத்தில் நன்றாக புரிந்துகொள்தலே மெய்க்காதலாகும்!
ஆணுக்கு ஓர் மடியும், பெண்னுக்கு ஓர் தோளும் போதும், இருவரின் வாழ்கையும் முழுமை அடைய.
காதல் ஒரு கூடை; அது அன்பு மலர்களையும் பாசக் கனிகளையும் சுமக்கும்!
பல காலங்கள் கடந்தும் கூட இன்று வரை காலாவதி ஆகாமல் இருந்து கொண்டு இருப்பது காதல் என்ற ஒன்று மட்டுமே!
நீ சிரித்தது கொஞ்சம்... அதில் சிதரியது என் நெஞ்சம்... மீண்டும் பார்க்க மனம் கெஞ்சும்... அதை பார்க்காத போது ஏமாற்றமே மிஞ்சும்!

No comments:

Powered by Blogger.