Ads Top

பெருங்காயம் - அருமையான மருத்துவ பயன்கள் / ASAFOETIDA (PERUNKAYAM) - MEDICAL BENEFITS

  • பெரும்பாலான பெண்கள் சமைக்கும் போது பெருங்காயத்தை பயன்படுத்தும் பழக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். உணவுகளில் சுவையூட்டுவதற்கு இதை பயன்படுத்துவார்கள்.
  • இது ஈரான், ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பளபளக்கும் பிசின் துண்டுகள் போல் இருக்கும் பெருங்காயம் தூள் செய்யப்பட்டும் விற்கப்படுகிறது.
  • ரசம், சாம்பார், காரமான உணவுகளில் பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இது ஊறுகாயிலும் பயன்படுகிறது. பெருங்காயத்தை சேர்க்கும்போது உணவில் புரதச்சத்தை மேம்படுத்துகிறது. 
  • அஜீரண கோளாறை சரி செய்து செரிமானத்திற்கு உதவுகிறது. நம் உடலில் தேங்கியுள்ள வாயுவை அகற்றும். குறிப்பாக குழந்தைகளுக்கு வாயுவை குறைக்கிறது.
  • ஜலதோஷம், ஒவ்வாமையாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவுகிறது. உடலில் இயற்கையான ஆன்டிபாடிகளின் உற்பத்தியைத் தூண்டும். இது சுவாசத்தை எளிதாக்கவும் உதவுகிறது.
  • இரத்தத்தில் உள்ள பி.எச் (PH) அளவை சீராக்குவதன் மூலம் மனித உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
  • இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு, ஆக்ஸிஜனேற்ற பண்பு ஆகியவை வயிற்று வலி, குடல் பிரச்சனை, வாயு, குடல் எரிச்சல் நோய்க்குறிகளை நீக்க உதவும்.
  • மாதவிடாய் வலியை நீக்குகிறது. ஏனெனில் இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் மாதவிடாய் பிடிப்புகள், ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. 
  • ஒரு கப் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அருந்தி குணம் பெறுங்கள். வெள்ளைப்படுதல் மற்றும் பிறப்புறுப்பு தொற்று ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும்.
  • சளி, இருமல் ஆகியவற்றை இயற்கையாகவே விடுவிக்க உதவுகிறது. வறட்டு இருமல், கக்குவான் இருமல், மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றிலிருந்து விடுபட, தேன் மற்றும் இஞ்சியுடன் பெருங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • மாதவிடாய் வலி, பல் வலி, ஒற்றைத் தலைவலி, தலைவலி தொடர்பான வலியை எதிர்த்துப் போராடுவதற்கு பெருங்காயம் உதவுகிறது.
  • உண்மையில் பெருங்காயம் வலி நிவாரணி கலவைகள் நிறைந்தது. நம் உடலில் உள்ள வலியை நீக்குகிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் பொடியை கலந்து அருந்தினால் தலைவலி, ஒற்றைத் தலைவலியை குணமாக்கும். 
  • பல்வலியால் உண்டாகும் வலிக்கு எலுமிச்சை சாறுடன், பெருங்காயத்தை பேஸ்ட் செய்து, வலியுள்ள இடத்தில் தடவவும். இந்த டிப்ஸை பயன்படுத்தி வலியில் இருந்து விடுதலை பெறுங்கள்.
வீட்டு வைத்தியம்
  • திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, இந்துப்பு போன்றவை ஒவ்வொன்றும் 10 கிராம் எடுத்து அதனுடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தையும் போட்டு தூளாக்கி கொள்ளுங்கள். 
  • இந்த பொடியை சாதத்தில் பிசைந்து அதை முதல் உருண்டை உணவாக தினமும் சாப்பிடுங்கள். 
  • அதன் பிறகு வழக்கமான உணவை சாப்பிட்டால், செரிமான கோளாறு, குடல் புண் ஆகிய வாயு தொடர்பான நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.

No comments:

Powered by Blogger.