- ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குடும்பம், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் பல இதர செலவுகளுக்காக சம்பாதிக்கும் பணத்தை தங்களது இளமைக்காலத்தில் செலவழித்து விடுவார்கள்.
- பெற்றோர்களின் கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு எதிர்கால பிரச்சனைகளை சற்றும் யோசிக்க மாட்டார்கள். குறிப்பாக வயதானக் காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல் இருக்கும் போது நமக்கென்று ஏதாவது ஒன்று சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
- ஆனால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்குக் கவலையில்லை என்றாலும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை என்பது கேள்விக்குறித் தான்.
- இந்நிலையில் இதுப்போன்ற தொழிலாளர்களின் நிலையை மனதில் வைத்து மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- ஓய்வூதிய காலத்தில் நிலையான ஒரு தொகையை பென்ஷனாக வழங்கும் திட்டமாக உள்ளது. எப்படி முதலீடு செய்ய வேண்டும்? வயது வரம்பு? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்..
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர விரும்பும் நபர்களுக்கு குறைந்த பட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும்.
- உங்களது வயது சரியாக இருக்கும் பட்சத்தில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்க வேண்டும். இதை நீங்கள் தொடங்குவதற்கு முன்னதாக வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை அவசியம் இருக்க வேண்டும்.
- இதோடு, இந்தத் திட்டத்தில் சேர நீங்கள் நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை.. ஆன்லைன் மூலமாக பென்ஷன் திட்டத்தில் நீங்கள் இணைந்துக் கொள்ளலாம். மற்ற பென்ஷன் திட்டங்களைப் போன்று நீங்கள் அதிகளவில் பணம் செலுத்த வேண்டியிருக்காது.
- தினமும் ரூ. 7 என்ற விகிதம் மாதம் ரூ. 210 செலுத்தினால் நீங்கள் பென்சனாக ரூபாய் 5 ஆயிரம் வரை பெற முடியும். நீங்கள் தரக்கூடிய மாதாந்திர பங்களிப்புகளைப் பொறுத்து, ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 1000, ரூ. 2ஆயிரம், ரூ. 3ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என 60 வயதில் பணத்தைப் பெற முடியும்.
- இந்த திட்டத்திற்கு செலுத்தக்கூடிய மாதாந்திர முதலீட்டுப் பணம் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இருக்கிறது.
- எனவே நீங்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி உங்களுடைய பணத்தை நீங்கள் டெபாசிட் செய்துக் கொள்ளலாம். ஒருவேளை சந்தாதாரருக்கு மரணம் ஏற்பட்டால், அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- ஒருவேளை இவர்கள் இருவருமே இறந்துவிடும் பட்சத்தில், அவர்களது நாமினிக்கு முழு ஓய்வூதிய கார்பஸ் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.
ரூ.7 முதலீடு செய்தால் ரூ. 5000/- வரை பென்சன்
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
February 05, 2024
Rating:
5
No comments: