Ads Top

EFFECT OF PHONE IN TOILET: செல்போனை கழிவறைக்கு எடுத்து செல்வதால் இத்தனை பாதிப்புகள் வருமா?

EFFECT OF PHONE IN TOILET

EFFECT OF PHONE IN TOILET: சிறுநீர் கழிக்க செல்லும் போதோ அல்லது வேரு வேலைகளுக்காக கழிவறைக்கு செல்லும் போதோ நம்மில் பலர் செல்போனை எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். அந்த சிலரில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் இதை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

கழிவறைக்குள் செல்போன் எதற்கு?

EFFECT OF PHONE IN TOILET: சிலர், செல்போனுக்கு அடிமையாகி எந்த நேரமும் அதை கையில் வைத்தே பழகி விட்டதால், அப்படியே அதை கழிவறைக்கும் எடுத்து சென்று விடுகிறோம். 

ஸ்மார்ட்போன்கள் போதைப்பொருள் என்று வாதிடுவது நியாயமானதுதான் என்றாலும், ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பிருந்தே மனிதர்களிடம் இந்த நடைமுறை இருந்தது. 

அப்போதைய மக்கள் கழிவறைக்கு செல்லும் போது பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் அல்லது நாவல்களை எடுத்துச் செல்வார்கள், இன்னும் கூட சிலர் அதைச் செய்கிறார்கள்.

உலகில் 66.7சதவிகிதம் பேர் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களாக இருக்கிறார்கள் என சொல்கிறது ஒரு புள்ளி விவரம். அதிலும் ஜென் Z எனக்கூறப்படும் இந்த கால இளசுகள் இதில் அதிகம் பேர். 

அமெரிக்காவில் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த நாட்டில் உள்ள பல பேர் கழிவறைக்கு செல்லும் போது செல்போனை எடுத்து செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

யாரும் சுத்தம் செய்வதில்லை

EFFECT OF PHONE IN TOILET: கழிவறைக்கு சென்று விட்டு வெளியில் கால் வைக்கும் முன்னர் கை கால்களை கழுவதை பலர் வழக்கமாக கொண்டிருப்பர். 

ஆனால், கை-கால்களை கழுவுபவர்கள் அவர்கள் கையுடன் எடுத்ட்துச்செல்லும் செல்போன்களை சுத்தம் செய்வதில்லை. இப்படி கழிவறைக்கு போனை எடுத்துச்செல்பவர்களில் 16.5 சதவிகிதம் பேர்தான் தங்கள் செல்பேசிகளை சுத்தம் செய்கின்றனரார். 

இதனால், கழிவறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் போனில் தொற்றிக்கொண்டு நோய் பாதிப்பை உருவாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

இதுகுறித்து ஆரிசோனா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு டாய்லட் சீட்டில் இருப்பதை விட கழிவறைக்கு எடுத்துச்செல்லும் செல்போனில் 10 மடங்கு அதிக கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

EFFECT OF PHONE IN TOILET

நோய் பாதிப்புகள் வரலாம்

கழிப்பறையிலிருந்து மொபைல் போனுக்கு கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இது, வாந்தி, டைரியா போன்ற பல உடல் உபாதைகளை உருவாக்குமாம். 

இப்படியே நாம் தொடர்ந்து செய்தால் நம் உணவில் நமக்கே தெரியாமல் கெட்ட பாக்டீரியாக்கள் கலந்து, நாம் சாப்பிடும் உணவுகளை விஷமாக மாற்றலாம். 

கழிவரையின் இருக்கையில் அதிக நேரம் உட்காருவதால் நம் பின்பகுதியில் உள்ள தசையில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. கழிப்பறை இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, சிரமப்படும் நேரத்தை அதிகரிப்பதன் மூலம் மூல நோய் அபாயத்தை அதிகரிக்குமாம்.

ஆசனவாய் பிரச்சனை!

EFFECT OF PHONE IN TOILET: செல்போனுடன் டாய்லட் சீட்டில் உட்காரும் போது நாம் எதற்கு வந்தோம் என்பதையே மறந்து சமயங்கலில் போனை உபயோகிக்க ஆரம்பித்து விடுவோம். 

இதனால் நாம் நினைக்கும் நேரங்களில் மலம் கழிக்க முடியாது. இது, ஆசனவாய் பிரச்சனைகளில் கொடு வந்து விட்டுவிடும். மேலும், நீண்ட நேரம் அங்கு அமருவது உடலுக்கும் கேடு.

EFFECT OF PHONE IN TOILET

செல்போன் பயன்பாட்டை குறைக்க டிப்ஸ்

EFFECT OF PHONE IN TOILET: செல்போன் பயன்பாடு மேற்கூறிய பிரச்சனைகள் மட்டுமன்றி உங்களுக்கு இன்னும் சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இதைத்தவிர்க்க இந்த டிப்ஸை உபயோகியுங்கள்.
  • செயலின் அல்லது தொலைபேசியின் தேவையில்லாத நோட்டிஃபிக்கேஷன் மியூட் செய்து விடுங்கள்.
  • கவன சிதறலை உண்டாக்கும் அல்லது அதிகம் உபயோகிக்கும் உபயோகமே இல்லாத செயலியை போனில் இருந்து தூக்குங்கள்.
  • செயலிக்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும் ஆப்ஷன் அனைத்து போன்களிலும் உள்ளது. அதை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.
  • போனிடமிருந்து தள்ளியிருங்கள்.
  • செல்போன் உபயோகிக்க தோன்றினால் அந்த தேடலை வேறு வேலையில் செலுத்துங்கள்.

No comments:

Powered by Blogger.