Ads Top

நூக்கல் காய் மருத்துவ பயன்கள் / NOOKKAL (KOHLRABI) MEDICAL BENEFITS

  • நூக்கல் காய் மற்றும் அவற்றின் இலைகள் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியவை. இவற்றில் அதிக அளவிலான வைட்டமின்களும் தாது உப்புக்களும் காணப்படுகின்றன.
  • வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் கொண்டுள்ள இந்த தாவரத்தில் புரோட்டின் நார்ச்சத்து ஃபோலேட் கால்சியம் மக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் நிறைந்திருக்கின்றன.
  • இவற்றில் காணப்படும் குளுக்கோசினோலேட்டுகள் என்ற தாவரம் சார்ந்த வேதிப்பொருள் கேன்சர் செல்களின் செயல்பாட்டை தடுக்கிறது குறிப்பாக மார்பகப் புற்றுநோய் மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்று நோய்கள் வராமல் தடுக்க இவை பயன்படுகின்றன.
  • இவற்றில் லுடீன் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் மூலக்கூறு உள்ளது. இது நம் கண்களின் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உதவுகிறது.மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் கண்புரை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
  • இவற்றில் காணப்படும் அதிக அளவிலான கால்சியம் நம் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இந்த காயானது இதயத்திற்கு மிகவும் நல்லது இது கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு பித்த நீரையும் உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. இவற்றில் காணப்படும் அதிக அளவிலான ஃபோலேட் இதயத்தை பாதுகாப்பதோடு மாரடைப்பு வராமல் தடுக்கும்.
  • இவற்றில் காணப்படுகின்ற அதிகளவிலான வைட்டமின் சி நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது. மேலும் நார்ச்சத்துக்கள் நம் உடலின் செரிமானத்தை அதிகப்படுத்துகின்றன. 
  • மேலும் இது குறைந்த அளவிலேயே கலோரிகளை கொண்டிருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுகிறது.

No comments:

Powered by Blogger.