Ads Top

நாமக்கல் கவிஞர் / NAMAKKAL KAVIGNAR

  • நாமக்கல் கவிஞர் (அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்னும் ஊரில் வேங்கடராமன் - அம்மணி அம்மாள்க்கு அக்டோபர், 19 1882 அன்று பிறந்தார்.
  • இவருடைய இயற்பெயர் வெ. இராமலிங்கனார்.
  • “கத்தியின்றி இரத்தமின்றியுத்த மொன்றுவருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
  • முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
  • தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.
  • அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • ‘தமிழனென்றுசொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக்கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இவரின் மலைக்கள்ளன் நாவல் எம்ஜிஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.
  • ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், ‘பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.
  • சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ஓவியக்கலையில் வல்லவர்.
  • இவர் செயலால் காந்தியடிகளையும், பாட்டால் பாரதியையும் தம் குருவாக ஏற்றுக்கொண்டவர்.
  • இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார். சிறு வயது முதல் ஒரு முஸ்லிம் தாயால் (பதுலா பீவி) வளர்க்கப்பட்டவர்.
  • இவர் சிறந்த ஓவியர். இவர் முதன் முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர்.
  • அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்குப் பாரத மாத முடிசூட்டுவது போல் படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
  • இவரின் பாடல்களைக் தொகுத்து வெளியிட்டவர் = தணிகை உலகநாதன்.
  • “”பலே பாண்டியா, நீர் ஒரு புலவர், ஐயமில்லை. “நாட்டுக்கும்மி” என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதி, சேலம் எஸ்.விஜயராகவ ஆச்சாரியார் முன்பு பாடி அரங்கேற்றம் செய்தார்.
  • ஆச்சாரியார் அவருக்கு “புலவர்” என்ற பட்டம் வழங்கினார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய பெற்றார். இவர் “பத்மபூஷன்” விருது பெற்றுள்ளார்.
  • தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்றுவருகுது
சத்தியத்தின்நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்
  • என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

No comments:

Powered by Blogger.