Ads Top

WHATSAPP MUTE CALL LATEST UPDATE 2023: வாட்ஸ் அப்பில் இனி கால்களுக்கும் ம்யூட் ஆப்ஷன் லேட்டஸ்ட் அப்டேட்

WHATSAPP MUTE CALL LATEST UPDATE 2023: வாட்ஸ் அப்பில் இனி கால்களுக்கும் ம்யூட் ஆப்ஷன் லேட்டஸ்ட் அப்டேட்

WHATSAPP MUTE CALL LATEST UPDATE 2023: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை பெற்றுள்ள தகவல் பரிமாற்ற செயலிகளில் முண்ணனியில் இருப்பது வாட்ஸ் அப் நிறுவனம். 

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி பயனர்களை கவரும் வகையில் அடுத்தடுத்த அப்டேட்களை செய்து வருகிறது. இதனால் பயனர்கள் கூடுதல் வசதிகளை பெறுகின்றனர்.

குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும்.

இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் புதிய அப்டேட்டை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேவையில்லாத அழைப்புகளை மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் மூலம் வாட்ஸ் அப்பில் தெரியாத நபர்கள் அழைப்பை மியூட்டில் வைக்கலாம். தெரியாத நம்பர்களோ அல்லது விருப்பப்படாத நம்பர்களில் இருந்து அழைப்பு வந்தால் அதனை மியூட் செய்வதற்கான வசதி புதிய அப்டேட்டாக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Chat-க்கு மட்டும் மியூட் வசதி இருந்து வந்த நிலையில், தற்போது அழைப்புகளுக்கும் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் போட்டோ மற்றும் வீடியோக்களை ஃபார்வேர்ட் செய்யும் போது அதில் கேப்ஷன் சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யவும் புதிய அப்டேட்டில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 

அதே போல் டாகுமெண்ட்களை பகிரும்போதும் இனி கேப்ஷனை சேர்க்கலாம். இதன்படி, செய்திதாள்கள், வர்க் டாகுமெண்ட்ஸ் என எதை ஷேர் பண்ணினாலும் அதில் இனி கேப்ஷனை சேர்க்கலாம். 

இந்த புதிய அப்டேட்கள் படிப்படியாக பயனாளர்களுக்கு பயன்பாட்டுக்கு வரும். விரைவில அனைத்து சேவைகளும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.