Ads Top

வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள் / MEDICAL USES OF ONION LEAVES (VENKAYA THAAL)

  • வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். 
  • வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. 
  • மேலும், வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 
  • வெங்காயப் பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும். இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். 
  • வெங்காயப் பூ பசியை தூண்டும்.வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன. 
  • வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இதில் உள்ள அலிசின் என்னும் வேதிப்பொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.
  • வெங்காயத்தாள் கண்நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
  • வெங்காயத்தாள் ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. 
  • வெங்காயத் தாளில் உள்ள வைட்டமின் கே ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இத்தனை மருத்துவகுணம் நிறைந்துள்ள வெங்காயத்தாளை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்பெறுவோம்.

No comments:

Powered by Blogger.