- உலர் திராட்சைகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணதிராட்சை பழங்களை வேக வைத்து அதனை வெயிலில் காயவைத்து பிறகு கிடைக்கக்கூடியது உலர் திராட்சை ஆகும்.
- இதிலிருந்து நம் உடலுக்கு பலவிதமான சத்துக்கள் கிடைக்கும் மற்றும் ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. இதனைப் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலர் திராட்சைகளை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு பொருளாகும் . பச்சையாக திராட்சைகளை உண்பதை விட உலர் திராட்சைகளில் இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- உலர் திராட்சையில் நிறைந்துள்ள சத்துக்களான விட்டமின் பி,சி, போலிக் ஆக்சைடுகள், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகபடியாக நிறைந்துள்ளது.
- இதனை உட்கொள்வதன் காரணமாக நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வியாதி களிலிருந்து வெளியேற உதவும்.
- 10 உலர் திராட்சைகளை நீரில் சுத்தம் செய்த பிறகு தினமும் காலையில் இதனை சாப்பிட்டு வருவதன் காரணமாக கெட்ட கொழுப்புகளை அளித்து உடல் எடையை குறைக்க உதவும்.
- கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம் இதன் விளைவாக கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து சீராக்க உதவுகிறது. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் தினசரி காலையில் உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்வது நல்லதாகும்.
- உலர் திராட்சை அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் சூடு உள்ளவர்கள் 250 எம்எல் நீருடன் 10 உலர் திராட்சைகள் சேர்த்து நன்றாக வேக வைத்து மிதமான சூட்டில் நீர் மற்றும் உலர் திராட்சை இரண்டையும் அருந்துவதன் காரணமாக உடல் சூட்டின் அளவை குறைத்து சீராக்க உதவுகிறது.
- மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலி அதிக ரத்தப்போக்கு உடல் சோர்வு ஆகியவை ஏற்படும் இதனை குறைக்க ஒரு கப் உலர் திராட்சைகள் வேகவைத்து அதன் பிறகு காலையில் உட்கொள்ள வேண்டும்.
- ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி காலையில் உலர் திராட்சைகளை உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நரம்புகளை சுருங்கி விரிவதற்கு மிகவும் உதவுகிறது. இதன் விளைவாக இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
உலர் திராட்சை - மருத்துவ பயன்கள் / DRY GRAPES - MEDICAL BENEFITS
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 18, 2023
Rating:
5
No comments: