HAIR TO GROW THICKER: முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?
Do you want your hair to grow thicker: முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?: இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது.
அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த பெண்களை பரவலாகக் காண முடிகிறது. முடி உதிர்வைத் தடுக்க முடி மாற்று சிகிச்சை, ஸ்பாவுக்குச் செல்லுதல், ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது.
எனப் பலரும் பல வழிகளைக் கையாளுகிறார்கள். ஒரு பக்கம் இவற்றால் கிடைக்கும் பலனைவிட செலவுதான் அதிகம். முடி உதிர்வைத் தடுக்க, நன்கு முடி வளர எளிய செய்முறைகள் சில உள்ளன.
அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லதே கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகமாக கொட்ட வைக்கிறது.
குறிப்பாக சரியான உணவு பழக்கம் வாழ்க்கை முறை போன்ற முக்கிய காரணமாக அமைகிறது. முடியை பராமரிக்க மக்கள் நிறையவே கடைகளில் இருந்து வாங்கி தன் முடியை பாதுகாத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். எனவே இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய மருத்துவம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- வெந்தயம்
- கருஞ்சீரகம்
- செம்பருத்தி பூ
- செம்பருத்தி இலை
- மருதாணி இலை
- ரோஜா இதழ்
- கற்றாழை
- சின்ன வெங்காயம்
Do you want your hair to grow thicker - செய்முறை
Do you want your hair to grow thicker: முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?: முதலில் ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்பு இவற்றில் 5 ஸ்பூன் வெந்தயம் 5 ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றுடன் செம்பருத்தி இலை மருதாணி இலை ரோஜா இதழ் முதலியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு சின்ன வெங்காயத்தை அதன் தோலை நீக்கி விட்டு அதனுடன் கற்றாழை உள்ளிருக்கும் பகுதியை சேர்த்துக் கொள்ளவும்.
இவை அனைத்தும் சேர்ந்த கலவை நன்கு கொதிக்கும் வரை சூடு படுத்திக் கொள்ளவும்.
இரண்டு நாட்கள் கழித்து இதனை வடிகட்டி தினமும் காலை உங்களது முடியின் வேர் பகுதியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வு நரைமுடி பிரச்சனை போன்ற அனைத்தும் தீர்ந்துவிடும்.
No comments: