TNPSC CURRENT AFFAIRS IMPORTANT EVENTS IN INDIA - PART 2
முதல் முறையாக சுகோய் போர்
விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர்
- அசாம் மாநிலத்துக்கு 3
நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,
தேஸ்பூரில் உள்ள விமானப் படை தளத்துக்கு சென்றார்.
- விமானப்படை வீரர்கள்
அளித்த அணிவகுப்பு மரியா தையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்
கொண்டார். அதன்பின் சுகோய் ரக போர் விமானத்தில் அவர் முதல் முறையாக பறந்தார்.
அந்த விமானத்தை, குரூப் கேப்டன் நவீன் குமார் இயக் கினார்.
- அந்த விமானம் கடல்
மட்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 800 கி.மீ
வேகத்திலும் பறந்தது. சுகோய் போர் விமானத்தில் சுமார் அரை மணி நேரம் பயணம்
செய்த குடியரசுத் தலைவர் பிரம்மபுத்ரா முதல் தேஸ்பூர் வரையில் இமயமலைப்
பகுதிகளை பார்வையிட்டு பின் விமானப்படை தளத்துக்கு திரும்பினார்.
- இதன் மூலம் போர்
விமானத்தில் பறந்த 3வது இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் 2வது பெண்
குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். முன்னாள்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே விமானப்படை
தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் பறந்தார்.
இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை - பட்டியலை வெளியிட்டார்
பிரதமர் மோடி
- பிரதமர் நரேந்திர மோடி
சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணியை (ஐபிசிஏ) தொடங்கி வைத்து, புலிகளின் 50
ஆண்டு நிறைவையொட்டி நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
- முதுமலை பயணத்தை
முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மீண்டும் மைசூரு சென்றார். அங்கு பந்திப்பூர்
தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் பொன்விழா நிகழ்ச்சியில்
பிரதமர் மோடி பங்கேற்றார்.
- நாட்டில் உள்ள புலிகளை
பாதுகாக்க புலிகள் திட்டம் (Project Tiger) என்ற பெயரில் தொடக்கப்பட்ட
திட்டம் 50-ம் ஆண்டை எட்டியுள்ள நிலையில் நாட்டில் உள்ள புலிகளின் மொத்த
எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
- அதன்படி 2006ஆம் ஆண்டு
இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 411 புலிகள் இருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு
அந்த எண்ணிக்கை 1,706 ஆக அதிகரித்தது. 2014ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 226ஆக
அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 967 ஆக உயர்ந்தது.
- ஆண்டுக்கு ஆண்டு
தொடர்ந்து அதிகரித்து வந்த புலிகளின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டில் 3 ஆயிரத்து
167 ஆக அதிகரித்தது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
- 2014ம் ஆண்டு முதல்
2022 வரையிலான 8 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 941 ஆகவும், 2018 முதல் 2022
வரையிலான 4 ஆண்டுகளில் 200 ஆகவும் உயர்ந்துள்ளது.
- நாட்டில் உள்ள புலிகளை
பாதுகாக்க 1973-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான
காங்கிரஸ் அரசு 'புலிகள் திட்டத்தை' (Project Tiger) தொடங்கியது.
- அப்போது முதல் புலிகளை
பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் பலனாக
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம்
ரத்து
- இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேசிய
கட்சி எனும் அங்கீகாரத்தை இழந்தன. இதேபோல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள்
கட்சிக்கு வழங்கப்பட்ட மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தற்போது பாஜக,
காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம், பகுஜன் சமாஜ், என்.பி.பி. ஆகிய கட்சிகள்
தேசிய கட்சிகளாக உள்ளன. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்
பெரும்பான்மையுடன் - மிகப் பெரிய வாக்குப் பங்குகளுடன் ஆட்சியில் உள்ளது.
- மேலும் மார்ச் மாதம்
நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் 6.77% வாக்குகளைப் பெற்றது.
- கடந்த ஆண்டு நடைபெற்ற
குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
அம்பேத்கர் பிறந்தநாளை மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவிப்பு
- இந்திய அரசியலமைப்பு
சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை பொது
விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது.
- ஆனால் இந்த ஆண்டு
அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் வேலை நாள் என பலரும் எண்ணினர்.
சிலர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை
விடுத்தனர்.
- இந்நிலையில், மத்திய
அரசு ஏப்ரல் 14ஆம் தேதியை மத்திய அரசு பொது விடுமுறையாக
அறிவித்துள்ளது.
துடிப்பான கிராமங்கள் திட்டம் இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு
- வடகிழக்கு மாநிலமான,
அருணாச்சல பிரதேசத்தை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
- சில தினங்களுக்கு முன்,
அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சீனா
சூட்டி உள்ளது.
- இந்த விவகாரத்தில்,
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' என்ற
திட்டத்தை, சில தினங்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துவக்கி
வைத்தார்.
- இத்திட்டத்தில், நம்
நாட்டு இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- அம்ரித் மஹோத்சவ்வின்
கூறியிருப்பதாவது:துடிப்பான கிராமங்கள் திட்டத்தை பற்றி, நம் நாட்டு
இளைஞர்கள் அறிந்து கொள்ள, எல்லையோர கிராமங்களுக்கு செல்ல வேண்டும். தற்போது,
ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்கள், அருணாச்சல பிரதேசத்தின் கிபித்துா மற்றும்
டுட்டிங் கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.
- மற்றவர்களும், எல்லையோர
கிராமங்களுக்கு சென்று, அக்கிராமங்களின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ள
வேண்டும். இது, வடகிழக்கு மாநில மக்களின், வாழ்க்கை முறை, நாட்டுப்புற இசை,
அங்கு, வசிக்கும் பழங்குடியினர், அவர்கள் தயாரிக்கும் கைவினை பொருட்கள்
அறிந்து கொள்ளவும் உதவும்.
ஜெய்பூர்-தில்லி கண்டோன்மெண்ட் இடையே ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத்
எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
- ராஜஸ்தானின் முதலாவது
வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி
காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
- முதற்கட்டமாக தொடக்க
நாளில் ஜெய்பூர்-தில்லி கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட
உள்ளது. இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழக்கமான சேவை ஏப்ரல் 13 அன்று
தொடங்கும்.
- இந்த ரயில்
அஜ்மீரிலிருந்து ஜெய்பூர், ஆல்வர், குர்கான் வழியே தில்லி கண்ட்டோன்மென்ட்
வரை இயக்கப்படும். தில்லி கண்ட்டோன்மென்ட்- அஜ்மீர் இடையேயான தொலைவினை இந்த
ரயில் 5 மணி 15 நிமிடங்களில் அடையும்.
- தற்போது இந்த
வழித்தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி 15 நிமிடங்களில் சென்றடைகிறது.
அதே வழித்தடத்தில் தற்போது மற்ற ரயில்கள் செல்லும் நேரத்தைவிட 60 நிமிடங்கள்
விரைவாக புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்படும். புஷ்கர், அஜ்மீர் ஷரிஃப்
தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை இந்த ரயில் இணைக்கும்.
மத்திய அரசுப் பணிகளில் சேர 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி
தொடங்கிவைத்தார்
- அடுத்த ஆண்டு நடைபெற
உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு 'ரோஜ்கார் மேளா'
திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணி வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த
ஆண்டு அறிவித்தார்.
- இந்த திட்டத்தின்படி,
மத்திய அரசின் துறைகளுக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக
பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கி வருகிறார்.
- அந்த வகையில், நாட்டின்
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 71,506 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும்
நிகழ்ச்சியை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
- நாடு முழுவதும் 45
இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் மற்றும்
உயரதிகாரிகள் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது.
வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை - குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர
மோடி திறந்து வைத்தார்
- வடகிழக்கு மாநிலமான
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாதலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
- அந்த மாநிலத்தின்
குவாஹாத்தி நகரில் நடைபெற்ற விழாவில் ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டங்களை
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- குவாஹாத்தியில்
ரூ.1,123 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார்.
இது வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும்.
- அசாமின் நல்பாரி,
நகாவோன், கோகராஜ்ஹர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளையும்
அவர் திறந்துவைத்தார். மேலும் ரூ.14,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
No comments: