Ads Top

களவழி நாற்பது & கார் நாற்பது / KALAVAZHI NARPATHU & KAAR NARPATHU

களவழி நாற்பது & கார் நாற்பது / KALAVAZHI NARPATHU & KAAR NARPATHU

களவழி நாற்பது

  • ஆசிரியர் = பொய்கையார்
  • பாடல் = 40
  • திணை = புறத்திணை – வாகைத்திணை
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = புறம்
  • கழுமலம் எனும் இடத்தில் போர்
  • சோழன் செங்கனானோடு – வெற்றி
  • சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறையை மீட்கும் பொருட்டு பாடியது
  • பரணியின் அடிப்படை நால்
  • கார்த்திகை விழா

பெயர்க்காரணம்

  • களம் = போர்க்களம்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே
    நூல் களவழி நாற்பது.
  • சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில்
    இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல்.
  • இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற
    போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல்
    எனக் கருதப்படுகின்றது.
  • இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது
    படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.
  • இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது
    அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.
  • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • இதனை தொல்காப்பியம்,
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்
தொல்காப்பியம்

வேறு பெயர்

  • பரணி நூலின் தோற்றுவாய்

களவழி

  • நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'.
    பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி' தேரோர் களவழியைப் பாடும் நூல்
    களவழி நாற்பது.
  • இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது. கழுமத்தில் நடைபெற்ற
    போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது.
  • சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான்
    என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச்
    சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.

போர்க்களம்

  • போர் 'திருப்பூர்' என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு
    தெரிவிக்கிறது.
  • களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக்
    குறிப்பிடுகின்றனர்.
  • புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
  • களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்

எடுத்துக்காட்டு

  • சினங்கொண்ட சோழன் செங்கணான் போர் புரிகின்ற களத்திலே, தச்சனுடைய தொழிற்சாலையில்
    பொருட்கள் இறைந்து கிடப்பதைப்போல, கொலைவெறி கொண்டு பாய்கின்ற யானைகள் புகுந்த இடமெல்லாம்
    பிணங்கள் விழுந்து கிடக்கின்றன என்னும் பொருள்படுவது கீழே காணப்படும் பாடல்.
கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்
சினமால் பொருத களத்து

சோழனைக் குறிக்கும்
தொடர்மொழிகள்

புனல் நாடன் நீர் நாடன் காவிரி நாடன் காவிரி நீர்நாடன்
செங்கண்மால் செங்கண் சினமால்
செம்பியன் புனை கழற்கால் செம்பியன் கொடித் திண்தேர் செம்பியன் திண்தேர்ச் செம்பியன்
சேய் செரு மொய்ம்பின் சேய் பைம்பூண் சேய்

பொதுவான குறிப்புகள்

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
  • சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் = போர்ப்புறம்
    (கழுமலம்)
  • சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் = குடவாயில் கோட்டம்
  • சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
  • நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம் தெரிவித்தான்.
  • ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி உயிர் விட்டான்.

சேரமான் புறநானூற்றில்
பாடிய பாடல்

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே
  • இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
  • களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது தொல்காப்பியர்
    கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.

முக்கிய அடிகள்

  • கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு
  • வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்
  • கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
  • சினமால் பொறுத்த களத்து

கார் நாற்பது

  • ஆசிரியர் = மதுரைக் கன்னங் கூத்தனார்
  • பாடல்கள் = 40 (அகநூல்களில் அளவில் சிறியது)
  • திணை = அகத்திணை – முல்லைத்திணை
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை
    = அ
    ம்
  • கார் காலம் பற்றிய நூல்
  • முல்லை திணைக்குரிய முதல், கரு (ம) உரிப்பொருள்களை பெற்றுள்ளது

பெயர்க்காரணம்

  • கார் = கார் காலம், மழைக்காலம்

பொதுவான குறிப்புகள்

  • கார் நாற்பது நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை.
  • இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர் என்பர்.
  • சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
  • நூலில் கூறப்படும் துறை = வினைமேற் சென்று திரும்பும் தலைவன் பாகனோடு பேசி விரைந்து
    வருதல்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை (முல்லை) மட்டும் பாடிய நூல்.
  • நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் இந்நூலில் மேற்கோள் சான்று காட்டியுள்ளார்.
  • அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல்.
  • கார்காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
  • முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது.
  • முல்லை நிலத்தின் முதல் கரு உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.
  • பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர்
    சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப்
    பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.
  • கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும்,
    தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந்நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.

முக்கிய அடிகள்

செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்என்ற காடு
தூதோடு வந்த மழை
பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி
வாடும் பசலை மருந்து
 
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை
  • கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள்
    ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின்
    வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந்நூற் பாடல் இது.



























































































































































































































No comments:

Powered by Blogger.