Ads Top

முடி பவுன்சியாக காற்றில் அலைபாய முட்டை பேக் எளிதாக எப்படி போடணும் தெரியுமா? EGG MASKS FOR HAIR TREATMENT

முடி பவுன்சியாக காற்றில் அலைபாய முட்டை பேக் எளிதாக எப்படி போடணும் தெரியுமா? EGG MASKS FOR HAIR TREATMENT

நம்முடைய தலை முடி வேகமாக கொட்டுவதில் இருந்து பாதுகாக்க கூடிய ஒரு அற்புதமான பொருள் முட்டை! முட்டையில் இருக்கக்கூடிய நுண் சத்துக்கள் அனைத்தும் தலைமுடியின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவி செய்கிறது.

ஆனால் முட்டை பயன்படுத்துவதால் ஒருவித துர்நாற்றம் அடிக்கும் என்று நிறைய பேர் அதனை தவிர்க்கின்றனர்.

உங்களுடைய முடி காற்றில் குதித்து குதித்து விளையாட, உங்க முடி பவுன்சியாக இருக்க முட்டை பேக் எளிதாக இப்படி போடுங்க, இனி முடி பிரச்சனை பற்றி நீங்கள் கவலையே பட மாட்டீங்க. சூப்பரான இந்த முட்டை ஹேர் பேக் எப்படி எளிதாக போடுவது? என்பதை இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நம்ம கூந்தல் புசுபுசு என்று பவுன்சியாக இருக்க முதலில் நல்ல ஒரு அடர்த்தி தேவை. அடர்த்தி குறைந்த கூந்தல் காற்றில் அலை பாய்வது கிடையாது. நல்ல ஒரு ஆரோக்கியமான கூந்தலுக்கு முட்டை ஒரு சிறந்த நிவாரணியாக இருந்து வருகிறது. 

இதன் துர்நாற்றம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதில் இருக்கக்கூடிய வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்தலாம், கூடவே சில எசன்ஷியல் ஆயில் சேர்த்துக் கொண்டால் வாசனை வரவே வராது.

முதலில் ஒரு முட்டையை முழுதாக உடைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்தும் சேர்க்கலாம். இதனுடன் அரை மூடி எலுமிச்சை பழத்தை விதைகள் இல்லாமல் பிழிந்து விடுங்கள். 

பின்னர் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பின்பு ஒரு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் சேருங்கள். நீங்கள் நல்லெண்ணைக்கு பதிலாக பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் கூட சேர்க்கலாம்.

எண்ணெய் சேர்த்த பின்பு மீண்டும் மிக்ஸியை இயக்கி அரைக்க வேண்டும். நீங்கள் அரைத்த விழுது ஒரு மயோனைஸ் பதத்துக்கு வர வேண்டும். அப்படி இல்லை என்றால் மீண்டும் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு அரையுங்கள். 

கண்டிப்பாக மயோனைஸ் போல கிரீமி டெக்சருக்கு வரும். இந்த பேக்கை நீங்கள் தலைமுடி முழுவதும் தடவ வேண்டும். தலை முடியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். 

மண்டை ஓட்டு பகுதியை தனித்தனியாக பிரித்து விரல்களால் இந்த கலவையை எடுத்து தடவுங்கள். ஸ்கேல்ப் பகுதியில் எல்லா இடங்களிலும் இது தடவி இருக்க வேண்டும்.

பின்னர் தலைமுடி முழுவதும் தடவுங்கள். உச்சி முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் தடவலாம். பிறகு ஒரு கொண்டை போல தலைமுடியை நன்கு கட்டி வைத்துக் கொள்ளுங்கள் ஒரு 15 லிருந்து 20 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். 

அதன் பிறகு சாதாரணமான ஷாம்பூ கொண்டு தலை முடியை அலசினால் போதும், முடி பவுன்சியாக லேசாக காற்றில் அலைபாயத் துவங்கும். இது போல வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் முடி கொட்டும் பேச்சுக்கு இனி இடமே இல்லை. 

தலை முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து, ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து இழந்த இடத்தில் கூட முடியை மீண்டும் வளர செய்யும்.

No comments:

Powered by Blogger.