TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 12
வைரக்கல் திருட்டால் 30 ஆண்டு பகை தாய்லாந்தை மன்னித்தது சவுதி
- தாய்லாந்து பிரதமர்
பிரயூத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பழைய
பகைமையை மறந்து, இரு நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல்
நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஒப்புக் கொண்டதாக சவுதி அரசு அதிகாரிகள் வெளியிட்ட
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- முன்னதாக, சவுதி
இளவரசரின் அரண்மனையில் பணிபுரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த வாயிற்காவலர்
அங்கிருந்து ரூ.150 கோடி மதிப்பிலான 50 காரட் நீல வைரக்கல்லை கொள்ளையடித்து
சென்ற பிறகு, தாய்லாந்து நாட்டினருக்கு விசா வழங்குவது, தாய்லாந்து
முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை வருவது ஆகியவற்றை சவுதி அரசு
தடை செய்திருந்தது.
- வைரக்கல்லை திரும்பி தரக்
கோரிக்கை விடுத்த 3 சவுதி அரசு அதிகாரிகள் பாங்காக்கில் சுட்டுக்
கொல்லப்பட்டனர். இதுவரை யாரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்காக கைது கூட
செய்யப்படவில்லை.
- தற்போது இந்த
தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ள தாய்லாந்து அரசு, 1989-90ம் ஆண்டுகளில்
நடந்த இந்த கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி
அளித்துள்ளது.
என்.டி.ஆர், ஸ்ரீ பாலாஜி உட்பட 13 மாவட்டங்கள் புதிதாக உதயம் - ஆந்திர அரசு
- ஆந்திராவில்
மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 லிருந்து 26 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, திருப்பதியை மாவட்ட தலைநகராக கொண்ட ஸ்ரீ
பாலாஜி மாவட்டம் உதயமாகிறது.
- ஓய்.எஸ். ஜெகன் மோகன்
ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு தற்போது ஆந்திராவில் இருக்கும்
மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 ல் இருந்து 26 ஆக உயர்த்த முடிவு செய்து
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- ஆந்திராவில் தற்போது
ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி,
கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், பிரகாசம்,அனந்தபுரம் ,கர்நூல், கடப்பா,
சித்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் உள்ளன.
- நிர்வாக காரணங்களுக்காக
ஆந்திராவில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்திருந்தது.
இந்தநிலையில் பதிமூன்று மாவட்டங்களையும் இருபத்தி ஆறு மாவட்டங்களாக
மாற்றியமைக்க தேவையான அரசாணையை மாநில அரசு இன்று வெளியிட்டது.
- புதிதாக அமைய இருக்கும்
மாவட்டங்களுக்கு மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, அனகாப்பள்ளி, காக்கிநாடா,
கோனசீமா, ஏலூரு, என்டிஆர் மாவட்டம், பாபட்லா, பல்நாடு, நந்தியாலா,
ஸ்ரீசத்யசாய், அன்னமய்யா, மற்றும் ஸ்ரீ பாலாஜி என்று பெயரிடப்பட்டுள்ளன.
- இந்த நிலையில் ஓய்.
எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சந்திரபாபு
நாயுடுவின் மாமனாரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆன என்.டி.
ராமராவ் பெயரில் புதிய மாவட்டம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படை மேற்கொண்ட கூட்டு கடல்சார் பயிற்சி
நிறைவு
- ‘பாஸ்சிம் லெகர்’ என்ற
பெயரில் கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட கூட்டுக்
கடல்சார் பயிற்சி 2022 ஜனவரி 25ம் தேதி நிறைவடைந்தது.
- இந்தியக் கடற்படை,
விமானப்படை, ராணுவம் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படைகள் இடையே ஒத்துழைப்பை
அதிகரிப்பதற்காகவும், தனது செயல்பாட்டுத் திட்டங்களை மதிப்பிடுவதற்காக இந்திய
கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் இந்த கூட்டுப் பயிற்சியை 20
நாட்கள் நடத்தியது. கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையத் தலைமை
அதிகாரியின் கீழ் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
- இந்த கூட்டுப்
பயிற்சியில், இந்தியக் கடற்படையின் 40 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்
கப்பல்கள் பங்கேற்றன. மேலும், சுகாய், ஜாக்குவர், விமானங்களுக்கு நடுவானில்
எரிபொருள் நிரப்பும் விமானம், அவாக்ஸ் ரேடாருடன் கூடிய விமானங்கள் ஆகியவற்றை
விமானப்படை அனுப்பியது. கடற்படையின் கண்காணிப்பு விமானங்கள் பி8ஐ, டார்னியர்,
ஐஎல் 38, மிக் 19கே ரக விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றன. இந்திய
ராணுவத்தின் படைப்பிரிவுகள், கடலோரக் காவல்படையின் கப்பல்களும் இந்த கூட்டுப்
பயிற்சியில் பங்கேற்றன.
- தற்போதைய கடல்சார்
சவால்களை எதிர்கொள்ள, அனைத்துப் படைப்பிரிவுகளும் கூட்டாகச் செயல்படுவதற்கான
வாய்ப்பை இந்தப் பயிற்சி வழங்கியது.
இந்தியா – பிரான்ஸ் இடையிலான அறிவியல் & தொழில்நுட்பத்துறை
ஒத்துழைப்புகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா மற்றும்
பிரான்ஸ் இடையிலான அறிவியல் & தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பில் முக்கிய
மைல் கல்லாக, சுகாதார ஆராய்ச்சியில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை
மேம்படுத்தும் விதமாக, மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக்
குழுமமும், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டியர் நிறுவனமும் புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- அறிவியல் மற்றும்
தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், பாஸ்டியர் நிறுவனமும் கூட்டாக ஆராய்ச்சிகளை
மேற்கொள்ள உள்ளன. புதிதாக மற்றும் மீண்டும் தோன்றும் தொற்று நோய்கள் மற்றும்
பரம்பரைக் கோளாறுகள் மற்றும் வலுவான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரசேவைத்
தீர்வுகளை இந்தியா மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும்
உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
- மேலும், சாத்தியமான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும், மனித
ஆரோக்கியத்தில் நவீன மற்றும் புதிதாக உருவாகும் பிரச்சினைகளில், அறிவியல்
மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்திற்குட்பட்ட நிறுவனங்கள்/ஆய்வுக்கூடங்கள்
மற்றும், பாஸ்டியர் நிறுவனத்தின் சர்வதேச கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து
பணியாற்றவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
- அறிவியல் மற்றும்
தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனரும், மத்திய அரசின் அறிவியல்
மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் சேகர்
சி.மன்டே-யும், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டியர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர்
ஸ்டீவர்ட் கோல் ஆகியோர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு
- தற்போது ப்ரீ-பெய்டு
செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28
நாட்களாகவே இருக்கின்றன.
- இதனால் ஆண்டுக்கு 13
முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து
தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த
வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
- அதன்படி, சிறப்பு
டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் செல்லுபடியாகும் காலத்தை 30
நாட்கள் நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ப்ரீபெய்டு
ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு 2022
- இந்தியா, மத்திய ஆசிய
நாடுகளின் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தான்
அதிபர் ஷாகத் மிர்ஜியோவ், துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்தேமுகமது,
கஜகஸ்தான் அதிபர் காஸ்யம் ஜோமார்ட் டோகோயெவ், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர்
ஜாபாரோவ், தஜிகிஸ்தான் அதிபர் எமமாலி ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயி லாக ஆலோசனை நடத்தினார்.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு
- ஒன்றிய அரசு நிறுவனமான
ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத்
தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை
எடுத்து வந்தது.
- டாடா குழுமம் அளித்த ஏல
விவரங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர்
இந்தியாவை டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம்
வாங்கியது.
- இந்நிலையில், ஏர்
இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.
ஏர் இந்தியாவின் பங்குகள் டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெடிடம்
ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா
குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் TCSக்கு 2ம் இடம்
- பிராண்ட் ஃபைனான்ஸ்
(Brand Finance) என்பது உலகின் முன்னணி பிராண்ட் மதிப்பீடு மற்றும்
கன்சல்டன்சி நிறுவனமாகும். இது லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டது.
- ஆண்டுதோறும் உலகின்
மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2022ம் ஆண்டுக்கான உலகின் மதிப்புமிக்க 25 ஐடி நிறுவனங்களின்
பட்டியலை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
- இதில் கடந்த ஆண்டு 2வது
இடத்தில் இருந்த ஐபிஎம்-ஐ பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனம்
இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
- முந்தைய ஆண்டுடன்
ஒப்பிடும் போது டிசிஎஸ் நிறுவனம் 12% வளர்ச்சியை பெற்றுள்ளது. அதே போல 2020ம்
ஆண்டில் இருந்து 24% வளர்ச்சியில் அந்நிறுவனம் எட்டியிருக்கிறது. இதன் முலம்
இந்த காலகட்டத்தில் 16.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு டிசிஎஸ்
நிறுவனத்தின் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது.
- உலகின் மதிப்புமிக்க
ஐடி நிறுவனமான அசென்சர் முதல் இடத்தில் நீடித்து வருகிறது. மற்றொரு இந்திய
நிறுவனமான இன்போசிஸ் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. 2ம் இடத்தில் இருந்த
ஐபிஎம் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
- டிசிஎஸ் மட்டுமல்லாது
இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, ஹெச்.சி.எல், LTI போன்ற பிற இந்திய
நிறுவனங்களும் இந்த டாப் 25 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
5ஜி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புக்கு லார்சன் & டப்ரோ
இன்ஃபோடெக் (எல்டிஐ) நிறுவனத்துடன் சென்னை ஐஐடி கூட்டு முயற்சி
- 5ஜி தொழில்நுட்பத்தில்
புதிய கண்டுபிடிப்புக்கு உலகளாவிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் டிஜிட்டல்
தீர்வுகளுக்கான நிறுவனம் லார்சன் & டப்ரோ இன்ஃபோடெக்-வுடன் இந்தியாவின்
முன்னணி ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி கூட்டு
முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் ஊரகப் பகுதியில் குறைந்த செலவில் 5ஜி
வலைப்பின்னல் சேவை தொடர்பை சிறந்த முறையில் அளிப்பதற்கான ஆராய்ச்சியில் இவை
ஈடுபட உள்ளன.
- ஊரகப் பகுதி தகவல்
தொழில்நுட்ப தொடர்புக்கு 5ஜி அடிப்படை நிலையத்தை குறைந்த செலவில்
உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
கிராமங்களில் அதிவேக இணைய இணைப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு தொலைத் தொடர்பு
உள்கட்டமைப்பு கொள்கை வெளியீடு
- கிராமங்களில் கைபேசி
சேவையை அதிகரிக்கவும், அதிவேக இணையவசதிகளை அளிக்கவும் புதிதாக தமிழ்நாடு
தொலைத் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.
- கிராமங்களில் இணைதயள
வசதியை அளிக்கும் வகையில் பாரத்நெட், தமிழ்நெட் திட்டங்களை தமிழக அரசு
செயல்படுத்தி வருகிறது.
- இந்நிலையில், கிராமங்களில்
தடையில்லா கைபேசி சேவையை அதிகரிக்கும் வகையிலும், அதிவேக இணையதள வசதியை
அளிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் உயர்தர தொலைத்தொடர்பு
மற்றும் இணைய வசதிகளை அளிக்கும் வகையிலும் தமிழக அரசு, 'தமிழ்நாடு தொலைத்
தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கை'யை உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணையை தகவல்
தொடர்புத்துறை செயலர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ளார்.
- இந்த கொள்கையில்,
தொலைத் தொடர்பு வசதி தொடர்பான பல்வேறு கட்டணங்கள், விண்ணப்பம் மற்றும் அனுமதி
அளிக்கும் முறை, குறைதீர்க்கும் வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- குறிப்பாக, வலுவான
மற்றும் பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில்
இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு ஏற்ற
தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்கமாகும். RoW எனப்படும்
ரைட் ஆப் வே அனுமதி வழங்குவதற்கு புதிய கட்டணங்களை அரசு அறிவித்துள்ளது.
- தரைக்கு கீழ் தொலைத்
தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்க அனுமதி கோரும் விண்ணப்பத்துக்கு ஒரு கிலோ
மீட்டருக்கு ரூ.1,000 என்ற திரும்பப் பெற முடியாத கட்டணம் அல்லது அதன் ஒரு
பகுதியை வரியாக செலுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- அதேபோல, கைபேசிக்கான
கோபுரங்கள் நிறுவுவதற்கான விண்ணப்பத்துக்கு, ஒருமுறை திரும்பப் பெறாத
கட்டணமாக ஒரு கோபுரத்துக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு ஏற்ற
தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்கமாகும்.
புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்
- மத்திய
நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் வி.ஆனந்த
நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார
ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில்
அப்பதவிக்கு தற்போது நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2019 முதல் 2021ஆம்
ஆண்டு வரையிலான காலத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர
உறுப்பினராகப் பணியாற்றியுள்ள ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத்தில் உள்ள இந்திய
மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
- தொடர்ந்து மாசசூசெட்ஸ்
பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளார். 1994
மற்றும் 2011 க்கு இடையில் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல
தனியார் செல்வ மேலாண்மை நிறுவனங்களுக்கு மேக்ரோ-பொருளாதார மற்றும் மூலதன சந்தை
ஆராய்ச்சியில் பல தலைமைப் பாத்திரங்களை அவர் வகித்துள்ளார்.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குகிறது பிலிப்பைன்ஸ்
- இந்திய
- ரஷ்ய கூட்டு தயாரிப்பான, சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த பிரம்மோஸ் ஏவுகணையை
இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேன் பிரைவேட் நிறுவனம் உருவாக்கி
வருகிறது.
- நீர்மூழ்கிகள்,
போர் கப்பல்கள், விமானங்கள் என அனைத்து பரப்பில் இருந்தும் பிரம்மோஸ்
ஏவுகணையை பயன்படுத்த முடியும். அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட இந்த ஏவுகணையை
இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்துள்ளது.
- இதற்காக
28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ்
கையெழுத்திட்டுள்ளது. அதன்படி எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையிலான
பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து, இந்தியா வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'ஏஎல்எச் எம்கே 3' ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் இணைப்பு
- பெங்களூரு
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 புதிய
ரக ஹெலிகாப்டர்கள் முறைப்படி போர்ட்பிளேரில் உள்ள ஐஎன்எஸ் உத்க்ரோஷ் ராணுவத்
தளத்தில் சேர்க்கப்பட்டன. இதனை, அந்தமான் - நிக்கோபர் ராணுவப் பிரிவின்
லெப்டினண்ட் ஜெனரல் அஜய் சிங் பெற்றுக்கொண்டார்.
- ஹிந்துஸ்தான்
ஏரோனாடிக்ஸ் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஏஎல்எச் ஹெலிகாப்டர்களை இந்திய
ராணுவத்திற்கு தயாரித்துள்ளது. அதில் ஏஎல்எச் எம்கே 3 ரக ஹெலிகாப்டர் அதிநவீன
வசதி கொண்டது.
பிக் பாஷ் லீக் கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி
- மெல்போர்னில்
நடைபெற்ற பிபிஎல் இறுதிச்சுற்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ்
அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
- முதலில்
பேட்டிங் செய்த பெர்த் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள்
எடுத்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த சிட்னி அணி, 16.2 ஓவர்களில் 92 ரன்கள்
மட்டும் எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
- பிபிஎல்
கோப்பையை வென்ற பெர்த் அணி, 4-வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. பிபிஎல்
கோப்பையை நான்கு முறை வென்ற முதல் அணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி - இந்தியாவுக்கு வெண்கலம்
- மஸ்கட்டில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் அசத்தலான ஆடிய இந்தியா
2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய வீராங்கனை ஷா்மிளா தேவி ஆட்டநாயகி
ஆனாா்.
150 கிராமங்களுக்கு இஸ்ரேல் வேளாண் தொழில்நுட்ப உதவி
- வேளாண் துறையில் ஒத்துழைப்பை
மேலும் அதிகரிக்க இந்தியாவும் இஸ்ரேலும் முடிவு செய்துள்ளன. இதன்படி, 29
வேளாண்மை திறன் மையங்களை சுற்றியுள்ள 150 கிராமங்களுக்கு இஸ்ரேல் நாட்டின்
தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இந்தியக் கடற்படை மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்
இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியக் கடற்படை வேலை
வாய்ப்பு நிறுவனம் (ஐஎன்பிஏ) மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ்
லிமிடெட் ஆகியவை 27 ஜனவரி 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன.
- முன்னாள் கடற்படை
வீரர்களை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் பணியமர்த்துவதற்காக
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்தியக் கடற்படைப்
பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும்
இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் செயல் இயக்குநர் மற்றும் தலைமை
நிர்வாக அதிகாரி திரு மோனு ராத்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர்.
- முன்னாள்
படைவீரர்களுக்கு அவர்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் சேவைக் காலத்தில் பெற்ற
திறன்களுக்கு ஏற்ப வாய்ப்புகளை வழங்குவதை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ்
லிமிடெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் திட்டத்தின் முதல் கப்பலைக் கட்டும் பணி
கொல்கத்தாவில் தொடக்கம்
- நீர்
மூழ்குதல் ஆதரவு கப்பல் (டிஎஸ்சி) திட்டத்தின் முதல் கப்பலின் கட்டுமானப் பணி
27 ஜனவரி 2022 அன்று கொல்கத்தாவில் உள்ள டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட்
நிறுவனததில் தொடங்கியது. இந்தியக் கடற்படையின் பிரதிநிதிகள் காணொலி மூலம்
இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- இந்தியக்
கடற்படைக்கு ஐந்து டிஎஸ்சிக்களை (யார்டுகள் 325 முதல் 329 வரை) கொள்முதல்
செய்வதற்கான ஒப்பந்தம் டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பிப்ரவரி
21-ல் கையெழுத்தானது.
- துறைமுகத்திற்கு
உள்ளேயும் அருகாமையிலும் உள்ள கப்பல்களுக்கு டைவிங் உதவி, நீருக்கடியில்
பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக இந்தக்
கப்பல்கள் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்படும். நவீன நீர்மூழ்கிக் கருவிகள்
கப்பல்களில் பொருத்தப்படும்.
- அனைத்து
முக்கிய மற்றும் துணை உபகரணங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து
பெறப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் மேக் இன் இந்தியா முன்முயற்சிகளுக்கு
இந்த கப்பல்கள் பெருமை சேர்க்கின்றன.
ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடுதல் - நாசிக் ரூபாய்
நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் வங்கி நோட்டு நிறுவனத்தில் தொடக்கம்
- நவீனமயமாக்கல்
நடவடிக்கைகளின் கீழ், ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும்
பணியை, நாசிக்-ல் உள்ள ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் நகரில் உள்ள
வங்கி நோட்டு அச்சகத்தில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய
நிறுவனம்(எஸ்பிஎம்சிஐஎல்) தொடங்கியது.
- நாசிக்கில் உள்ள ரூபாய்
நோட்டு அச்சகத்தில், புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை
நிதியமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திருமதி மீனா ஸ்வரூப் ஜனவரி 27ம் தேதி
தொடங்கி வைத்தார்.
- தேவாஸ் நகரில் உள்ள
வங்கி நோட்டு அச்சகத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை ஆலோசகர் திரு சசாங்
சக்சேனா காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
No comments: