Ads Top

இரண்டாவது கோடு மெலிதாக தெரிந்தால் கர்ப்பமா? இல்லையா? / HOW TO USE PREGNANCY TEST KIT?

HOW TO USE PREGNANCY TEST KIT?
  • கர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களுக்கு சிறிது நாட்கள் தள்ளிப்போனாலே போதும். உடனே பிரகனன்சி டெஸ்ட் கிட் (pregnancy test kit) வாங்கி, கர்ப்பமாக உள்ளோமா?
  • என பலரும் வீட்டிலேயே பரிசோதிப்பர்; பின்னர் தான் டாக்டரிடமே செல்வர். பரிசோதனையில், ஒரு கோடு வந்தால் கர்ப்பமாக இல்லை; இரண்டு கோடு வந்தால் கர்ப்பம் என எளிதாக கண்டுபிடிக்கின்றனர். 
  • ஆனால், இரண்டுக்கும் நடுவே ஒருசில நேரங்களில் இரண்டாவது கோடு மிகவும் மெலிதாக மங்கலாக தெரியும்போது, பலத்த குழப்பம் ஏற்படக்கூடும். 
  • ஒரு கோடு வழக்கம்போல் தடிமனாகவும், மறுகோடு மெலிதாகவும் இருந்தால் ஃபெயின்ட் லைன் பிரக்னன்சி (faint line on pregnancy) என குறிப்பிடப்படுகிறது.
  • பிரகனன்சி டெஸ்ட் கிட் வாங்கியவுடனேயே, முதலில் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளும் போது தவறான முடிவை காட்ட வாய்ப்புள்ளது. 
  • டெஸ்ட் கிட்டில் ஆங்கில எழுத்தில் சி (கன்ட்ரோல்) மற்றும் டி (டெஸ்ட்) என இரு கோடுகள் இருக்கும். உங்களின் சிறுநீர் துளிகளை வைத்து பரிசோதிக்கும் போது முதலில் இந்த 'சி' யில் தான் முதல் கோடு வரக்கூடும்.
  • இது பரிசோதனை மேற்கொண்ட ஐந்து நிமிடங்களுக்குள் பளீரென கோடு வர வேண்டும். அப்போது இந்த கார்டு தரமாக உள்ளதாக அர்த்தம். பரிசோதனையில் 'டி' என்ற காலத்தில் கோடு வந்தால் கர்ப்பமாக இருப்பதாகவும், கோடு வராவிட்டால் தற்போது கர்ப்பமாக இல்லை எனவும் அர்த்தமாகும். 
  • ஆனால் ஒருசில நேரங்களில் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இரண்டாவது காலத்தில் கோடு மெலிதாக மங்கலான நிலையில் தெரியக்கூடும்.
  • மருத்துவத்தில் இது வீக்லி பாசிட்டிவ் பிரக்னன்சி (weakly positive pregnancy) என குறிப்பிடப்படுகிறது. அதாவது கர்ப்பமாக இருக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. 
  • எனவே, கர்ப்பத்தை உறுதியாக கூற முடியாது. மாதவிடாய் சுழற்சி ரெகுலராக இருப்பவர்கள், கடைசி மாதவிடாய் முடிந்த 35 முதல் 40 நாட்களுக்குப் பின் வீட்டில் பரிசோதனை செய்து பார்க்கலாம்.
  • ஆனால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு முன்னதாகவே பரிசோதனை மேற்கொள்ளும் போது இதுபோன்ற மெலிதான கோடு தெரியக்கூடிய வாய்ப்புள்ளது. 
  • ஒருவர் கர்ப்பமடைந்தவுடன் உடலில் ஹெச்.சி.ஜி., (HCG) ஹார்மோன் உற்பத்தி துவங்குகிறது. கரு வளர்ச்சி அடையும் போது, இந்த ஹார்மோன் அளவும் அதிகரிக்கிறது. சிறுநீரில் போதியளவு ஹெச்.சி.ஜி., இருந்தால் மட்டுமே அடர் பிங்க் நிறத்தில் கோடு பளீரென தெரியக்கூடும்.
  • முன்னதாகவே பரிசோதிக்கும் போது ஹெச்.சி.ஜி., அளவு மாறுபடுவதால் கோடு மங்கலாகத் தெரியக்கூடும். இதுபோன்ற சூழலில் மேலும் 10 நாட்கள் காத்திருந்து பின்னர் பரிசோதிக்கலாம். 
  • அதேவேளையில் இரண்டு கோடுகளும் மங்கலாக தெரிந்தால் மீண்டும் புதிதாக கார்டு வாங்கி பரிசோதிக்க வேண்டும். தொடர்ந்து, டாக்டரிடம் கலந்தாலோசித்தால் ரத்தப்பரிசோதனை மூலமாக எளிதாக தெளிவு பெறலாம்.
  • எதிர்பாராத நிலையில் ஒருசிலருக்கு அபார்ஷனுக்கு பின்னர், இரு வாரங்கள் கழித்து பரிசோதிக்கும் போது இரு கோடுகள் வர வாய்ப்புள்ளது. 
  • அபார்ஷன் நடந்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு, குறைந்தப்பட்சமாக ஒரு மாதத்துக்காவது உடலில் கர்ப்ப கால ஹார்மோன்கள் இருக்கக்கூடும். எனவே, நாம் கர்ப்பமாக இருக்கிறோமா என சந்தேகிக்காமல், டாக்டர் அட்வைஸின் படி நடக்க வேண்டும்.

No comments:

Powered by Blogger.