Ads Top

காலை உணவை தவிர்த்தால் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுமா? / Does skipping breakfast affect immunity?

காலை உணவை தவிர்த்தால் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுமா? / Does skipping breakfast affect immunity?

காலை உணவை தவிர்த்தால் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுமா? / Does skipping breakfast affect immunity?: நம்மில் பலர் வேலைப்பளு காரணமாக காலை உணவை தவிர்த்து விடுகிறோம். பள்ளி மாணவர்கள் முதல் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் வரை இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கில் உணவை மறந்து ஓடுகின்றனர். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன.

இது சம்பந்தமான ஆராய்ச்சி எகிப்தில் சினாய் மலையில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் நடந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் காலை உணவை தவிர்ப்பது நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதில் சிக்கல் ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

இந்த ஆராய்ச்சியின் முன்னணி எழுத்தாளர் மற்றும் இகான் மவுன்ட் சினாயில் உள்ள இருதய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனருமான பிலிப் ஸ்விர்ஸ்கி இதைப் பற்றி கூறியதாவது, "காலை உணவை தவிர்ப்பது விரதம் எடுப்பது போன்றவை ஆரோக்கியமானது என்று விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

மேலும், விரதத்தின் நன்மைகளுக்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. அதே நேரத்தில் அதற்கு எங்களது ஆராய்ச்சியாாது, உணவை தவிர்ப்பதால் பாதிப்பும் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை வழங்குகிறது. மேலும், இது விரதத்துடன் தொடர்புடைய ஓர் ஆய்வு ஆகும். 

இந்த ஆய்வில் நரம்பு மண்டலத்திற்கும் நோய் எதிர்ப்பு அமைப்பிற்கும் உள்ள தொடர்பு பற்றி அறிந்து கொள்ள இயலும். இதை பற்றி மட்டும் இல்லாமல் உடலில் இயக்கத்தை பற்றி ஒரு முழுமையான புரிதல் ஏற்படுவதற்கும் இது ஒர் பயனுள்ள ஆய்வாக அமைந்தது என்றும் அவர் கூறுகிறார்.

No comments:

Powered by Blogger.