Ads Top

சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி / KUTHIRAIVALI BENEFITS IN TAMIL

சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி / KUTHIRAIVALI BENEFITS IN TAMIL

சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி / KUTHIRAIVALI BENEFITS IN TAMIL: தினை வகைகளில் முக்கியமானது ஃபாக்ஸ்டெயில் (Foxtail millet) எனப்படும் குதிரைவாலி. இந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக (International Year of Millets) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் குதிரைவாலி நமக்கு தரும் நன்மைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India - FSSAI) சமீபத்தில் குதிரைவாலி (ஃபாக்ஸ்டெயில்) தினை தரும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளது. 

மேலும் குதிரைவாலி "இதய ஆரோக்கியத்திற்கு நல்லது" என்றும் FSSAI குறிப்பிட்டு உள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பேஜில் குதிரைவாலியின் நன்மைகள் பட்டியலிடப்பட்ட போஸ்ட்டை FSSAI ஷேர் செய்து இருக்கிறது.

ஃபாக்ஸ்டெயில் தினையானது இதய ஆரோக்கியம், சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு நல்லது என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்ட் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. 

FSSAI குதிரைவாலி தினையின் வேறு சில நன்மைகள்

  • சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி / KUTHIRAIVALI BENEFITS IN TAMIL:  நரம்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவுகிறது
  • எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க உதவுகிறது
  • இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
  • சரும ஆரோக்கியம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது
  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

குதிரைவாலியை எப்படி உட்கொள்ளலாம்?

சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி / KUTHIRAIVALI BENEFITS IN TAMIL:  FSSAI பரிந்துரைப்படி குதிரைவாலி தினையை தோசையாக, சீலாஸாக, பேன் கேக்ஸ் மற்றும் குக்கீஸ்களாக செய்யது சாப்பிடலாம். தவிர குதிரைவாலி கிச்சடி, குதிரைவாலி கஞ்சி, குதிரைவாலி பொங்கல் உள்ளிட்டவையும் செய்து சுவைக்கலாம். 

குதிரைவாலி இதய ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது.?

சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி / KUTHIRAIVALI BENEFITS IN TAMIL: புரதம் நிறைந்த மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட மற்றும் க்ளூட்டன்-ஃப்ரீ தானியமான குதிரைவாலி தினையானது தசை மற்றும் நரம்புகளுக்கு இடையே செய்திகளை அனுப்பும் நரம்பியக்கடத்தியான 'Acetylcholine' உருவாக்க உதவுகிறது. 

பிரபல மருத்துவரான டாக்டர் ஷ்ரே ஸ்ரீவஸ்தவ் குதிரைவாலியின் நன்மைகள் குறித்து பேசுகையில், இந்த தினையை எடுத்து கொள்வது உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க உதவுகிறது என்றார்.

தி ஹெல்த் பான்ட்ரியின் நிறுவனரும் மற்றும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான குஷ்பூ ஜெயின் திப்ரேவாலா குதிரைவாலியை பற்றி கூறுகையில், குதிரைவாலி தினை மற்ற தினை வகைகளுடன் ஒப்பிடும் போது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. 

இதற்கு அர்த்தம் என்னவென்றால் குதிரைவாலி சாப்பிட்ட பிறகு உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்காது எனபதாகும். மேலும் இந்த தினை நேரடியாக இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இன்சுலின் ரெசிஸ்டென்ஸை வளர்ப்பதில் இருந்து பாதுகாக்கிறது.

No comments:

Powered by Blogger.