Ads Top

ந.பிச்சமூர்த்தி / PICHAMOORTHY HISTORY IN TAMIL

ந.பிச்சமூர்த்தி / PICHAMOORTHY HISTORY IN TAMIL
 • ந.பிச்சமூர்த்தி
  (15.08.1900 – 04.12.1976) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள்க்கு
  15.08.1900 அன்று பிறந்தார்.
 • இவருடைய இயற்பெயர் ந.வேங்கட
  மகாலிங்கம்.
 • To Know more about - Athipazham Benefits in Tamil
 • தத்துவார்த்தம் பிணைந்த
  கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.
 • தமிழ்ப் புதுக்கவிதையின்
  தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி.

வாழ்க்கை

 • பிச்சமூர்த்தி கும்பகோணத்தில்
  தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
 • தத்துவத்தில் பட்டம்
  பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
 • 1925 முதல் 1938 வரை
  வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப்
  பணிபுரிந்தார்.
 • பிச்சமூர்த்தி, நவ இந்தியா
  பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார்.
 • இவரின் எழுத்துக்கள்
  சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கின.
 • இந்தத் தத்துவ மரபில்
  வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது.
 • "இலக்கியமும் நம்மைப்
  போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..."
  என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாக வே.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
  வெளிப்பட்டன.
 • புதிய படைப்புச் சூழலில்
  மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
 • பாரதியாரின் வசன கவிதையைத்
  தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
 • எனவே, அவர் புதுக்கவிதையின்
  தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
 • புதுக்கவிதையை
  "இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை
  என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
 • ந. பிச்சமூர்த்தி தொடக்க
  காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும்
  பணியாற்றினார் ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.
 • இவர் புதுக்கவிதை, சிறுகதை,
  ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் முதல் சிறுகதை
  - 'ஸயன்ஸூக்கு பலி" என்பதாகும்.
 • 1932 இல் கலைமகள் இதழ்
  வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷுஷு", ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

சிறப்பு பெயர்கள்

 • சிறுகதையின் சாதனை
 • புதுக்கவிதையின் முன்னோடி
 • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின்
  தோற்றுநர்
 • புதுக்கவிதையின் முதல்வர்
 • புதுக்கவிதை இயக்கத்தின்
  விடிவெள்ளி
 • புதுக்கவித இரட்டையர்
  – ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)

புனைப் பெயர்

 • ரேவதி
 • பிச்சு
 • ந.பி
 • படைப்புகள்

சிறுகதைகள்

 • பதினெட்டாம் பெருக்கு
 • நல்ல வீடு
 • அவனும் அவளும்
 • ஜம்பரும் வேட்டியும்
 • மாயமான்
 • ஈஸ்வர லீலை
 • மாங்காய்த் தலை
 • மோகினி
 • முள்ளும் ரோசாவும்
 • கொலுப்பொம்மை
 • ஒரு நாள்
 • கலையும் பெண்ணும்
 • இரும்பும் புரட்சியும்
 • பாம்பின் கோபம்
 • விஞ்ஞானத்திற்குப் பலி
  (முதல் சிறுகதை)
 • இரட்டை விளக்கு

புதுக்கவிதை

 • கிளிக்குஞ்சு
 • பூக்காரி
 • வழித்துணை
 • கிளிக்கூண்டு
 • காட்டுவாத்து
 • புதுக்குரல்கள் (தமிழின்
  முதல் புதுக்கவிதை தொகுதி)
 • காதல் (இவரின் முதல்
  கவிதை)
 • உயிர்மகள் (காவியம்)
 • ஆத்தூரான் மூட்டை
 • மேற்கோள்
 • வாழ்க்கைப்போர்
 • முண்டி மோதும் துணிவே
  இன்பம்
 • உயிரின் முயற்சியே வாழ்வின்
  மலர்ச்சி
 • ஜீவா! விழியை உயர்த்து
 • சூழ்வின் இருள் என்ன
  செய்யும்
 • கழகு பெற்ற வெற்றி நமக்கும்
  கூடும்

சிறந்த தொடர்கள்

 • இலக்கியமும் நம்மைப்
  போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..."
  என நம்பினார்.

பொங்கல் வழிபாடு

 • வாழ்க்கையும் காவிரி
  அதிலெங்கும் கிளிக்கூண்டு
 • நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
 • ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,
 • நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப்
  பொருளுமுண்டோ?
 • கதிரவா கனிந்து வருவாய்!
  கரும்பு மனமும் இனிபாம் உயிரும்
 • நின்னடி படைத்தது விட்டோம்
 • கதிரவா! ஏற்று மகிழ்வாய்
 • உயர்ந்தவா, உயிரின் முதலே!

சிந்தனைச் சிதறல்கள்

 • எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான்
  முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன்.
 • ஆகையால் எப்பொழுதுமே
  ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான்
  எழுதவில்லை.
 • உணர்வே என் குதிரையாகி
  விட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப்பறப்பேன். ஒரு சமயம்
  வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன்.
 • என் மனதிலும் இந்த இரண்டு
  அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
 • ஒரு பகுதி சிறகு விரித்து,
  சொல்லுக்குஎட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது.
 • இந்தப் பகுதியின் ஆட்சிக்கு
  உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன.
 • மற்றொரு பகுதி எல்லோரையும்
  போல் மண்ணில் உழலுகிறது.
 • அப்பொழுதெல்லாம்உலகின்
  இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
 • "எழுதுவது ஒரு கலைஞனுக்கு
  இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத
  பாலுணர்வின் தூண்டுதல் போல..."

பிற கவிஞர்களின் கருத்துக்கள்

 • பிச்சமூர்த்தியின் இலக்கிய
  வெளிப்பாடுகள் நிறைவறாத துறவு மோகத்தின் இன்னொரு வடிகாலாக இருந்தது – கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்
 • இயற்கையையும் வாழ்க்கை
  அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும்
  முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும்
  நூலில் வல்லிக்கண்ணன்

















































































































































































No comments:

Powered by Blogger.