Ads Top

செல்போனில் விளம்பரம் தடை செய்வது எப்படி?

  • விளம்பரங்கள் என்றாலே யாரும் விரும்ப மாட்டார்கள்.! சில ஸ்வாரஸ்யமான விளம்பரங்கள் விதிவிலக்கு. மேலும் விளம்பரங்கள் ஒரு அளவிற்கு இருந்தால் அதையும் சகித்துக் கொள்ளலாம்.
  • அளவுக்கு மீறும் பொழுது, விளம்பரங்கள் நம்முடைய பொறுமையைச் சோதிக்கின்றன. இப்படி விளம்பரங்களால் நீங்களும் பொறுமை இழந்திருக்கிறீர்கள் என்றால் கட்டாயம் உங்கள் போனில் இந்த ட்ரிக்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் விளம்பரங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். எப்படியென்று பார்க்கலாம்.
  • தற்போதைய நவீன உலகில் ஒரு ரூபாய் சேஃப்டி பின் முதல் ஒரு கோடி ரூபாய் அப்பார்ட்மெண்ட் வரை எல்லாம் விளம்பரம் மயம். தொலைக்காட்சி, போஸ்டர், பேனர் என நம்மை விட்டு தள்ளியிருந்த விளம்பரங்கள் ஸ்மார்ட் போன் வருகையால் நம் உள்ளங்கைகளுக்குள் வந்து விட்டன. 
  • உங்கள் ஃபோனில் அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கான மொபைல் ஆப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தினால், அதில் ஏதாவது ஒரு பொருள் தொடர்பான விபரங்களை தேடி இருப்பீர்கள். அப்படி, நீங்கள் சர்ச் செய்த பொருள் மீண்டும்-மீண்டும் பல தளங்களில் விளம்பரங்களாக உங்களக்கு காண்பிக்கப்படும்.
  • உதாரணமாக, நீங்கள் ஒரு ஷூ மாடல் நீங்கள் தேடி இருந்தீர்கள் என்றால் - பேஸ்புக், இன்ஸ்டாகிராம், போன்ற மற்ற தளங்களை நீங்கள் பயன்படுத்தும் போதும், ஷூ தொடர்பான விளம்பரங்கள் தான் அடிக்கடி உங்களுக்கு காண்பிக்கப்படும். 
  • இதுபோல், இன்னும் பல விளம்பரங்களும் சேர்த்து காண்பிக்கப்படும். இத்தகைய விளம்பரங்களை ஸ்டாப் செய்யக்கூடிய ட்ரிக்கை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
  • முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் கூகுள் குரோம் ப்ரவுசரை ஓபன் செய்யுங்கள்.
  • அதில் வலது பக்க மேல் மூலையில் வரிசையாக மூன்று புள்ளிகள் இருக்கும். அதைத் திறந்து அதில் இருக்கும் செட்டிங்ஸ் பகுதியை தேர்வு செய்யுங்கள்.
  • செட்டிங்ஸை திறந்தவுடன் அதில் பல்வேறு ஆப்சன்கள் வரும். அதில் சைட் செட்டிங்ஸ் என்ற பகுதியை செலக்ட் செய்யுங்கள்.
  • சைட்செட்டிங்கில் Pop Ups and redirects என ஒரு ஆப்சன் இருக்கும். அந்த ஆப்சனை ஆனில் வைக்க வேண்டும்.
  • பிறகு மீண்டும் சைட் செட்டிங் பகுதிக்குச் சென்று அதில் Ads என்ற ஆப்சனை திறந்து அந்த ஆப்சனும் ஆனில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  • இப்படிச் செய்தால் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து உங்களை தொல்லை செய்யாது. இது ஒரு வழியென்றாலும், Add block extention-களை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வதும், ஆட் பினாக்கிங் வசதியுள்ள ப்ரவுசர்களை பயன்படுத்துவதும் தான் விளம்பரத் தொல்லை இல்லாமல் சர்ஃபிங் செய்ய சரியான வழியாக இருக்கும்.

No comments:

Powered by Blogger.