Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 3

 


அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 6 ஆண்டுகளில் 3.68 கோடி பதிவு

  • அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 3.68 கோடி பதிவு செய்துள்ளனா். நடப்பு நிதியாண்டில் மட்டும் 65 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்கள் பதிவு செய்துள்ளனா்.
  • இந்த நிதியாண்டில் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் சந்தாதாரா்கள் இணைந்துள்ளனா்.
  • ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தவா்களில் ஆண்கள் 56 சதவீதம், பெண்கள் 44 சதவீதம். இந்த ஓய்வூதிய நிா்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு சுமாா் ரூ. 20,000 கோடி ஆகும்.
  • இந்திய அரசின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. குறிப்பாக, அமைப்புசாராத் துறைகளில் உள்ள குடிமக்களுக்கு வயதான காலத்தில் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியால் 2015, மே 9-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

117 தடகள வீரர்களுக்கான தேசிய முகாமை மார்ச் 31 வரை நீட்டிக்க இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல்

  • இந்த ஆண்டின் பிற்பகுதியில் பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஹாங்சூவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த 5 இடங்களில் 45 பயிற்சியாளர்களைக் கொண்டு 117 தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் தேசிய முகாமை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 64 வீரர்கள், 53 வீராங்கனைகளுக்கு பாட்டியாலா, திருவனந்தபுரம், பெங்களுரு, புதுதில்லி, பாலுசேரி ஆகிய 5 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 
  • ஓட்டப் பந்தயம், தடையோட்டம், நடைபோட்டி, நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், மாரத்தான், சுத்தி எறிதல், ஹெப்பதலான் போன்ற போட்டிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு

  • இந்து சமய அறநிலையத் துறையில், அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • இந்த உயர்நிலைக் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராகவும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
  • மேலும், 17 பேர் கொண்ட இந்த குழுவில், அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சு.கி.சிவம், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருப்பார்கள்.
  • மேலும், இந்த குழுவில் முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், நீதியரசர் டி. மதிவாணன் (ஓய்வு), திரு.கருமுத்து தி.கண்ணன், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், திரு.ந. இராமசுப்பிரமணியன், திரு. தரணிபதி ராஜ்குமார், திரு.மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன், திருமதி ஸ்ரீமதி சிவசங்கர், திருமதி தேச மங்கையர்க்கரசி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏவுகணை சோதனை மீண்டும் நடத்தியது வட கொரியா

  • ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய அதிநவீன, 'ஹைப்பர்சோனிக்' வகை ஏவுகணையை வட கொரியா தயாரித்துள்ளது. கடந்தாண்டு செப்.,ல் இது முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது. 
  • இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனை இரண்டாவது முறையாக நடந்தது. இந்த ஏவுகணை 700 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை திட்டமிட்டபடி தாக்கியதாக வட கொரியா கூறியுள்ளது. 

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை அதிகரிப்பு

  • வேட்பாளர்களுக்கான நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுத் தொகையை மத்திய சட்ட அமைச்சகம் அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்துடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த செலவுத் தொகை உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகை உச்ச வரம்பு ரூ. 70 லட்சத்திலிருந்து ரூ. 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ரூ. 54 லட்சமாக இருந்த உச்ச வரம்பு ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதேபோல தமிழகம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகை உச்ச வரம்பு ரூ. 28 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் உச்ச வரம்பானது ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 28 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • பசுமை எரிசக்தி திட்டம் இரண்டாம் கட்டத்தில் தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையிலான பசுமை மின் வழித்தட 2-ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ரூ.12,031 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தின் மூலம் தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சுமார் 20 ஜிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • 2030க்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. திட்டத்தில் 7 மாநிலங்களுக்கு மத்திய அரசின் பங்காக, ரூ.3,970.34 கோடி பகிர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இரண்டாம் கடா பசுமை எரிசக்தி திட்டத்தை 5 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்துக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த மாதம் ரூ.183.67 கோடியை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு

  • தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை விடுவித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. தமிழகத்துக்கு 2021- 2022-ல் இதுவரை ரூ. 1,836.67 கோடியை ஒன்றிய அரசு விடுத்துள்ளது.
  • வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.9,871 கோடியை இன்று விடுவித்துள்ளது. 
  • இது மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மானியத்தின் 10-வது தவணையாகும். தகுதி வாய்ந்த மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.98,710 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • அரசியல் சாசனத்தின் 275-வது பிரிவின்படியும், வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மாதம் தோறும் இந்தத் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதன்முறை தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பு

  • தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் கேள்விநேரம் சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

பேரிடர் மேலாண்மை துறையில் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேரிடர் மேலாண்மை செயல்முறைகளால் பயனடைவதோடு, பேரிடர் மேலாண்மைத் துறையில் தயார்நிலை, எதிர்வினை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த இயலும் .
  • தற்போது வரை, சுவிட்சர்லாந்து, ரஷியா,, ஜெர்மனி, ஜப்பான், தஜிகிஸ்தான், மங்கோலியா, பங்களாதேஷ், இத்தாலி ஆகிய நாடுகள் மற்றும் சார்க் அமைப்புடனும் பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்புக்கான இருதரப்பு / பலதரப்பு ஒப்பந்தம் / புரிந்துணர்வு ஒப்பந்தம் / கூட்டு ஒப்பந்தம் / ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • சுங்க வரி ஏய்ப்பு குற்றவாளிகளைப் பிடிக்கவும், இது தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும், புலனாய்வு செய்யவும் தேவையான, ரகசிய தகவல்களை நம்பகமான முறையில் விரைவாகவும், குறைந்த செலவிலும் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.
  • இரு நாடுகளின் சுங்கவரி அதிகாரிகளும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான சட்ட நடைமுறைகளை இந்த ஒப்பந்தம் வழங்குவதுடன், சுங்கவரி சட்டங்களை முறையாக செயல்படுத்தவும், சுங்க குற்றங்களை கண்டுபிடித்தல், புலனாய்வு செய்தல் மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா - நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளிடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும். நெருங்கிய அண்டை நாடுகளாக, இந்தியாவும் நேபாளமும் தனித்துவமான நட்பு மற்றும் ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன, 
  • இது ஒரு திறந்த எல்லை மற்றும் உறவுமுறை மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான வேரூன்றிய மக்களிடையேயான தொடர்புகளால் வகைப்படுத்தப்படுகிறது. 
  • இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரண்டும் வெவ்வேறு பிராந்திய மன்றங்களில் அதாவது SAARC, BIMSTEC மற்றும் உலகளாவிய மன்றங்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

No comments:

Powered by Blogger.