Ads Top

GARLIC BENEFITS IN TAMIL 2023: பூண்டின் பயன்கள்

GARLIC BENEFITS IN TAMIL 2023

GARLIC BENEFITS IN TAMIL 2023: உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பூண்டு மிகப்பெரிய நன்மையை செய்கிறது.

பூண்டில் உள்ள ப்ரீபயாடிக் பண்புகள் குடல் நுண்ணுயிர்களின் திறனை அதிகரிக்கிறது. பூண்டு சாறு உங்கள் இரத்த நாளங்களை பாதிக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவும். 

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பூண்டில் வைட்டமின் பி12 உள்ளது. 

இதனை உட்கொள்வதால் உங்கள் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. இது தவிர பூண்டில் சல்பர் இருப்பதால் நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயுக்கள் உருவாகின்றது.

பூண்டை நாம் சாப்பிடும்போது இந்த வாயுக்களின் கலவையானது நமது உடலின் ரத்த நாளங்களை தளர்த்தி அவற்றை விரிவுபடுத்த உதவுகின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 2 பல் பூண்டு சாப்பிடலாம்.

காலை நேரத்திலோ அல்லது பகலில் எந்த நேரத்திலுமோ நீங்கள் பூண்டை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு காலை நேரத்தில் பூண்டை சாப்பிடுவதால் உடலில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். 

அதோடு இரத்த நாளங்களில் எவ்வித அழுத்தமும் இருக்காது மற்றும் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வறுத்த பூண்டை சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஒரு பாத்திரத்தில் பூண்டை வறுத்து, இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் சாப்பிடவும். ஆனால் அதற்காக ஒரே நாளில் அதிகமாக சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நீண்ட காலமாக சில கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது. உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, உடல் எடையை குறைப்பது மிகப்பெரிய பணி. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடுதல் பலனை பெற பூண்டு சாப்பிடலாம்.

No comments:

Powered by Blogger.