- கவிமணி தேசிக விநாயகம் (ஜுலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி க்கு ஜுலை 27, 1876 அன்று பிறந்தார்.
- உமையம்மை எனும் பெண்ணை 1901ல் மணம் முடித்தார். எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார்.
- பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களான இம்மை பற்றிய ரூபாய்த் (4 அடி செய்யுள்) தழுவி தமிழில் எழுதினார்.
- சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.
- கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
- இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
சிறப்பு பெயர்- கவிமணி (சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
- குழந்தை கவிஞர்
- தேவி
- நாஞ்சில் நாட்டு கவிஞர்
- தழுவல் கவிஞர்
பெற்ற சிறப்புகள்- 1940 - பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமா மகேசுவர பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.
- 1943 - அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்த போது அதை வாங்க மறுத்துவிட்டார்.
- 1954 - கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
- 2005 - இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
கவிமணி பெற்ற விருதுகள்- 1954 இல் தேரூரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய அரசு அக்டோபர் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
கவிமணியின் நூல்கள்- அழகம்மை ஆசிரிய விருத்தம்
- ஆசிய ஜோதி, (1941)
- மலரும் மாலையும், (1938)
- மருமக்கள்வழி மான்மியம், (1942)
- கதர் பிறந்த கதை, (1947)
- உமார் கய்யாம் பாடல்கள், (1945)
- தேவியின் கீர்த்தனங்கள்
- குழந்தைச்செல்வம்
- கவிமணியின் உரைமணிகள்
- மருமக்கள்வழி மான்மியம்
கவிமணி தேசிக விநாயகம் / KAVIMANI DESIYA VINAYAKAM PILLAI
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 19, 2023
Rating:
5
No comments: