Ads Top

மலச்சிக்கலை போக்கும் சிவப்பு பசலை கீரை மசியல் ரெசிபி / RED PASALAI KEERAI MASIYAL RECEIPE

RED PASALAI KEERAI MASIYAL RECEIPE
  • அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க நமது உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இந்த கீரையில் எப்படி மசியல் செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

  • சுத்தம் செய்த சிவப்பு பசலைக்கீரை - 4 கப்
  • சாம்பார் வெங்காயம் - 1/2 கப்
  • பூண்டு - 5 பல்
  • பச்சை மிளகாய் - 5
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • ஒரு வற்றல் மிளகாய்
  • எண்ணை அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • சிவப்பு பசலை

செய்முறை

  • முதலில் சிவப்பு கொடிப்பசலை கீரையின் இலைகளை எடுத்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கால் கப் சாம்பார் வெங்காயம் சேர்த்து, கொதிக்கும் போது, சுத்தம் செய்துள்ள கீரையை சேர்த்து, கொஞ்சம் வேக வைக்கவும்.
  • கடாயில் எண்ணை சேர்த்து, சூடானதும் வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகும் கீரையில் சேர்க்கவும்.
  • இரண்டு நிமிடங்கள் விட்டு, வேறு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், பூண்டு, வெங்காயம், வற்றல் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி சேர்த்து கலந்து இறக்கவும்.
  • சூடேறியவுடன், உப்பு சேர்த்து பருப்பு மத்து வைத்து நன்கு மசிக்கவும். ஹேண்ட் ப்ளேண்டர் வைத்தும் மசிக்கலாம்.
  • இப்போது சுவையான சிவப்பு பசலை கீரை மசியல் ரெடி.
  • பூண்டு, சாம்பார் வெங்காயம் சேர்க்கப்பட்டுள்ளதால் கருவுற்ற பெண்களுக்கு மிகவும் சிறந்த உணவு. இது சாதத்துடன் கொஞ்சம் நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:

Powered by Blogger.