Ads Top

இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் உணவுகள் / FOOD HELP TO RESOLVE TO REDUCE FAT IN BLOOD VESSELS

  • ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்காண மக்கள் பல்வேறு இதய பிரச்சனைகளால் இறக்கிறார்கள். இந்த இதய பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக இருப்பது உயர் இரத்த அழுத்தம், இரத்த குழாய்களில் கொழுப்பு தேக்கம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஆகியவை.
  • தற்போது இந்த மூன்று பிரச்சனைகளையும் ஏராளமான மக்கள் கொண்டுள்ளனர் மற்றும் சமாளித்தும் வருகிறார்கள். இந்த பிரச்சனைகள் வருவதற்கு காரணம் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுகள் தான். 
  • ஜங்க் உணவுகள் ருசியாக இருப்பதால், நிறைய பேர் அடிக்கடி அவற்றை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விளைவாக சில நாட்களிலேயே அவற்றில் உள்ள கொழுப்புக்கள் உடலினுள் ஆங்காங்கு தேங்கி பல மோசமான நோய்களால் அவதிப்பட வைக்கின்றன.
  • குறிப்பாக இரத்த குழாய்களில் கொழுப்பு கட்டிகளை உருவாக்கி அடைப்புக்களை ஏற்படுத்துகின்றன. இந்த கொழுப்பு கட்டிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைபட்டு, அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கும். 
  • உங்கள் இரத்த குழாய்களில் இதுப்போன்ற கட்டிகள் எதுவும் உருவாகாமல், இரத்த குழாய் சுத்தமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், இரத்த குழாய்களை சுத்தம் செய்ய உதவும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை உட்கொண்டு வாருங்கள். இப்போது இரத்த குழாய்களை சுத்தம் செய்ய உதவும் உணவுகளைக் காண்போம்.
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில்
  • பெரும்பாலும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. 
  • எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கொழுப்புக்கள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலின் ஆயில் மாரடைப்பு மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. 
  • எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவது நல்லது.
டார்க் சாக்லேட்
  • டார்க் சாக்லேட் சாப்பிடுவது பக்கவாதம், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயின் அபாயங்களை குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. டார்க் சாக்லேட்டில் தாவர வகையை சேர்ந்த பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. 
  • டார்க் சாக்லேட்டை சாப்பிடும் போது, அது உடலினுள் நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், தமனிகளில் உள்ள அழற்சியைக் குறைப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்பு உள்ளவர்களின் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
பழங்கள்
  • பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் உள்ளன. குறிப்பாக பெர்ரி பழங்கள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. 
  • முக்கியமாக இந்த பழங்களில் உள்ள அமிலங்கள் இரத்த குழாய்களில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றி, இரத்த குழாய்களை சுத்தம் செய்கின்றன.
பச்சை இலைக் காய்கறிகள்
  • கேல், லெட்யூஸ், பசலைக்கீரை போன்றவற்றில் பெருந்தமனி தடிப்புகளைத் தடுக்கும் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவை இரத்த குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அழற்சியைக் குறைக்கவும் உதவுகின்றன. 
  • பல்வேறு ஆய்வுகளில் பச்சை இலைக் காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஓட்ஸ்
  • ஓட்ஸ் சாப்பிடுவது பெருந்தமனிதடிப்பிற்கு காரணமான கெட்ட கொழுப்புக்களின் அளவை கணிசமாக குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
  • எனவே நீங்கள் உங்கள் இதயம் ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் இருக்க விரும்பினால் ஓட்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
ஆளி விதை
  • ஆளி விதை இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புக்களைத் தடுக்கும். இவற்றில் நார்ச்சத்து, நல்ல கொழுப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிளவில் உள்ளன. 
  • ஆளிவிதைகளில் செகோசோலாரிசிரெசினோல் டிக்ளூகோசைடு உள்ளது. இது கொழுப்புக்களைக் கரைக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளதால், பெருந்தமனி தடிப்பைத் தடுக்கும். ஆகவே இரத்த குழாய்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஆளி விதைகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
வால்நட்ஸ்
  • வால்நட்ஸில் நல்ல வளமான அளவில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் தாவர வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒருவரது தினசரி உணவில் வால்நட்ஸ் இருந்தால், அது 55% பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாக விலங்கு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. 
  • ஆகவே இரத்த குழாய்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க விரும்பினால், ஸ்நாக்ஸ் நேரத்தில் சிறிது வால்நட்ஸை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
மீன்
  • மீன்களில் ஏராளமான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்க பெரிதும் உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. 
  • எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த குழாய்களில் கொழுப்புக்களால் அடைப்புக்கள் ஏற்படாமல் இருக்கவும் மீன்களை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்த்து வாருங்கள்.
தக்காளி
  • அன்றாட சமையலில் சேர்க்கப்படும் தக்காளி பெருந்தமனி தடிப்பை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு தக்காளியை சமையலில் மட்டும் சேர்க்காமல், அவற்றை சாலட், சாண்ட்விச் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மேம்படுவதோடு, இதய நோயின் அபாயமும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள்
  • மஞ்சளில் உள்ள குர்குமின் ஒரு சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருளாகும். பெருந்தமனி தடிப்பு அல்லது இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதற்கு காரணமே அழற்சி தான். 
  • ஆனால் மஞ்சளை தினசரி உணவில் சேர்க்கும் போது, அது இரத்த குழாய்களில் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது. எனவே உங்கள் இரத்த குழாய்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து தினமும் குடித்து வாருங்கள்.

No comments:

Powered by Blogger.