Ads Top

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL 2023: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு முறை சேவைகளைப் பெறுவது எப்படி?

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL 2023: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சேவைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன. சென்னையில் உள்ள எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையிலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த சேவைகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், தரமான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளிலேயே வழங்க இந்த முயற்சியை எடுத்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL 2023: தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதை அமல்படுத்துவதற்கு அதிக நிதி செலவாகும் என்பதால் செயலாக்கம் பெறாமலே இருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் உள்ள எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையிலும், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தலா 2.5 கோடி செலவில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன. 

இதில் ஒவ்வொரு மையத்திலும் கட்டமைப்புக்கு ரூ.1.5 கோடியும், தேவையான மருந்துகளை பெற ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL

செயற்கை கருத்தரிப்பு என்றால் என்ன?

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL 2023: இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் மருத்துவ உதவியுடன் குழந்தைப் பெற்றுக் கொள்வது செயற்கை கருத்தரிப்பு முறை என கூறப்படுகிறது. 

இதில் Intra Uterine Insemination எனப்படும் பெண்ணின் கருப்பைக்குள் விந்தணுவை செலுத்துவது, in-vitro fertilization எனப்படும் ஐ.வி.எப் சிகிச்சை முறைகளே அதிகம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் ஆகும்.

Intra Uterine Insemination என்பது, விந்தணுக்களை ஆய்வகத்தில் சேகரித்து, அதில் வளமான விந்துணுக்களை தரம் பிரித்து அவற்றை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தும் சிகிச்சை முறையாகும். 

இந்த சிகிச்சை முறை சென்னை, மதுரை உட்பட பல அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. புறநோயாளி பிரிவிலேயே இந்த சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.

வரும் செப்டம்பர் மாதம் முதல், in-vitro fertilization எனப்படும் ஐ.வி.எப் சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து ஆய்வக சூழலில் வளர வைத்து, அதில் விந்தணுக்களைச் செலுத்தி, அவை கருவாக உருவான பிறகு, அந்தக் கருவை பெண்ணின் கருப்பையில் பொருத்துவது தான் ஐ.வி.எப் முறை ஆகும்.

அரசு மருத்துவமனையில் என்ன சேவைகள் பெறலாம்?

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL 2023: அரசு செயற்கை கருத்தரிப்பு மையங்களில் ஆண்களுக்கான விந்தணு பரிசோதனை, பெண்களுக்கான கருமுட்டை, கருமுட்டை குழாய் பரிசோதனை, கருப்பை நுண்ணறைகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.

இந்த சிகிச்சை முறைகள், முதல் அடுக்கு இரண்டாம் அடுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் அடுக்கு சிகிச்சைகளில் பெண்களுக்கு அண்ட விடுப்பை (கருமுட்டை உருவாதல்) உந்தும் மருந்துகள் வழங்கப்படும். 

அண்டவிடுப்பைக் கண்டறிய கருப்பை நுண்ணறைகள் கண்காணிக்கப்படும். கருமுட்டை குழாயில் அடைப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும். ஆண்களின் விந்தணுக்களை பெருக்க அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL

யாரெல்லாம் IVF சிகிச்சைப் பெறலாம்?

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL 2023: இந்தச் சிகிச்சைகளில் பலன் கிடைக்காதவர்களுக்கு இரண்டாம் அடுக்கு சிகிச்சையான IVF வழங்கப்படும்.

அண்டவிடுப்பு இயல்பாக இல்லாத பெண்கள், கருமுட்டை குழாயில் சிக்கல்கள் கொண்டவர்கள், வயது மூப்பு காரணமாக வளமான முட்டைகள் இல்லாதவர்கள், விந்துணுக்கள் குறைவாக உள்ள ஆண்கள் உள்ளிட்டோருக்கு இந்த சிகிச்சை வழங்கப்படும்.

தனியார் கருத்தரிப்பு மையங்கள்

ARTIFICIAL INSEMINATION IN TAMILNADU HOSPITAL 2023: இந்தியக் குடும்பங்களில், மணம்‌ புரியும் ஒவ்வொரு தம்பதியும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வது சமூக கட்டாயமாக உள்ளது. எதேனும் உடலியல் குறைபாடுகள் இருந்தாலும், தத்தெடுத்தல் முயற்சிகள் கடைசி தேர்வாகவே உள்ளன. எனவே, செயற்கை முறையில் கருத்தரித்தலுக்கு முயல்கிறார்கள்.

1980களில் செயற்கை கருத்தரிப்பு நடைமுறைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கருத்தரிப்பு மையங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. 

மிகவும் நுட்பமான தொழில்நுட்பம் பயன்படுத்துவதாலும், கொண்டு இந்த சேவைகள் வழங்கப்படுவதால் இவை அதிக கட்டணம் பெறும் சேவைகளாகவே உள்ளன.

இந்தியச் சமூகங்களில் திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமான சமூக அழுத்தம் மிக்கது என்பதால், அதிக கட்டணங்களை எளிதாக செலுத்த முடியாதவர்கள் ஏழை நடுத்தர குடும்பத்தினரும் கூட தங்கள் பல ஆண்டு கால சேமிப்பை, சிறிய சொத்துகளை விற்று செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

No comments:

Powered by Blogger.