Ads Top

இன்னா நாற்பது, இனியவை நாற்பது & சிறுபஞ்சமூலம் / INNA NARPATHU, INIYAVAI NARPATHU & SIRUPANJAMOOLAM

இன்னா நாற்பது, இனியவை நாற்பது & சிறுபஞ்சமூலம் / INNA NARPATHU, INIYAVAI NARPATHU & SIRUPANJAMOOLAM

இன்னா நாற்பது

  • நாற்பது என்னும் எண்
    தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும்
    முறையே அகம், புறம் பற்றியவை.
  • இன்னா நாற்பதும், இனியவை
    நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம்
    தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன.
  • ஆசிரியர் = கபிலர்
  • பாடல்கள் = 1 + 40 =
    41
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை
    = அறம்

பெயர்க்காரணம்

  • இன்னா = துன்பம், இன்னது
    இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது.

கடவுள் வாழ்த்து

  • கடவுள் வாழ்த்தில் சிவன்,
    பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.

பொதுவான குறிப்புகள்

  • இந்நூல் துன்பம் கொடுக்கும்
    செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
  • கபிலரிடம் சைவ, வைணவ
    பேதம் இல்லை.
  • இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு
    உரியது.
  • மெல்லிய சில சொற்களால்
    தொகுக்கப்பட்டு அடியளவு குறைந்துள்ள செய்யுள் அம்மை எனப்படும்.
  • சொல் அமைதியலோ, ஓசை அமைதியிலோ
    வருவதால் அம்மை எனப்பட்டது.
  • இந்நூலில் 164 இன்னாத
    செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • கபிலரிடம் சைவவைணவ பேதம்
    இல்லை.
  • உலகத்தில் கூடாதவை என்னென்ன
    என்று எடுத்துரைப்பது

ஐந்து கபிலர்

  • சங்க கால கபிலரும், இவரும்
    வேறு வேறு.
  • பாரி மன்னனை பாடிய சங்கக்
    கபிலர்.
  • இன்னா நாற்பது பாடிய
    கபிலர்.
  • பதினொன்றாம் திருமுறையில்
    கூறப்படும் கபிலதேவநாயனார்.
  • பன்னிரு பாட்டிலில் சில
    பாடல்களை பாடிய கபிலர்.
  • அகவற்பா பாடிய கபிலர்.

முக்கிய அடிகள்

  • உண்ணாது வைக்கும் பெரும்பொருள்
    வைப்புஇன்னா - உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம்
  • தீமையுடையார் அருகில்
    இருத்தல் இன்னா - தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும்
  • ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல்
    முன்னின்னா - உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும்
  • குழவிகள் உற்றபிணி இன்னா
    - குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும்
  • இன்னா பொருள் இல்லார்
    வண்மை புரிவு - பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்
  • ஆன்றவித்த சான்றோருட்
    பேதை புகலின்னா
  • மான்றிருண்ட போழ்தின்
    வழங்கல் பெரிதின்னா
  • நோன்றவிந்து வாழாதார்
    நோன்பின்னா வாங்கின்னா
  • ஈன்றாளை யோம்பா விடல்

இனியவை நாற்பது

  • பாடல்கள் = 1 + 40 =
    41
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை
    = அறம்
  • இந்நூலில் மொத்தம்
    124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • இனிய 3  பொருள்கள் 
    - 36
  • இனிய 4  பொருள்கள் 
    - 04
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு
    நூல்களுள் ஒன்று.
  • நன்மைதரும் இனிய கருத்துகளை
    நாற்பதுப் பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஒவ்வொரு பாடலும் மூன்று
    அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
  • பெண்ணை இழிவுபடுத்தி
    நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
  • இவற்றுள், 'ஊரும் கலிமா'
    எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா.
  • ஏனைய அனைத்தும் இன்னிசை
    வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது.
  • இந்நூலில் நான்கு இனிய
    பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன (1, 3, 4, 5). எஞ்சிய
    எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன;
  • இவற்றில் எல்லாம் முன்
    இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை
    கவனிக்கத் தக்கது.

கடவுள் வாழ்த்து

  • சிவன், திருமால், பிரம்மன்
    ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.

ஆசிரியர் குறிப்பு

  • பெயர் - மதுரைத் தமிழாசிரியர்
    மகனார் பூதந்சேந்தனார்
  • ஊர் – மதுரை
  • காலம் - கி.பி. இரண்டாம்
    நூற்றாண்டு
  • இவர் தந்தையார் மதுரைத்
    தமிழாசிரியர் பூதன்.
  • இவர் வாழ்ந்த நாடு பாண்டி
    நாடு.
  • இவர் சிவன், திருமால்,
    பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார்.
  • ஆதலால் இவரின் சமயம்
    வைதீகமாகும்.
  • இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க
    வேண்டும் எனக் கருதப்படுகிறது.
  • இவர் பிரமனைத் துதித்திருப்பதால்
    கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை
    அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம்.

சிறுபஞ்சமூலம்

  • பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102 = 104
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை
    = அறம்

ஆசிரியர் குறிப்பு

  • பெயர் – காரியாசான்
  • காரி என்பது
    இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
  • மாக்காரியாசான்
    என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
  • மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் என சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
  • இவரும் கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணக்கராவர்.
  • பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்குருத்துகளும் இந்நூலில்
    இடம் பெற்றுள்ளன.

பெயர்க்காரணம்

  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து
    மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.

நூல் குறிப்பு

  • தமிழில்
    சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு
    எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம், ஐந்து சிறிய வேர்கள்
    என்பது இதன் பொருள்.
  • அவை
    கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால்
    ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள
    ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய்
    அமைந்துள்ளன.
    ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
  • இப்பாடல்கள்
    நன்மை தருவன. தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை
    எடுத்துக்காட்டுகின்றன.
  • கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றெழு வெண்பாக்கள் உள்ளன.
  • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் à பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
  • சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை வில்வம், பெருங்குமிழ்,
    பாதிரி, தழுதாழை, வாகை
  • காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின்
    ஒரு சாலை மாணவர்கள்.
  • இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
  • சிறுபஞ்சமூலத்தின்
    பாடலில் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது போல, ஒரு பாடலில் மூன்று, ஆறு
    கருத்துகளைக் கொண்ட அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் அமைந்துள்ளன.

மேற்கோள்

  • நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு - நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே
    அழகு.
  • பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு - பேதைக்கு = முட்டாளுக்கு, உரைத்தாலும்
    = எவ்வளவு சொன்னாலும், செல்லாது உணர்வு = மண்டையில் ஏறாது
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
  • கண்ணுக்கு அழகு கண்ணோட்டம் கொள்ளும் இரக்க உணர்வை வெளிப்படுத்துதல். காலுக்கு
    அழகு அடுத்தவன் மனையாளை விரும்பிச் செல்லாமை.
  • எண் கணக்குக்கு அழகு கூட்டியும் கழித்தும் பெருக்கியும் வகுத்தும் இத்துணை ஆகிறது
    என்று சொல்லுதல்.
  • பண்ணிசைக்கு அழகு கேட்டவர் நன்று என்று பாராட்டல். வேந்தனுக்கு அழகு தன் நாட்டு
    மக்களை வாட்டாமல் மகிழ்வுடன் வைத்திருக்கிறான் என்று பலரும் சொல்லக் கேட்டல்.

சொற்பொருள்

  • கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
  • எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
  • வேந்தன் - அரசன்
  • வனப்பு - அழகு
  • கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன்
  • வாட்டான் - வருத்தமாட்டான்

இலக்கணக்குறிப்பு

  • கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
  • கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்

அறிவுடையார் தாமே
உணர்வர்

பூவாது
காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்
மூவாது
மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை
நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை
செல்லும் உணர்வு (பா.எண்: 22)







































































































































































































































No comments:

Powered by Blogger.