TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 7
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் - டிசம்பர் 2021
- 2021 டிசம்பர்
மாதத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் உட்பட) 57.87
பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது
கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 23.35 சதவீத வளர்ச்சி.
- 2021 டிசம்பர்
மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 72.35 பில்லியன் டாலராக இருக்கும்
என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே கால அளவை விட 33.86 சதவீதம்
நேர்மறையான வளர்ச்சி.
- 2021 ஏப்ரல்-டிசம்பர்
வரை இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் உட்பட) 479.07
பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது
கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 36.31 சதவீத வளர்ச்சி.
- 2021 ஏப்ரல்-டிசம்பர்
வரை நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 547.12 பில்லியன் டாலராக இருக்கும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே கால அளவை விட 57.33 சதவீதம்
நேர்மறையான வளர்ச்சி.
இலங்கைக்கு ரூ.6700 கோடி கடன் வழங்க இந்தியா உறுதி
- இலங்கையில் அன்னிய
செலாவணி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் உணவுப்பொருள்
இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு
காண இந்தியாவிடம் 7300 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான பேச்சு இறுதி கட்டத்தை
எட்டி உள்ளதாக இலங்கை மத்திய வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால்
சமீபத்தில் கூறி இருந்தார்.
- இந்நிலையில் இந்தியா
சார்பில் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்குவது உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இதுதொடர்பாக இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, அஜித்
நிவார்ட்டை சந்தித்தார்.
- இந்திய வழங்கும் கடன்
ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள் இறக்குமதிக்கு போதுமானதாக இருக்கும் என
அஜித் நிவார்ட் தெரிவித்துள்ளார்.
- 'இந்தியாவின் கடன்
உதவியால் இலங்கையிடம் டிச., இறுதியில் இருந்த உணவுப்பொருள் இறக்குமதிக்கான
கையிருப்பு இரு மடங்காக உயரும்' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து
உள்ளனர்.
டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
- இந்திய அணிக்கு எதிரான
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் வென்று வரலாற்றை
மாறவிடாமல் தென் ஆப்பிரிக்க அணி தக்கவைத்தது.
- கேப்டவுனில் நடந்த
கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. ஆட்டநாயகன் மற்றும் தொடர்
நாயகன் விருது கீகன் பீட்டர்ஸனுக்கு வழங்கப்பட்டது.
- இந்த வெற்றியின் மூலம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 24 புள்ளிகள், 66.66
சதவீதத்துடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி, 53 புள்ளிகள்
எடுத்தபோதிலும், 49 சதவீதத்துடன் 5-வது இடத்துக்குபின் தங்கியது.
வங்காள விரிகுடாவில் இந்திய-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி
- வங்காள விரிகுடாவில்
இந்திய-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளன.இந்தியா-ஜப்பான்
ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
- போர் காலங்களில்
எதிரிநாட்டு படைகளை சமாளிப்பது, விமானத்தில் பறப்பது உள்ளிட்ட பல்வேறு
பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்திய போர்க்கப்பலான
சிவாலிக் & காட்மண்டு, ஜப்பானிய போர்க் கப்பலான உராகா மற்றும் ஹிராடோ
ஆகிய கப்பல்களுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் இந்த பயிற்சியை
மேற்கொண்டன.
- ஜப்பான்-இந்தியா ஆகிய
இரு நாடுகளும் பல ஆண்டு காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன.
- இரு நாடுகளுக்கும்
இடையே பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களும் இடப்பட்டுள்ளன. இந்நிலையில் இரு
நாடுகளிடையே பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கில் இந்த
கூட்டுப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே கார்டு பதவிகள் 'ரயில் மேலாளர்' என மாற்றம்
- பொது மற்றும் துணை
விதிகளில் ஒரு ரயில்வே கார்டு அந்த ரயிலின் மேலாளர் என குறிப்பிடுவதுதான்
முறையானது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- அசிஸ்டென்ட் கார்டு
என்று அழைக்கப்பட்டவர் இனிமேல் அசிஸ்டென்ட் பயணிகள்ரயில் மேலாளர் எனவும்
கூட்ஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் கூட்ஸ் ரயில் மேலாளர் எனவும் அழைக்கப்படுவார்.
- அதுபோல், சீனியர்
கூட்ஸ் கார்டு, சீனியர் ரயில் மேலாளர் என்றும், சீனியர் பயணிகள் கார்டு என்று
அழைக்கப்பட்டவர் சீனியர் பயணிகள் ரயில் மேலாளர் என்றும், விரைவு ரயில் கார்டு
என்று அழைக்கப்பட்டவர் விரைவு ரயில் மேலாளர் என்றும் அழைக்கப்படுவார்கள்.
ஜன., 16 ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் - பிரதமர்
அறிவிப்பு
- புதிதாக தொழில்
தொடங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக 'ஸ்டார்ட் அப்' என்ற திட்டத்தை கடந்த 2015ம்
ஆண்டு ஒன்றிய அரசு தொடங்கியது.
- இந்நிலையில், ஸ்டார்ட்
அப் திட்டத்தின் கீழ் உருவாகி உள்ள புதிய தொழில் முனைவோருடன் காணொலி காட்சி
மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- அப்போது அவர்
பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆனவுடன் ஸ்டார்ட் அப்
தொழில் முனைவோரின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்தியாவுக்காக
கண்டுபிடியுங்கள்.
- இந்தியாவில் இருந்து
கொண்டே கண்டுபிடியுங்கள். தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் அரசின்
நிர்வாக நடைமுறைகளால் காலதாமதம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வந்தனர்.
- இந்த சிக்கல்களை
அகற்றுவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய தொழில் முனைவோர்களே புதிய இந்தியாவின்
முதுகெலும்பாக மாற இருக்கிறார்கள்.
- ஸ்டார்ட் அப் என்பது
கண்டுபிடிப்பு என்பது மட்டுமில்லாமல், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும்
பங்காற்றுகிறது.
- இந்த ஆண்டு தொழில்
முனைவோர்களுக்காக, பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- இனி, ஒவ்வொரு ஆண்டும்
ஜனவரி 16ம் தேதியில், 'தேசிய ஸ்டார்ட் அப் தினம்' கொண்டாடப்படும். இவ்வாறு
அவர் பேசினார்.
சிவகங்கை அருகே 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
- சிவகங்கை அருகே ஏரியூர்
பகுதியிலுள்ள ஆகாசப்பாறையை, பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள்
மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், பள்ளி மாணவன் தருனேஸ்வரன் ஆகியோர் ஆய்வு
செய்தபோது அங்கு சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருப்பதை
கண்டுபிடித்தனர்.
- அதே காலத்தை சேர்ந்த
காவி நிற மனித உருவம் சிவகங்கை அருகே ஏரியூர் மலையின் தென் திசையில்
காணப்படும் ஆகாசப்பாறை பகுதியிலுள்ள ஒரு பாறையில் ஓவியமாக
தீட்டப்பட்டுள்ளது.
- கிமு 7ம் நூற்றாண்டு
முதல் கிமு 3ம் நூற்றாண்டு வரை பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால
மனிதன் வாழ்ந்த ஒரு குகையின் உள்ளே ஓவியங்கள் காவி நிறத்தில் காணப்படுகின்றன.
- இங்கு ஆதிமனிதன்
வாழ்ந்த குகை, பாறை ஓவியங்களோடு, 10க்கும் மேற்பட்ட மருந்துக்குழிகளும்
உள்ளன. இந்த குழிகள் சற்றே சிறியளவில் உள்ளது.
- மலையில் கிடைத்த
மூலிகைகளை, இந்த குழிகளில் இடித்து, மருத்துவம் செய்து வந்திருக்கலாம்.
சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாகவும் கருதலாம்.
முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக்கிற்கு இங்கிலாந்தில் சிலை
- தென் தமிழகத்தின்
உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில்
தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, 'கர்னல் ஜான் பென்னிகுக்கின்' புதிய
சிலையை, அவரது பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப்
பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான
ஜனவரி 15 அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
- கர்னல் ஜான்
பென்னிகுக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான லண்டன்-கேம்பர்ளி நகர மையப்
பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு,
சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின்
ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்.
தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிட்டார் பாக்., பிரதமர்
- பாகிஸ்தானின் புதிய
தேசிய பாதுகாப்பு கொள்கையை அந்நாட்டு பிரதமர் இம்ரான் வெளியிட்டார்.
பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இதற்கு முன் இருந்த அரசுகள்
தோல்வியடைந்தன.
- இப்போது
வெளியிடப்பட்டுள்ள 100 பக்கங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு கொள்கை மக்கள்
நலன், பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை முக்கியமாக வைத்து
தயாரிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை ராணுவ பலத்தை
மட்டும் முக்கியமாக வைத்து, தேசிய பாதுகாப்பு கொள்கை இருந்து
வந்துள்ளது.அண்டை நாடுகளுடன் அமைதி, பொருளாதாரம், வர்த்தகம் போன்றவற்றை
மேம்படுத்துவதுதான் புதிய பாதுகாப்பு கொள்கையில் நோக்கமாக இடம் பெற்றுள்ளது.
குடியரசு தின கொண்டாட்டம் இனி ஜனவரி 23ம் தேதியில் தொடங்கும் - மத்திய அரசு
அறிவிப்பு
- ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி
26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், இது
தொடர்பான கொண்டாட்டங்களை மத்திய அரசு ஜனவரி 24ம் தேதியே தொடங்கி விடும் என்பது
அனைவரும் அறிந்ததே.
- இந்த நிலையில் இந்த
ஆண்டு முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் தேதி மாற்றப்படுவதாக
அறிவித்துள்ள மத்திய அரசு ஜனவரி 24ம் தேதிக்கு பதிலாக, ஒரு நாள் முன்னதாக,
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி குடியரசு தின விழா
கொண்டாட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021 - மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல்
வழங்கினார்
- தேசிய ஸ்டார்ட்அப்
விருதுகள் 2021-ஐ, 46 தொடக்க நிறுவனங்கள் வென்றன. இந்த விருது வழங்கும்
நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ்
கோயல் கலந்து கொண்டு பேசினார்.
74வது ராணுவ தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம்
- 74வது ராணுவ தினத்தை
இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. கடைசி பிரிட்டிஷ் தலைமை கமாண்டர் சர்
எப்ஆர்ஆர் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஜெனரல் கே.எம்.
கரியப்பா (பீல்டு மார்ஷல்) ஏற்றுக்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய
தலைமை கமாண்டரானதை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 15ம் தேதி,
ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
- இந்திய ராணுவத்தின்
2022ம் ஆண்டின் கருப்பொருள் “எதிர்காலத்துடனான பயணம்”. இது நவீன போர்
முறையில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு அதிகரிப்பதை அங்கீகரிப்பதாகும்.
- ராணுவ தின
கொண்டாட்டங்கள், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள்
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதுடன் தொடங்கியது.
- தில்லி கன்டோன்மென்ட்
கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடந்த ராணுவ தின அணிவகுப்பு மரியாதையையும்
ராணுவ தளபதி ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு 15 சேனா
பதக்கங்களையும் அவர் வழங்கினார்.
- இந்தாண்டு ராணுவ தின
அணிவகுப்பு, இந்திய ராணுவத்திடம் உள்ள பல்வேறு ஆயுதங்களை காட்சிப்படுத்தியது.
புதிய மற்றும் நவீன ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
- சர்வதேச விளையாட்டு
போட்டிகளில் விருது பெற்ற வீரர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
ராணுவத்தினருக்கான புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ. 2,770 கோடிக்கு பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிடம் வாங்கும் பிலிப்பைன்ஸ்
- கடந்த 1983-ம் ஆண்டு
முதல் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை தயாரித்து
வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள்
மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும்.
- இந்திய ராணுவம்,
கடற்படை, விமானப்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது.
- இது ஒலியைவிட 3 மடங்கு
வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இந்நிலையில்
தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில், பிலிப்பைன்ஸ்
அரசு இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க
திட்டமிட்டுள்ளது.
- ஏற்கனவே பாதுகாப்பு
தளவாடங்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான இருதரப்பு
ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்நிலையில் பிரம்மோஸ்
ஏவுகணைகளை வாங்க `நோட்டீஸ் ஆஃப் அவார்ட்` ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு
பாதுகாப்புத்துறை அமைச்சர் டெல்பின் லோரன்சனா விரைவில் கையெழுத்திடவுள்ளார்.
- இந்த ஒப்பந்தத்தின்படி
சுமார் ரூ.,2770 கோடி மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து
பிலிப்பைன்ஸிடம் வழங்கும். இது தவிர இந்தோனேசியா உள்ளிட்ட கிழக்காசிய
நாடுகளும், இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம்
காட்டுகின்றன.
2020 - 21ம் ஆண்டுக்கான சிறந்த பரிந்துரைகளுக்கு, ரயில்வே அமைச்சகத்தால்
பரிசு
- ஒவ்வொரு ஆண்டும்
ரயில்வேயில் சிறந்த மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை, அனைத்து ரயில்வே
மண்டலங்கள் மற்றும் தயாரிப்பு பணிமனைகளிலும், இந்திய ரயில்வே அமைச்சகத்தால்
பெறப்பட்டு, சிறந்த பரிந்துரைக்கு பரிசு வழங்கப்படும்.
- இதையொட்டி, 2020 - 21ம்
ஆண்டுக்கான சிறந்த பரிந்துரைகளுக்கு, ரயில்வே அமைச்சகத்தால் பரிசு
அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயில் பாதையில் மேம்பாட்டு பணிக்காகவும், மின்
சிக்கனம், ஆண்டுக்கு 110 கோடி ரூபாய் வரை சேமிக்கும் வகையில், மின்சார ரயின்
இன்ஜின் இயக்கம் குறித்து சிறந்த பரிந்துரை வழங்கியதற்காக, தெற்கு, மேற்கு
ரயில்வேக்கு முதல் பரிசு, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
- இரண்டு நிறுவனங்களுக்கு
பரிசு தொகை 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.மின் சக்தியை இழப்பின்றி
முழுதுமாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டி பரிந்துரைக்கு, தெற்கு ரயில்வேக்கு
மூன்றாவது பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டு, 33 ஆயிரம் ரூபாய்
வழங்கப்படுகிறது.
- ரயில் பெட்டி
தயாரிப்பில், பக்கவாட்டு சுவர் மற்றும் கூரை இணைப்புகளின் மேம்பாட்டு
திட்டங்கள் தொடர்பாக, சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான
ஐ.சி.எப்., அனுப்பிய பரிந்துரை இரண்டாம் பரிசுக்கு தேர்வாகி உள்ளது.
- மின் வினியோக மாற்றிகள்
வாயிலாக மின்சார ரயில் இன்ஜினில் இருந்து பெட்டிக்கு மின் தொடர்பு
மேம்பாட்டுக்கு கிழக்கு ரயில்வேயால் அனுப்பப்பட்ட பரிந்துரை சிறந்த
பரிந்துரைக்கான இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு
நிறுவனங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் பரிசு
வழங்கப்படுகிறது.
India Open 2022 பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார் லக்ஷ்யா
சென்
- கேடி
ஜாதவ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா ஓபன் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு
இறுதிப் போட்டியில் லக்ஷ்யா சென் வென்றார்.
- 54
நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிச்சுற்றில் 20 வயதான சென், சிங்கப்பூரின் லோ
கீன் யூவை 24-22, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
ஏழை நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகள் - உலக சுகாதார அமைப்பு புதிய
சாதனை
- ஐ.நா சபை மூலம் ஏழை
நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் 'கோவேக்ஸ்' திட்டத்தின்கீழ் இதுவரை 100
கோடி தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு
ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
- ருவாண்டாவுக்கு
சனிக்கிழமை 11 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கியதன் மூலம் இந்த எண்ணிக்கை
100 கோடியை எட்டியுள்ளது.
- கரோனா நோய்த்தொற்று
தொடங்கிய பின்னா் பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை கோவேக்ஸ்
என்ற உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை 2020, ஏப்ரலில் தொடங்கியது.
- வளா்ந்த, பணக்கார
நாடுகள் இத்திட்டத்தின்கீழ் நன்கொடையாக அளிக்கும் தடுப்பூசிகளை ஏழை
நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.
அரபிக்கடலில் இந்திய - ரஷிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சி
- அரபிக் கடலில் இந்திய-
ரஷிய கடற்படையினா் வெள்ளிக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய
கடற்படை தெரிவித்துள்ளது.
- இந்தப் பயிற்சியில்
ஈடுபடும் இருநாட்டுக் கடற்படைகளும் இயற்கைப் பேரிடா் அல்லது போா் போன்ற
சூழ்நிலையில், சுமுகமான ஒத்துழைப்பையும், தகவல்தொடா்பையும் ஏற்படுத்திக்
கொள்ளும் வகையில், இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு
செய்யப்படுகின்றன.
- முற்றிலும் உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொச்சி போா்க்கப்பலும், ரஷியாவின் அட்மிரல்
ட்ரிபியூட்ஸ் போா்க்கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன.
- கடல்சாா் நடவடிக்கைகள்,
ஹெலிகாப்டா்களை இருநாட்டுக் கப்பலிலும் தரையிறக்குவதற்கான செயல்பாடுகள்
ஆகியவற்றை உள்ளடக்கி, இருநாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான
ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளையும் இந்தப் பயிற்சி பறைசாற்றியதாக இந்திய
கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட 1,000 வீடுகள் பயனாளிகளிடம்
ஒப்படைப்பு
- இலங்கையில்
உள்ள இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளா்களுக்காக இந்தியாவின் நிதியுதவியுடன்
வீடு கட்டித் தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4,000
வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
- இந்தத்
திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட 1,000 வீடுகள்,
பொங்கல் தினமான சனிக்கிழமையன்று இந்திய வம்சாவளி பயனாளிகளிடம்
ஒப்படைக்கப்பட்டது.
- கோட்டகலா
பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே,
இலங்கை அமைச்சா்கள் நமல் ராஜபட்ச, ஜீவன் தொண்டமான் ஆகியோா் பங்கேற்று
பயனாளிகளிடம் வீட்டுக்கான சாவிகளை ஒப்படைத்தனா்.
- இந்தத்
திட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய
வம்சாவளியினருக்கு இதுவரை 46,000 வீடுகள் புதிதாக கட்டிக்கொடுக்கப்பட்டு
அல்லது மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
- அடுத்த
கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம்
60,000 வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய தூதரகம்
தெரிவித்துள்ளது.
No comments: