Ads Top

WEIGHT INCREASING 5 HABITS: இந்த ஐந்து பழக்கங்கள் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் தெரியுமா ?

WEIGHT INCREASING 5 HABITS

WEIGHT INCREASING 5 HABITS: உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் செய்தாலே போதும் உங்கள் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம். நீங்கள் உங்களுடைய அன்றாட வாழ்வில் தவிர்த்து வரும் ஒரு சில விஷயங்களை தொடர்ந்து செய்தால் போதும், உங்களுடைய உடல் எடையில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.

நீங்கள் விரும்பும் எடையை, நீங்கள் விரும்பும் அளவு எடையை குறைத்துக் கொள்ள, உணவு மற்றும் உடற்பயிற்சி சிறந்த வழிமுறை. இருப்பினும் உங்கள் உடல் எடையை குறைப்பதில் இடையூறு ஏற்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன.

அதில் ஒரு சில குறிப்பிட்ட காலை பழக்கவழக்கங்கள் இருக்கிறது. அப்படி உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் ஐந்து காலை பழக்க வழக்கங்களைப் பற்றி பார்ப்போம்.

1. அதிகமாக தூங்குவது

WEIGHT INCREASING 5 HABITS: உடல் எடை குறையாததற்கு ஒரு முக்கிய காரணம் நீங்கள் அதிகமாக தூங்குவது கூட இருக்கலாம். இது உண்மையில் உங்கள் உடல் எடை அதிகரிக்க கூட காரணமாக இருக்கும்.

அதிக தூக்கம் பொதுவாக இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்கினால் அதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறைவாகத் தூங்குவது மட்டுமல்ல அதிகமாக தூங்குவதும் உங்களுடைய உடல் எடையை அதிகரிக்கும் தெரியுமா?

அது போல பகலில் அதிக நேரம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்கும். இரவில் தாமதமாக தூங்கி காலையில் நேரம் தாண்டி எழுவதும் உடல் எடையை அதிகரிக்கும்.

2. காலை உணவு

WEIGHT INCREASING 5 HABITS: யார் என்ன சொன்னாலும் உங்கள் காலை உணவை மட்டும் நீங்கள் தவிர்க்கக்கூடாது. காலையில் சாப்பிடாமல் இருப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இதனால் இது உடல் எடையை அதிகரிப்பதற்காக அதிக வாய்ப்புக்கு கொண்டு செல்கிறது.

காலை உணவை தவிர்ப்பதால் நாள் முழுவதும் உங்கள் புத்துணர்ச்சியை குறைத்து உங்களை சோம்பலாக மாற்றுகிறது. உங்களை அறியாமலேயே நீங்கள் உங்கள் உடல் உணவுக்காக ஏங்கும். இது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். கூடவே உங்கள் உடல்நலம் பாதிக்கும்.

WEIGHT INCREASING 5 HABITS

3. தியானம்

WEIGHT INCREASING 5 HABITS: அதிகாலை நீங்கள் செய்யும் தியானம் உங்கள் உடலில் உள்ள கூடுதல் எடையை குறைக்க உதவும். கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனை குறைக்க உதவுகிறது. கார்டிசோலின் ஏற்றத்தாழ்வு பசியை ஏற்படுத்தும்.

இதனால் அதிகம் சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கும். நீங்கள் அதிகாலை எழுந்தவுடன் சில நிமிட தியானத்தை முயற்சி செய்து தொடர்ந்து அதில் ஈடுபடுங்கள். உங்கள் உடல் எடையும் குறையும். முழுநாளும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

4. சிறிய உடற்பயிற்சி

WEIGHT INCREASING 5 HABITS: தினமும் காலையில் அனைவருக்கும் நீண்ட நடைபயிற்சி அதிக நேர உடற்பயிற்சி செய்ய அலுவல்கள் காரணமாக நேரமிருக்காது. இதனால் பலர் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வார்கள். 

அதற்கு பதிலாக தினமும் காலையில் ஒரு பத்து நிமிடங்கள் சிறுசிறு உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கும்.

5. தண்ணீர்

WEIGHT INCREASING 5 HABITS: உடல் எடை குறைப்பில் இருப்பவர்கள் தண்ணீர் குடிப்பதை அடிக்கடி மறந்து விடுவார்கள். உடல் எடை குறைக்க நினைக்கும் பலர் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுவார்களாம். நீர் உடலில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

மேலும் அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்வதை தடுக்கிறது. தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அதிக கலோரிகளை எரிக்க செய்கிறது. மற்றும் நச்சுக்களை அகற்றுவதன் மூலம் செரிமானத்திற்கும் உதவுகிறது. 

குடிநீரின் அளவு உங்கள் வயது, ஒட்டுமொத்த ஆரோக்கியம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது. நீங்கள் இந்த சில சில விஷயங்களை காலையில் செய்து வந்தாலே போதும் உங்களுடைய உடல் எடை மிக விரைவில் குறைந்து நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள்.

No comments:

Powered by Blogger.