Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT EVENTS IN INDIA - PART 4

 


11 சதுப்பு நிலங்களை ராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்த்த இந்தியா

  • இந்தியவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், 13,26,677 ஹெக்டேர் பரப்பளவில் 75 ராம்சர் தளங்களை உருவாக்க, ராம்சர் தளங்களின் பட்டியலில் மேலும் 11 ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த 11 புதிய தளங்களில் தமிழ்நாட்டில் 4 தளங்கள், ஒடிசாவில் 3, ஜம்மு & காஷ்மீரில் 2 மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று (1) ஆகியவை அடங்கும். இதனால் தற்போது நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

  • 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வானொலி இணைப்பிற்கு இந்த துவக்கம் மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
  • நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பத்ம விருது பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் விழாவில் கலந்து கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு, அவர்களை வரவேற்றார். 
  • அகில இந்திய பண்பலையாக மாறும் முயற்சியில், அகில இந்திய வானொலியின் பண்பலை சேவை விரிவாக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்றார் அவர். 
  • அகில இந்திய வானொலியின் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்பட்டிருப்பது, 85 மாவட்டங்கள் மற்றும் நாட்டின் 2 கோடி மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு என்று அவர் குறிப்பிட்டார். 
  • நாட்டில் பண்பலை வானொலித் தொடர்பை விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ள நிலையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 84 மாவட்டங்களில் இந்த 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. 
  • முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளின் தொடர்பை விரிவாக்குவதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரப்பிரதேசம், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இவற்றுள் அடங்கும். 
  • இந்த விரிவாக்கத்தின் மூலம் அகில இந்திய வானொலியின் பண்பலைச் சேவை இதுவரை கிடைக்கப்பெறாத 2 கோடி மக்கள் இப்போது பயனடைவார்கள். சுமார் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஒலிபரப்பு விரிவாக்கம் பெறும்.

மார்ச்-2023-க்கான எட்டு முக்கிய தொழில் துறைகளின் குறியீட்டு எண் 

  • எட்டு முக்கிய தொழில் துறைகளில் குறியீட்டு எண் மார்ச் 2022ஐ ஒப்பிடுகையில், மார்ச் 2023-ல் 3.6 சதவீதமாக (தற்காலிகமானது) அதிகரித்தது. நிலக்கரி, உரம், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, மார்ச் 2023-ல் அதிகரித்தது. நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்புப் பொருட்கள், உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு தொழில் துறைகள் தொழில் உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
  • நிலக்கரி உற்பத்தி 12.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், உரங்களின் உற்பத்தி 9.7 சதவீதமும், எஃகு உற்பத்தி 8.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது.
  • கச்சா எண்ணெய் உற்பத்தி 2.8 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 0.8 சதவீதமும், மின்சார உற்பத்தி 1.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட, 2023 மார்ச் மாதத்தில் உற்பத்தி குறைந்தது.

கடற்படை செயல்பாடுகள் பிரிவின் தலைமை இயக்குநராக வைஸ் அட்மிரல் அதுல் ஆனந்த் பொறுப்பேற்றார்

  • இந்திய கடற்படை செயல்பாடுகள் பிரிவின் தலைமை இயக்குநராக வைஸ் அட்மிரல் அதுல் ஆனந்த் பொறுப்பேற்றார். அவர் 01 ஜனவரி 1988 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகக் கிளையில் நியமிக்கப்பட்டார். 

கோப் இந்தியா 2023 பயிற்சி

  • இந்திய விமானப்படை, அமெரிக்க விமானப்படை இடையேயான கோப் இந்தியா 2023 எனும் இருதரப்பு பயிற்சி அர்ஜன்சிங் (பனாகர்), கலைக்குண்டா, ஆக்ரா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் நடைபெற்றது. 
  • இந்தப் பயிற்சி இருநாடுகளின் விமானப் படைகளுக்கிடையே பரஸ்பர புரிதலை அதிகரிப்பதையும் தங்களின் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதையும், நோக்கமாகக் கொண்டது.
  • இந்தப் பயிற்சியின் முதல் கட்டம் இன்று தொடங்கியது. இந்தப்பயிற்சியில் பார்வையாளராக ஜப்பான் வான்வழி தற்காப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

சிஏபிஎப் காவலர்கள் (பொதுப்பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

  • பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (சிஏபிஎப் ) காவலர்கள் (பொதுப் பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு.அமித் ஷாவின் முயற்சியில், உள்ளூர் இளைஞர்கள் சிஏபிஎப்-ல் சேர்வதற்கும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, வினாத்தாள் பின்வரும் 13 பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் -  அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி & கொங்கனி

இந்திய கடற்படையின் பணியாளர் சேவை கட்டுப்பாட்டாளராக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்

  • வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஏப்ரல் 17-ந் தேதி இந்திய கடற்படையின் பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளராகப் பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பணியில் சேர்ந்த அவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்களில் நிபுணராவார். 
  • அவர் கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இங்கிலாந்தின் ஸ்ரீவென்கம் இணைப்படைப்பிரிவு கல்லூரி, கராஞ்சா கடற்படை கல்லூரி, அமெரிக்காவின் நியூபோர்ட் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் அவர் பயின்று தேர்ச்சிபெற்றார்.
  • அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற அவர், ஏவுகணைக் கப்பல்களான ஐஎன்எஸ் வித்யுத், ஐஎன்எஸ் வினாஷ், ஐஎன்எஸ் குலிஷ்; வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் ஐஎன்எஸ் மைசூர்; விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.
  • பதவி உயர்வு பெற்று, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) அவர் பணியாற்றினார். 
  • இந்திய கடற்படையில் அனைத்து பயிற்சிகளையும் நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். பல்வேறு பதவிகளை வகித்த அவர், மேற்கு கடற்படை கமாண்டிங் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

வைர விழாவைக் கொண்டாடும் இந்திய விமானப் படையின் 44-வது படைப்பிரிவு

  • இந்திய விமானப்படையின் 44-வது படைப்பிரிவு சண்டிகரில் இந்த ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்த படைப்பிரிவின் புகழ்பெற்ற வரலாறு, நவீன கால இந்தியாவின் ராணுவ வரலாறு மற்றும் ராணுவ இராஜதந்திரத்தின் கலவையாகும். 
  • தைரியம், துணிவு, வீரம், பக்தி மற்றும் தொழில்முறை ஆகியவற்றிற்கு பெயர் போன இந்திய விமானப்படை, இப்படையின் சாகசங்களால் நிரம்பியுள்ளது.
  • 1961-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி தோற்றுவிக்கப்பட்ட இந்த படை, 1985-ம் ஆண்டு வரை AN-12 விமானம் கொண்டு இயக்கப்பட்டது. 1985-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படை IL-76 விமானத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. 
  • அதே ஆண்டு ஜூன் 16-ம் தேதி இப்படை முதன்முறையாக இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு நடைபெறவிருந்த வைர விழா கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
  • "வசுதைவ குடும்பகம்" என்ற தேசத்தின் நம்பிக்கைக்கு இணங்க, நாட்டின் குடிமக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தேவைப்படும் நேரங்களில் இப்படை பல்வேறு உதவிகளை வழங்கியது.
  • விடாமுயற்சியின் மூலம் இலக்குகளை அடையுங்கள்’ என்ற நோக்கத்திற்கு ஏற்ப இப்படை செயல்படுகிறது. 1985-ம் ஆண்டில், இப்படைப்பிரிவுக்கு 'மைட்டி ஜெட்ஸ்' என மறுபெயரிடப்பட்டது.
  • இப்படை தோற்றுவிக்கப்பட்டலிருந்து விமானப் படையின் நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தப் பணியையும் மேற்கொள்வதற்குப் இப்படை எப்போதும் தயாராக உள்ளது.

எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

  • எதிரி நாட்டு ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்தியா ஏற்கெனவே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

No comments:

Powered by Blogger.