Ads Top

BENEFITS OF BEETROOT JUICE IN TAMIL: பீட்ரூட் ஜூஸ்

BENEFITS OF BEETROOT JUICE IN TAMIL

BENEFITS OF BEETROOT JUICE IN TAMIL: காய்கறிகளைப் பொறியலாகவோ, கூட்டாகவோ, சாலட் ஆகவோ சாப்பிடுவது உண்டு. சிலர் சூப் வைத்தும், அல்லது சாறாக்கியும் குடிப்பார்கள். கேரட் சாறு போன்று பீட்ரூட்டையும் சாறு பிழிந்து குடிக்கலாம். 

பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு மிக்க சாறு. குழந்தைகள் சட்டென்று சாப்பி டாத காய் இது. வாரம் ஒரு முறை பீட்ரூட் சாறை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல், மூலநோய், இரத்தசோகை,அல்சர் போன்றவை வராமல் தடுக்க முடியும்.
  • ஃப்ரெஷ் பீட்ரூட் - 1
  • பசும்பால் - 3 தம்ளர் 
  • தண்ணீர் - 1 தம்ளர் 
  • சர்க்கரை - இனிப்புக்கேற்ப.

BENEFITS OF BEETROOT JUICE IN TAMIL

செய்முறை

BENEFITS OF BEETROOT JUICE IN TAMIL: சுத்தம் செய்த பீட்ரூட்டை தோல் சீவி துருவி கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி பாலேடு இல்லாமல் வடிகட்டி கொள்ளவும். 

துருவிய பீட் ரூட்டை மிக்ஸியில் அடித்து சிறிது நீர் விட்டு அகலமான சாறு வடிகட்டியில் வடிகட்டி கொள்ளவும். காய்ச்சிய பால் நன்றாக ஆறியதும் பீட்ருட் சாறு சேர்த்து சர்க்கரை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

குறைந்த அளவு பீட்ரூட் அதிக அளவு பால் சேர்ப்பதால் பீட்ருட் வாசம் அதிகம் இருக்காது. சத்துமிக்க இயற்கை பானம் இது. அதிகளவு பீட்ரூட் சேர்த்தால் குடிக்க இயலாது அல்லது கேரட் சேர்த்தும் தயாரிக்கலாம்.

BENEFITS OF BEETROOT JUICE IN TAMIL

பீட்ரூட் நன்மைகள்

BENEFITS OF BEETROOT JUICE IN TAMIL: இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் அதிகளவில் பீட்ரூட்டில் இருக்கிறது. நார்ச்சத்து, கனிமச்சத்து, ஆன்டி -ஆக்ஸிடண்ட்கள் போன்றவை நிறைந்திருக்கிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களையும் புதுப்பிக்கும் குணத்தைக்கொண்டிருக்கிறது பீட்ரூட்.உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்வதற்கு அருமருந்து பீட்ரூட் சாறு. 

இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் பீட்ரூட்டில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட் டால் இரத்த அணுக்களின் உற்பத்தி கணிசமாக உயரும்.

சிறுவயது முதலே குழந்தைகளுக்கு பீட்ரூட் சாறு பழகினால் கண்கள் குளிர்ச்சியடைவதோடு, கண்பார்வையும் கூர்மைப்பெறும். சிறுவயதில் கண்ணாடி போடும் குறைபாடுகள் இருக்காது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூஸை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பீட்ரூட் சேர்ப்பது நல்லதல்ல.

No comments:

Powered by Blogger.