Ads Top

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருப்பு பூண்டு / BENEFITS OF BLACK GARLIC IN TAMIL

BENEFITS OF BLACK GARLIC IN TAMIL

BENEFITS OF BLACK GARLIC IN TAMIL: உணவில் தொடர்ந்து பூண்டை எடுத்துக்கொள்ளும் போது, பலவித நன்மைகளை பெறலாம். தாய்ப்பால் விருத்தி, உடல் சக்தியை அதிகரிப்பது, வியர்வை பெருக்கம் உள்ளிட்ட ஆரோக்கிய பலன்களைப் பெறலாம்.

பூண்டைத் தவிர்த்து இந்திய சமையலை வரையறுக்கவும் முடியாது. பூண்டும் உணவில் மட்டுமல்லாமல், இயற்கை மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.மருத்துவ குணம் நிறைந்த பூண்டை, நாம் வெள்ளை கலரில் தான் பார்த்திருப்போம். 

ஆனால் கருப்பு நிறத்திலும் பூண்டு உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஆம் கருப்பு நிற பூண்டு, வெள்ளை நிற பூண்டை விட ஆரோக்கிய பலன்களை அதிகம் கொண்டுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த கருப்பு பூண்டு எவ்வாறு உருவாகிறது, இதன் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும்.கருப்பு பூண்டு கருப்பு பூண்டை தனியாக விளைவிக்க முடியாது. 

வெள்ளை பூண்டைத் தான் நொதித்தல் முறையில் கருப்பு பூண்டாக மாற்றப்படுகிறது. 60டிகிரி வெப்பநிலையில், கட்டுப்படுத்தப்பட்ட ஈரப்பத்தில், 2-3 வாரங்களுக்கு வெள்ளை பூண்டை வைக்கும் போது, பூண்டு பற்கள் கருப்பு நிறத்தில் மாறும். ஆனால் தோலில் எந்த வித்தியாசமும் தெரியாது.

இது நொதித்த பூண்டு, புளித்த பூண்டு என்று அழைக்கப்படுகிறது. இப்படி செய்யும் போது, சாதாரண பூண்டை விட அதிக மருத்துவ குணம் கொண்டாக மாறுகிறது.சத்துகள் நொதித்தல் முறைக்கு உட்படுத்தப்படுவதால் இதில் தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது.  மேலும் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்காய்டுகளும் உள்ளன.

பயன்கள் 

  • BENEFITS OF BLACK GARLIC IN TAMIL: இந்த கருப்பு பூண்டுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செல் பாதிப்பைத் தடுக்கும்.
  • வயிற்றுப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்து புற்றுநோய் ஒவ்வாமையைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
  • கல்லீரலைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
  • மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

No comments:

Powered by Blogger.