Ads Top

கறிவேப்பிலை குழம்பு ரெசிபி / KARUVEPPILAI KUZHAMBU RECEIPE IN TAMIL

KARUVEPPILAI KUZHAMBU RECEIPE IN TAMIL
  • கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். இது, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
  • அந்தவகையில், கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல அடங்கிய கறிவேப்பிலை கொண்டு சுவையான மசாலா குழம்பு ஒன்றை செய்வது எப்படி என இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை - 1 கட்டு.
  • கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்.
  • மிளகு - 10.
  • காய்ந்த மிளகாய் - 2.
  • உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்.
  • துவரம் பருப்பு - ஒரு ஸ்பூன்.
  • கடுகு - 1/2 ஸ்பூன்.
  • சீரகம் - ஒரு ஸ்பூன்.
  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு.
  • நல்லெண்ணெய் - 100 மில்லி.
  • உப்பு - 1 ஸ்பூன்.
  • கொத்தமல்லி தழை - 1 கொத்து.

செய்முறை

  • முதலில், கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், இதில் உறுவி வைத்துள்ள கறிவேப்பிலை தழைகளை சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • தற்போது, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  • பின்னர் இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக்கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து பொடியாக அரைத்து, தண்ணீர் சேர்த்து மசாலா கரைசல் தயார் செய்யவும்.
  • இதனிடையே ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியினை ஒரு கோப்பையில் தண்ணீருடன் சேர்த்து ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • தற்போது கறிவேப்பிலை குழம்பு தயார் செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர் இதனுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலா கரைசல் மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். முதல் கொதி வந்துதும் இதில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கிவிட, கறிவேப்பிலை மசாலா குழம்பு ரெடி

No comments:

Powered by Blogger.