Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 6

 


இலங்கை அரசின் மக்கள் வங்கி - கருப்பு பட்டியலில் இருந்து விடுவித்தது சீனா

  • மக்கள் வங்கியை கடந்த அக்டோபர் மாதம் கறுப்பு பட்டியலில் இணைக்க கொழும்பிலுள்ள சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. 
  • சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாகவே, மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.
  • சீனா நிறுவனத்திற்கும், இலங்கையில் உரத்தை இறக்குமதி செய்த தரப்பினருக்கும் இடையிலான வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
  • அந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சீன உர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடந்த 7ம் தேதி மக்கள் வங்கி செலுத்தியது.
  • சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு நாள் முன்பாக இந்த தொகை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்த பின்னணியில், மக்கள் வங்கி மீதான தடையை சீனா தளர்த்தியது.

கஜகஸ்தான் புதிய பிரதமர் நியமனம்

  • மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான், சோவியத் யூனியன் வீழ்ந்த சமயத்தில் உருவான நாடுகளில் ஒன்றாகும். அதிக எண்ணெய் வளமிக்க நாடான இங்கு எரிபொருள் விலையை அந்நாட்டு அரசு உயர்த்துவதாகத் தகவல் வெளியானது. இது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் உத்தரவை எதிர்த்துத் தொடங்கிய மக்கள் போராட்டம் மிக விரைவில் கலவரமாக மாறியது.
  • நாளுக்கு நாள் நிலைமை மோசமானதால் நிலைமையைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் ராணுவக் கூட்டணியான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (CSTO) வரவழைக்கப்பட்டது. 
  • சோவித் யூனியனில் இருந்து உருவான நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த CSTO படைகளாகும். ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க CSTO படைகள் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்தச் சூழலில் தான் அலிகான் ஸ்மைலோ என்பவரை அந்நாட்டின் புதிய பிரதமராக காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் நியமித்துள்ளார். 49 வயதாகும் அலிகான் ஸ்மைலோ, முந்தைய அரசின் முதல் துணைப் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஸ்பான்ஸராக டாடா குழுமத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம்

  • நடப்பு 2022 சீசன் மற்றும் 2023்ம் ஆண்டு சீசனுக்கும் டைட்டில் ஸ்பான்ஸராக டாடா குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டாடா குழுமத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு வழங்கியுள்ளது.

35.8 % பங்குகளை மத்திய அரசுக்கு அளிக்க வோடாபோன் ஐடியா முடிவு

  • வோடாபோன் நிறுவனம் ரூ.1.95 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் இதுவரை ரூ.7,854 கோடி செலுத்தி உள்ளது.
  • இன்னும் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில், வோடாபோன் ஐடியாவின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. 
  • இந்த கூட்டத்தில், ஸ்பெக்டரம் ஏலத்தவணைகள் தொடர்பான முழு வட்டியையும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ஈக்விட்டியாக மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. 
  • சுமார் 35.8 சதவீதம் கொண்ட இந்த பங்கின் சந்தை மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாய். இதற்கு மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். 
  • இதன் பின்னர் வோடாபோன் நிறுவனத்திடம் 28.5 சதவீத பங்குகள் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் 17.8 சதவீத பங்குகள் இருக்கும்.

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி. காமகோடி நியமனம்

  • சென்னை ஐஐடியின் இயக்குநராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியின் இரண்டாண்டு பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி சென்னை ஐஐடியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றி வரும் காமகோடி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சக்தி என்ற நுண்செயலியை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் காமகோடி. பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் காமகோடி மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திலும் உறுப்பினராக உள்ளார்.

சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் பெறுவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது

  • சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் பெறுவதற்கு சிசிஐ இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொருத்தமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (சதர்லேண்ட்) சி தொடரின் முன்னுரிமை பங்குகள் பொதுப் பங்குகளாக இரண்டு தொகுப்புகளில் கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் (ஜிஐசி முதலீட்டாளர்) வாங்குவதற்கு கூட்டான முன்மொழிவு தரப்பட்டது.

இந்திய பொருளாதார வளர்ச்சி - உலக வங்கியின் கணிப்பு

  • பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்புகளை மாற்றி அறிவித்து வரும் நிலையில், உலக வங்கி, முன்னர் அறிவித்த நிலையையே தக்கவைத்துள்ளது.
  • இதற்கு காரணம், மீட்சி இன்னும் பரவலாக எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில், உலக வங்கி, 8.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 
  • மேலும், அடுத்த நிதியாண்டு மற்றும் அதற்கு அடுத்த நிதியாண்டுகளில் வளர்ச்சி 8.7 மற்றும் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்து அறிவித்துள்ளது. 

இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் செயல்பட்டு வந்தார். இவரின் பதவிக் காலம் முடிந்துள்ளதை அடுத்து தற்போது புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி எஸ்.சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) தற்போதைய இயக்குநராக இருக்கும் சோம்நாத், கேரளாவைச் சேர்ந்தவர். 

11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

  • தமிழ்நாட்டில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. 
  • இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மொத்தமாக 1,250 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இதற்காக மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 2,145 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
  • ரூ. 24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் புதிய வளாகம், இதுவரை வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. 
  • மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுய்களுடன் கூடிய பிரமாண்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி - ஓய்வு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் குழு உச்சநீதிமன்றம் அறிவிப்பு

  • பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க கடந்த 5ம் தேதி பிரதமர் பயணம் மேற்கொண்டார். ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. 
  • இதையடுத்து பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்தது. 
  • இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஐந்து பேர் கொண்ட குழுவின் விவரங்களை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
  • அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி இந்து மல்கோத்ரா இந்த குழுவின் தலைவராக செயல்படுவார் என்றும், மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் டிஜி அல்லது அவர் நியமனம் செய்யக்கூடிய ஐஜி பதவிக்கு கீழ் இல்லாத அதிகாரி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர்கள், பஞ்சாப், சண்டிகர் மாநில டிஜிபிக்கள், குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இயற்கை வளத்துறை

  • இயற்கை வளத்துறை என்னும் புதிய துறையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்த துறையை நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் கவனிப்பார். அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநகரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகிய 3 துறைகள் இந்த புதிய இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

அமெரிக்காவில் முதல் முறையாக கறுப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

  • அமெரிக்காவின் மிசோரியில் கடந்த 1928ம் ஆண்டில் பிறந்தவர் மாயா ஏஞ்சலோ. கறுப்பினத்தை சேர்ந்த இவர் பல்துறை வித்தகர். சிறுவயதிலேயே இனவெறி தாக்குதலுக்கு ஆளானவர். 
  • தனது 7 வயதிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர். பல வன்கொடுமைகளையும் அனுபவித்தவர். அதிலிருந்து மீண்டு, பல வலிகளை தந்த இந்த சமூகத்தில் இருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டார். இனவெறிக்கு எதிராக, கறுப்பின பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
  • பல்வேறு கவிதை, கட்டுரை, புத்தகங்களை எழுதினார். இவர் எழுதிய 'கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என எனக்கு தெரியும்' என்ற சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. தன் வாழ்க்கையின் மூலம் இனவெறியின் கொடுமைகளை மாயா தோலுரித்துக் காட்டினார்.
  • இதற்காக, 2010ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான, 'ஜனாதிபதி விருது' மாயாவுக்கு கிடைத்தது. 2014ம் ஆண்டில் தனது 86வது வயதில் அவர் காலமானார். 
  • இந்நிலையில், மாயா ஏஞ்சலோவின் சேவையை பாராட்டி அவரது உருவம் பொறித்த 25 சென்ட் நாணயத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கறுப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம்

  • கடந்த நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம் 4.91 சதவீதமாகவும்; கடந்த 2020 டிசம்பரில் 4.59 சதவீதமாகவும் இருந்தது.முந்தைய மாதத்தில், உணவு பொருட்கள் பணவீக்கம் 1.87 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 4.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இதையடுத்து சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்த போதிலும், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் உள்ளது. நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்க, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது.

புதுச்சேரியில் 25ஆவது தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி

  • புதுச்சேரியில் 25ஆவது தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி, பின்னர் கிழக்கு கடற்கரைச் சாலையில், ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜா் மணிமண்டபம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியம். ஒவ்வொரு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். 
  • இது உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்தை நோக்கிய பாதையில் புதிய சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதும் முக்கியம் என்று பேசினார்

3 அமைச்சர்களின் சில துறைகள் மாற்றியமைப்பு - தமிழக அரசு

  • தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் , தொழில் துறை அமைச்சரிடம் இருந்து இருந்து வேளாண் துறை அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை, போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்து தொழில்துறை அமைச்சருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அயலக பணியாளர் கழகம் சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் இருந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழ்நாடு அரசில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. துறைக்குத் தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனைதவளத்துறையிடமிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நான்காவது முறையாக பிரதமரானார் மார்க் ரூடே

  • கடந்த ஆண்டு மார்ச் மாதம் நெதர்லாந்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அரசு மூலம் கடந்த திங்கட்கிழமை அன்று நான்காவது முறையாக மார்க் ரூடே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2010-ல் தொடங்கி தற்போது நான்காவது முறையாகப் பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் ரூடே, நெதர்லாந்து வரலாற்றிலேயே இரண்டாவது இளம் பிரதமராவார். 
  • இவர் பிரதமராகப் பதவியேற்ற பின்னரும்கூட இன்று வரை ஜோகன் டி விட் கல்லூரியில் வாரத்தில் இரண்டு மணி நேரம் மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த பாடங்களை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்ட உலக பொருளாதார நிலை மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான வளா்ச்சி வாய்ப்புகள் குறித்த அறிக்கை

  • கடந்த 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலக பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவில் 5.5 சதவீத அளவுக்கு வளா்ச்சி பெற்றது. 
  • ஆனால், அந்த ஆண்டின் இறுதியில், கரோனா பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது. சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற மிகப் பெரிய பொருளாதாரங்களும் கடும் சரிவைச் சந்தித்தன.
  • தொடா்ந்து, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் உலக பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும். 2022-இல் உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் 4 சதவீத அளவிலும், 2023-இல் 3.5 சதவீத அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலான வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சி பொதுவாக பலவீனமாக இருக்கும். குறிப்பாக, சுற்றுலா துறையைச் சாா்ந்துள்ள நாடுகளில் பொருளாதார வளா்ச்சி மிக மந்தமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருக்கு ஆலை அமைக்க அதானி - போஸ்கோ ஒப்பந்தம்

  • கவுதம் அதானி தலைமையிலான, 'அதானி குழுமம்' உருக்கு, புதிப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் வணிக வாய்ப்புகளை மேம்படுத்த, தென் கொரியாவைச் சேர்ந்த, 'போஸ்கோ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • குஜராத்தில் உள்ள முந்த்ராவில், பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ஒருங்கிணைந்த உருக்கு ஆலையை நிறுவுவது மற்றும், பிற வணிகங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவை சம்பந்தமாக, போஸ்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • குஜராத்தில் ஆலை அமைப்பது மட்டுமின்றி; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ர ஜன், சரக்கு கையாளல் போன்ற பல்வேறு துறைகளிலும், இரு தரப்பும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தி தந்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரிக்கும் கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

  • நாடு முழுவதும் அன்றாடம் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
  • கரோனா அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் வேலை எனப் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • ஏற்கெனவே நாடு முழுவதும் 15 முதல் 18 வயதில் உள்ள சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும், 60 வயதுக்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்கள், இணை நோய் கொண்டோர், முதியோர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடப்பட்டு வருகிறது. 
  • மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கரோனா பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த மாநிலங்கள் கூடுதல் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகின்றன.
  • இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அவர் கேட்டறிந்தார்.

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது

  • மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பிரிட்டன் நாட்டு சர்வதேச வர்த்தகத்துக்கான அமைச்சர் அன்னி –மேரி டிரவெலினுடன், புதுதில்லியில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையை தொடங்கினார். 
  • இருநாட்டு பிரதமர்கள் திரு. நரேந்திர மோடி, திரு. போரிஸ் ஜான்சன் ஆகியோர் 2021-ம் ஆண்டு முடிவு செய்த இலக்கை எட்டும் வகையிலான இந்த ஒப்பந்தம், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா-பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்க உதவும்.

No comments:

Powered by Blogger.