ஒன்பிளஸ் நார்ட் 3 / ONEPLUS NORD 3
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் நார்ட்2 மற்றும் நார்ட் 2டி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து, இதன் அடுத்த வெர்ஷனாக நார்ட் 3 மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இது நார்ட் 2 மற்றும் நார்ட்2டி மாடலின் மேம்படுத்தப்பட்டதாக இந்த மாடல் வெளிவரும். இந்த மாடல் போன் பட்ஜெட் போன் மட்டுமல்லாமல், பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக வெளிவரவுள்ளது.
இதன் டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.72 இன்ச் புல் எச்டி கொண்ட AMOLED டிஸ்பிளே இடம்பெறலாம். அதுமட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்ட்சிட்டி 900 (mediatek dimensity 900) பிராசஸர் மூலம் ஆண்ட்ராய்டு 11 இயங்கும். இதில் ட்ரிபிள் கேமரா செட்டப்பாக 50எம்.பி பிரைமரி கேமரா, 8எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்.பி மேக்ரோ சென்சார் கொண்டதாம்.
இதை தவிர முன்பக்கத்தில் 16எம்.பி செல்பி கேமரா வரலாம். 5000எம்ஏஎச் பேட்டரி திறனுடன், அதனை சார்ஜ் செய்ய 80வாட் VOOC சார்ஜ் உடன் வருகிிறதாம். ஸ்டோரேஜை பொருத்த வரையில், ஒன்பிளஸ் 3நார்டில் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் இடம் பெறலாம்.
இந்த மாடல் இந்தியச் சந்தையில் ரூ.27,999ஆக விலை நிர்ணயம் செய்யப்படலாம். வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த மாடல் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கலாம்.
No comments: