Ads Top

லெஹங்காவை தேர்வு செய்வது எப்படி? / HOW TO CHOOSE LEHENGA DRESS FOR MARRIAGE IN TAMIL?

  • லெஹங்கா, இன்றைய தலைமுறையினரின் ஃபேவரிட் ஆடையாக மாறியுள்ளது. பலவிதங்களில், பல வகையான வேலைப்பாடுகளில் கிடைக்கும் இந்த லெஹங்காவை விரும்பி வாங்குகிறோம்.
  • அதிலும் குறிப்பாக திருமணத்திற்காக வாங்கும் பிரைடல் லெஹங்கா விலையும், வேலைப்பாடும் அதிகம் இருக்கும். இந்த பிரைடல் லெஹங்காவை வாங்கும் முன்பு நாம் சில விஷயங்களை கவனிப்பது நமது தேர்வை எளிதாக்க உதவும். அப்படி என்னென்ன விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
  • முதலில், லெஹங்கா ஆடையைப் பற்றி ஆன்லைனில் சில ஆராய்ச்சிகளை செய்யுங்கள். குறிப்பாக, சமீபத்திய ட்ரெண்டு மற்றும் வடிவமைப்புகளை பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 
  • பிரைடல் லெஹெங்கா பற்றி அறிந்து கொள்ள ஒரு கடையை மட்டும் நம்பாமல், இன்னும் சில கடைகளுக்குச் செல்லுங்கள்.
  • பிரைடல் லெஹங்கா விலை, ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை செல்லும். எனவே, ஷாப்பிங் செல்வதற்கு முன் உங்கள் பட்ஜெட்டை பார்த்துக்கொள்ளவும். முடிந்தளவு தேடி, உங்களுடைய பட்ஜெட்டிற்குள் எடுப்பதற்குத் திட்டமிடுங்கள்.
  • மற்றவர்கள் கூறுகிறார்கள் என்று எடுக்காமல், உங்களுக்குப் பிடித்த லெஹங்காவை தேர்வு செய்யுங்கள். ட்ரையல் பார்க்காமல் எடுக்காதீர்கள்.
  • எல்லோருடைய உடல்வாகும் ஒரேபோல இருப்பதில்லை. எனவே, உங்களுடைய உடல் வாகு என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு அதற்கேற்ற லெஹங்கா டிசைனை தேர்வு செய்யுங்கள். இல்லையெனில், முக்கியமான தருணத்தில் நீங்கள் அதை அணிந்திருக்கும்போது அசௌகர்யமாக இருக்கும்.
  • சிக்கன்காரி, கோட்டாபட்டி, சீக்வின், ஜாரி, டப்கா, த்ரெட் ஒர்க் என லெஹெங்கா வேலைப்பாடுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. எனவே, ஆடையை இறுதி செய்வதற்கு முன், அதன் வேலைப்பாடுகளைப் பாருங்கள். உங்களுக்கு எது சிறப்பாக இருக்கிறது என்று பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • லெஹெங்காவை அதன் துப்பட்டாவின் அளவு, வேலைப்பாட்டை சரிபார்த்து பின்பு இறுதி செய்யவும். ஏனெனில் அது உங்கள் திருமணப் புகைப்படத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.
  • நீங்கள் குளிர்காலத்தில் திருமணம் செய்யப் போகிறீர்கள் என்றால் கனமான துணி மற்றும் அலங்காரங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதே கோடை காலம் என்றால் அதற்கேற்ப தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் திருமண நகைகளை, லெஹெங்கா வாங்குவதற்கு முன்பே நீங்கள் ஷாப்பிங் செய்திருந்தால், அதனை மனதில் கொண்டு லெஹங்காவை வாங்கலாம்.
  • அதிக நேரம் பிரைடல் லெஹங்காவை தொங்கவிடாதீர்கள். அதிக வேலைப்பாடுகள், ஆரி ஒர்க் செய்திருப்பதால் எடை அதிகமாக இருக்கும் இருப்பதால் தொங்கவிடும்போது உங்கள் லெஹங்கா சேதப்பட வாய்ப்புள்ளது.
  • லெஹங்காவை டிரை க்ளீன் செய்யுங்கள்.
  • அயர்ன் செய்து பயன்படுத்த வேண்டிய வகையிலான லெஹங்கா எனில், முன்கூட்டியே அயன் செய்து எடுத்து வைத்து கொண்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம்.

No comments:

Powered by Blogger.