Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 10

தேசிய போர் நினைவு சின்னத்துடன் ஒன்றிணைந்தது அமர்ஜவான் ஜோதி

  • கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக தலைநகர் டில்லியில் இந்தியா கேட் பகுதியில் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அமர்ஜவான் ஜோதி என்றும் அணையாத விளக்கு ஏற்றப்பட்டது. இந்த வழக்கு தற்போது வரை 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
  • இதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இந்த போர் நினைவு சின்னத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பாகிஸ்தானுடன் நடந்த போர் முதல் தற்போது வரை நடந்த போர்களில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இந்த சின்னம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது. அமர்ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கு, முப்படை வீரர்களின் மரியாதையுடன், டில்லியில் உள்ள தேசிய போர் நினை சின்னத்தில் உள்ள விளக்குடன் இணைக்கப்பட்டது.

ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் இந்திய பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி

  • ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் இந்திய பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளன.ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து வடக்கு இந்திய பெருங்கடலில் மூன்றாவது ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
  • ஈரானின் ராணுவத்தின் கப்பல்கள் 2022ம் ஆண்டுக்கான கடற்பாதுகாப்பு கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டன.இந்து மகா சமுத்திரத்தில் 17 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த மூன்று நாடுகளின் ராணுவத்தினரும் பயிற்சியில் ஈடுபட்டனர். 
  • எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் காலத்தில் இந்த நாடுகள் தங்களை தற்காத்துக் கொள்ள இந்தப் பயிற்சி உதவும் என கூறப்படுகிறது.

'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' 2022

  • "மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட திரு. கோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கம் என்ற பதக்கம் ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. 
  • தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒரு நபருக்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 
  • இந்தப் பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். இதுதவிர ரூ. 25 ஆயிரத்திற்கான வரைவு கேட்புக் காசோலையும், சான்றிதழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
  • 2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட இருக்கும் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தினை' மத நல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கோயம்புத்தூரை சேர்ந்த திரு ஜே. முகமது ரஃபி, த/பெ திரு கே. ஜமீஷா என்பவருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 
  • ஜே. முகமது ரஃபி என்பவருக்கு 26.01. 2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின 'கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்' வழங்க இதன்மூலம் அரசால் ஆணையிடப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் பழமையான ராட்சத பவளப்பாறை

  • பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் "பழமையான" பவளப்பாறையை கடல்சார் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இத்தகைய ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பவளப்பாறைகளில் இது ஒன்று என்று இந்த பணியை வழிநடத்திய ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு கூறுகிறது.
  • நவம்பரில், கடலின் "ஒளிமங்கிய மண்டலம்" என்று அழைக்கப்படும் ஆழத்திற்கு, டைவிங் பயணம் மேற்கொண்டப்போது இந்த பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய கடற்பரப்பு-வரைபடம் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாகும்.

பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட 'விடுப்பு செயலி' - முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்

  • இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் காவலர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
  • இந்நிலையில், CLAPP என்ற விடுப்பு செயலியை பெருநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். 
  • இந்த செயலி மூலமாக, காவலர்கள் தாங்கள் எடுக்கும் விடுப்பின் விவரங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயலியில் பதிவு செய்யப்பட்டதும், விடுப்பு விவரங்கள், மேல் அதிகாரிகளுக்கு சென்று சேரும்.

புலிகள் பாதுகாப்பு குறித்த 4ஆவது ஆசிய அமைச்சர்கள் நிலையிலான மாநாடு

  • இயற்கை வளங்களை சார்ந்திருக்கும் சமூகத்தின் முக்கியமான அம்சம் புலிகள் பாதுகாப்பு என்றும் மக்களின் செயல்பாடு இந்தியாவின் புலிகள் பாதுகாப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் கூறினார்.
  • புலிகள் மீட்புத் திட்டம், புலிகள் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு குறித்த முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் முக்கிய நிகழ்வான புலிகள் பாதுகாப்பு குறித்த 4ஆவது ஆசிய அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.
  • இந்த ஆண்டு பிற்பகுதியில் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறவுள்ள உலகளாவிய புலிகள் குறித்த உச்சி மாநாட்டுக்கான புதுதில்லி பிரகடனத்தை இறுதிப்படுத்துவதை நோக்கி புலிகள் அதிகமுள்ள நாடுகளை இந்தியா கேட்டுக்கொள்வதாக அமைச்சர் கூறினார். 
  • உலகளாவிய புலிகள் குறித்த உச்சி மாநாட்டுக்கான உரையாடலுக்கு, 2010 புதுதில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு முந்தைய கூட்டத்தில் நகல் பிரகடனம் இறுதி செய்யப்பட்டது.

இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும்

  • இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கப்படும் வரை, அந்த இடத்தில் அவரது முப்பரிமாணப் படிப்பைச் (ஹாலோகிராம்) சிலையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அவரது பிறந்தநாளில் பிரதமர் திறந்து வைப்பார்.
  • ஒட்டுமொத்த நாடே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள தருணத்தில், இந்திய கேட் பகுதியில் அவரது முழு உருவக் கருங்கல் சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு இந்தியா பட்டுள்ள நன்றிக்கடன் சின்னமாக இச்சிலை அமையும்.
  • ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • கூடுதல் சிறப்பாக இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை எட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அனைத்து மக்களும் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வழங்கி வருகிறது.
  • வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கியுள்ளது.
  • அத்தகு சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி எஸ்.முருகனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
  • இவர் ஏற்கெனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக் குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவும் வகையில், குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடனுதவித் திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
  • இந்த அமைப்பின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அதன் தலைவராக துறைமுகம் காஜா (எ) காஜா முகைதீனை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கருணாநிதி செம்மொழி தமிழ் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • 2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் விருதுகள் வழங்கப்பட்டது.
  • மேலும், விருதுகள் பெற்றவர்களுக்கு விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன், கலைஞர் கருணாநிதி அவர்களின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டது.
  • அதில் பேராசிரியர்கள் கோதண்டராமன், சுந்தரமூர்த்தி, மருதநாயகம், மோகனராசு, மறைமலை இலக்குவனார், ராஜன், உல்ரிக் நிக்லாஸ் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • தமிழுக்கும், தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்த்தது திமுக ஆட்சிதான். பெரும்பாக்கத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படும். மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலை என்று அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜம்முவில் இன்று இந்தியாவின் முதலாவது மாவட்ட சிறந்த நிர்வாக குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிடுகிறார்

  • ஜம்மு & காஷ்மீர் அரசின் ஒத்துழைப்புடன், டிஏஆர்பிஜி தயாரித்துள்ள இந்தியாவின் முதலாவது மாவட்ட சிறந்த நிர்வாக குறியீட்டை, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா முன்னிலையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிடுகிறார்.
  • ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக மாதிரியின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாவட்ட அளவிலான சிறந்த நிர்வாகத்துக்கு அடிப்படையாகக் கொள்ளும் அளவுக்கு இது இருக்கும்.
  • 2021 டிசம்பர் 25-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்ட தேசிய சிறந்த நிர்வாக குறியீட்டில், ஜம்மு காஷ்மீர் 3.7 % வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில், வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள், பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் போன்றவற்றிலும் சிறப்பான செயல்திறனைக் காண முடிந்தது.
  • இதன் அடிப்படையில் இந்த குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள இது வழிவகுக்கும்.

அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

  • அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
  • அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். 
  • தங்கள் மாவட்டங்களின் செயல் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் தங்களின் அனுபவங்களை மாவட்ட ஆட்சியர்கள் பகிர்ந்து கொண்டனர். மாவட்டங்களில் வெற்றியைத் தருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பற்றியும், இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் பிரதமர் நேரடியாக கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தின் மூலம் கரியமில வாயுவை சேகரிப்பது மற்றும் பயன்பாட்டுத் தீர்வுகளின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் விவாதித்தனர்

  • 2022 ஜனவரி 21 அன்று இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், அமெரிக்காவின் எரிசக்தி துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தின் மூலம் கரியமில வாயுவை சேகரிப்பது மற்றும் பயன்பாட்டுத் தீர்வுகளின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் விவாதித்தனர்.
  • கரிய மில வாயு வெளியேறாத நாடுகள் என்ற இலக்கை எட்டுவதற்கான தொழில்நுட்ப முயற்சிகளில் ஒத்துழைப்பதற்கு தொடர்ச்சியாக பயிலரங்குகளை நடத்த இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இதன்படி 2022 ஜனவரி 21 தொடங்கி, பிப்ரவரி 25 வரை இத்தகைய பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன.

40-வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 

  • 40-வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. 18 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் தமிழ்நாடு மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. தமிழக அணி அரை இறுதியில் 35-24 மற்றும் 35-26 என்ற கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது.
  • தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தமிழக மகளிர் அணி 35-28, 28-35, 35-28 என்ற கணக்கில் ஆந்திராவை விழ்த்தியது.
  • தமிழக அணியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சமீதாவும் இடம் பெற்றிருந்தார். இந்த அணிக்கு பயிற்சியாளராக ஐ.சார்லஸ் ராஜ்குமாரும், மேலாளராக ரமேஷும் பணியாற்றினர்.

டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியது; இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலை - பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்

  • இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் 125-வதுபிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 
  • 'நேதாஜியை கவுரவிக்கும் வகையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவருக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும். இது நேதாஜிக்கு நாடு செலுத்தும் நன்றிக் கடனாகும். 
  • சிலை நிறுவப்படும் வரை அவரின் உருவம் முப்பரிமாண மின் ஒளியில் (ஹாலோகிராம்) திரையிடப்படும்' என்று பிரதமர் அறிவித்தார்.
  • அதன்படி, நேதாஜியின் பிறந்தநாளான நேற்று, டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவரது முப்பரிமாண மின் ஒளி (ஹாலோகிராம்) சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். 
  • பேரிடர் மேலாண்மையில் தன்னலமற்ற, மதிப்புமிக்க தொண்டாற்றிய நிறுவனங்கள் மற்றும் தனிநபரை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற பெயரில் விருது நிறுவப்பட்டிருக்கிறது. 
  • நிறுவனம் மற்றும் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. நிறுவனத்துக்கான விருதில் ரூ.51 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், தனிநபர் விருதில் ரூ.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு விருதுக்காக நிறுவனங்களிடம் இருந்தும், தனிநபர்களிடம் இருந்தும் 243 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பேரிடர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. 
  • தனிநபர் பிரிவில் பேராசிரியர் வினோத் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அவர்களுக்கும், கடந்த 2019, 2020, 2021-ம் ஆண்டு விருதாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கினார்.
  • மக்களவை செயலகத்தின் சார்பில் நேதாஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

சையது மோடி சர்வதேச பேட்மின்டன் பி.வி.சிந்து சாம்பியன்

  • இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோட் உடன் மோதிய சிந்து அதிரடியாக விளையாடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். 
  • இப்போட்டி 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சையது மோடி தொடரில் சிந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2017ல் அவர் இத்தொடரில் பட்டம் வென்றிருந்தார்.
  • கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் இஷான் பட்னாகர் - தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான ஹேம நாகேந்திர பாபு - ஸ்ரீவேத்யா குரஸடா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
  • உலக டூர் எக்ஸ்டி அந்தஸ்து தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் சாம்பியன் பட்டம் இது.

No comments:

Powered by Blogger.