Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT EVENTS IN INDIA - PART 1

 


இந்திய நடப்பு விவகாரங்கள்

11வது வந்தே பராத் ரயிலை துவக்கினார் பிரதமர்

  • மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில், போபால் மற்றும் புதுடில்லி இடையேயான, 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • இந்த ரயில் இரு நகரங்களுக்கும் (போபால் - டில்லி) இடையே மொத்தம் 706 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும்.இது நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலாகும். 

2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் முக்கிய சாதனைகள்

  • 2022-23- ம் நிதியாண்டில், சரக்கு ஏற்றுதல், மின்மயமாக்கல், புதிய பாதை/ இரட்டிப்பு/ பாதை மாற்றம், லோகோ உற்பத்தி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய ரயில்வே புதிய சாதனைகளை நிகழ்த்தி மைல்கற்களை எட்டியுள்ளது.
  • 2021-22 நிதியாண்டின் 1418 மெட்ரிக் டன்களுடன் ஒப்பிடுகையில், 2022-23ல் இந்திய ரயில்வே 1512 மெட்ரிக் டன் கையாண்டுள்ளது. இது 6.63% அதிகமாகும்.  ஒரு நிதியாண்டில் ரயில்வேக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றம் இதுவாகும். 2022-23 நிதியாண்டில் வருவாய் ரூ. 2021-22 இன் ரூ.1.91 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.2.44 லட்சம் கோடியாகும். இது 27.75% அதிகமாகும்.
  • சாதனை மின்மயமாக்கல்: 100 சதவீத மின்மயமாக்கலை நிறைவேற்றி, உலகின் மிகப்பெரிய பசுமை ரயில் வலையமைப்பாக இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது. 
  • 2022-23ல் இந்திய ரயில்வே வரலாற்றில் 6,542 கிமீ தூரம் எட்டப்பட்டுள்ளது. முந்தைய அதிகபட்ச மின்மயமாக்கல் 2021-22 இல் 6,366 கி.மீ. ஆக இருந்தது, இது 2.76% அதிகரிப்பாகும்..
  • புதிய பாதைகள் அமைப்பு, பாதை இரட்டிப்பு, தானியங்கி சிக்னலிங், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் அமைப்பு, மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் ஆகிய பணிகளிலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை, பிரதமர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

  • பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியில், சிறந்த சேவைக்காக குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் பெற்றவர்கள், சிபிஐ-யின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கான தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆகியோருக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 
  •  விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பதக்கங்கள் வழங்கினார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் உள்ள சிபிஐ-யின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்துவைத்தார்.
  • சிபிஐ-யின் வைரவிழாக் கொண்டாட்ட ஆண்டின் நினைவாக தபால்தலையை அவர் வெளியிட்டார். 
  • அத்துடன் சிபிஐ-யின் ட்விட்டர் கையாளுதலையும் அவர் தொடங்கிவைத்தார்.
  • சிபிஐ-யின் மேம்படுத்தப்பட்ட நிர்வாகக் கையேடு, வங்கி மோசடி குறித்த விவரங்கள், சிபிஐ வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், வெளிநாட்டு பரிமாற்றத்திற்கான சர்வதேச காவல்துறை ஒத்துழைப்புக் குறித்த கையேடு ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.

பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு - இரு நாடுகளிடையே ரயில் பாதை அமைக்க திட்டம்

  • இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் வாங்சுக் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
  • அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
  • இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக பூடான் உள்ளது. இரு நாடுகள் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன.
  • இந்தியா - பூடான் இடையே ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளோம். இது இருநாடுகள் இடையேயான முதல் ரயில் பாதை திட்டமாக இருக்கும்

ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

  • 'பெட்டிங்' எனப்படும் பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, சுய ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. 
  • இது, ஆன்லைன் விளையாட்டில் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். எத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிக்கலாம்; எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக, இந்த அமைப்புகள் முடிவெடுக்கும்.
  • ஆன்லைன் விளையாட்டைப் பொறுத்தவரை, பந்தயத்துடன் கூடியதா, இல்லையா என்பது தான் முக்கியம். பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டாக இருப்பின், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை இந்த சுய ஒழுங்குமுறை அமைப்புகள் கூறிவிடும். 

ஐநா சபை புள்ளியியல் ஆணைய தேர்தல் - அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி

  • ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணைய தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது. இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும், சீனா 19 ஓட்டுகளும், யுஏஇ 15 ஓட்டுகளும் பெற்றன. தென் கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 2வது வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
  • இந்தியா ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அர்ஜென்டினா, சியரா லியோன், ஸ்லோவேனியா, உக்ரைன், தான்சானியா ஐக்கிய குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனவரி 1, 2024 முதல் 4 ஆண்டு பதவி காலத்திற்கான அங்கீகாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. 
  • இதன்படி ஐநா புள்ளியியல் ஆணையத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டில் 61.9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்(FTAs) இந்தியாவுக்கு வருகை

  • கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (FTAs) இந்தியாவிற்கு வந்துள்ளனர். குடியேற்றப் பணியகத்திலிருந்து பெறப்பட்ட அண்மைத் தகவல்களின்படி, 2022-ம் ஆண்டில் இந்தியா 61.9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்தது.
  • இந்தியாவில் சுற்றுலா மூலம் 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் பெற்ற அந்நியச் செலாவணி வருவாய் (FEE) விவரங்கள் (ரூ. கோடியில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
  • 2021ம் ஆண்டு சுற்றுலா மூலம் பெற்ற அந்நியச் செலாவணி - ரூ. 65,070 கோடி
  • 2022ம் ஆண்டு சுற்றுலா மூலம் பெற்ற அந்நியச் செலாவணி - ரூ. 1,34,543 கோடி
  • நாட்டில் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் சுற்றுலா அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது.
  • நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ”தேகோ அப்னா தேஷ்” முயற்சி தொடக்கம்.
  • சிறந்த சேவைத் தரங்களை வழங்குவதற்காக மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ‘சேவை வழங்குநர்களுக்கான திறன் உருவாக்கம்’ (CBSP) திட்டத்தின் கீழ் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • 24x7 கட்டணமில்லா பல மொழி சுற்றுலா உதவி எண்.
  • 166 நாடுகளின் மக்களுக்கு இ-சுற்றுலா விசா, இ-வணிக விசா, இ-மருத்துவ விசா, இ-மருத்துவ உதவி விசா மற்றும் இ-கான்பரன்ஸ் விசா ஆகிய 5 துணை வகைகளுக்கு இ-விசா வசதியை வழங்குதல்
  • எளிமையாக்கப்பட்ட இ-விசா மற்றும் விசா கட்டணம் கணிசமாக குறைப்பு
  • நாடு முழுவதும் 55 இடங்களில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த நகரங்களில் உள்ள உட்கட்டமைப்புகள் ஜி-20 கூட்டங்களுக்காக மேம்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 

No comments:

Powered by Blogger.