துளசி / THULASI
துளசி / THULASI: வெண் துளசி, கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி உள்ளிட்ட பல ரகங்கள் கொண்ட துளசி செடியின் இலையை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன எனப் பார்ப்போமா?
காற்றிலுள்ள கரியமில வாயுவை கிரகித்து பிராண வாயுவாக வெளியேற்றும் துளசிச் இலையானது நமக்கு உண்டாகும் காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு நீங்க உதவும். குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும். செரிமான ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் பெறலாம்.
துளசி இலை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. துளசி இலை ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவைத் தடுக்கலாம். அக்குள் வியர்வை துர்நாற்றத்தைத் தவிர்க்க நீரில் துளசி இலையைப் போட்டு ஊறவைத்து குளித்தால் துர்நாற்றம் நீங்கும்.
தோலின் படை, சிரங்கு குணமாகும். நாள்பட்ட சளித்தொல்லை, ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதயம் சீராக இயங்க உதவும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு மைபோல் அரைத்து விழுதை தோலில் தடவி வந்தால் படை மறையும்.
சிறுநீரக கோளாறு உடையவர்கள் துளசி விதையை அரைத்து உட்கொண்டு தண்ணீர் பருகிவர இப்பிரச்னை சரியாகும். துளசி இலைக்கு மனஅழுத்தம், நரம்புக் கோளாறு, நினைவுத் திறன் இழப்பு, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
துளசி இலை சாற்றில் தேன், இஞ்சி கலந்து அருந்தலாம். இது நாள்பட்ட சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.
No comments: