வரி வசூலிக்காத நாடுகள் / COUNTRY WITHOUT TAX
இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க சில நாடுகளில் மக்கள் வரி செலுத்தும் முறை இன்னும் கூட நடைமுறையில் இல்லை. ஏறக்குறைய 10க்கும் அதிகமான நாடுகளில் சொந்த நாட்டு மக்களிடம் இருந்து வரி வசூலிப்பது இல்லையாம்.
UAE எனும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், கத்தார், குவைத், ஓமன், பஹாமாஸ், பெர்முடா, புருனே, மொனாக்கோ, நவ்ரூ, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், பஹ்ரைன் உள்ளிட்டவற்றில் வசிக்கும் மக்களுக்கு அந்நாட்டு அரசுகள் வரிகள் விதிப்பது இல்லையாம்.
வரி இல்லாமல் சமாளிப்பது எப்படி?
COUNTRY WITHOUT TAX: மக்களிடம் வரி வசூலிக்காமல் இந்த நாடுகள் மாற்று வழியில் செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை எடுத்து கொண்டால் அந்த நாடு மிகவும் அழகாகவும், பொருளாதாரத்தில் மேன்மையுடன் திகழ்கிறது.
இதற்கு காரணம் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் வருவாயாகும். ஐக்கிய அரபு எமிரேட் எண்ணெய் வளமிக்கத்துடன் உள்ள நிலையில் பல நாடுகளுக்கும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இதற்காக ஒவ்வொரு நாடுகளும் பெரும் தொகையை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வழங்குகின்றன. இது அந்த நாட்டு அரசாங்கத்துக்கு போதுமானதாக உள்ளது.
அதோடு அந்த நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். அவர்களுக்கான ஓட்டல் வரி, விசா கட்டணம் உள்ளிட்ட பயணம் சார்ந்த வரிகளும் அந்த நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி கொடுக்கிறது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களிடம் வரி வசூலிப்பது இல்லை.
துபாய், கத்தார், ஓமன் நாடுகள்
COUNTRY WITHOUT TAX: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரிசையில் அடுத்ததாக நாம் பார்த்தால் துபாயை எடுத்து கொள்ளலாம். இது கச்சாஎண்ணெய் வளத்துடன் இருப்பதோடு, சுற்றுலாத்துறை மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகிறது.
இதேபோல் ஓமன் எண்ணெய் வளத்துட்ன சுற்றுலா மற்றும் கப்பல் சார் வணிகத்தில் சிறந்து விளங்குகிறது. இதனால் அந்த நாடும் மக்களுக்கு வரி விதிப்பது இல்லை. குவைத், கத்தார் ஆகிய நாடுகள் எண்ணெய் வளம் கைக்கொடுப்பதால் அங்கும் மக்கள் வரி கட்டும் முறை இல்லாமல் உள்ளது.
பெர்முடா, நவ்ரூ, பஹ்ரைன்
COUNTRY WITHOUT TAX: மேலும் பஹாமாஸ், பெர்முடா, புருனே, மொனாக்கோ, நவ்ரூ, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், வாடிகன், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும் வருமான வரி என்பது இல்லை. இதில் பெர்முடா, மொனாக்கோ ஆகியவை நிதிக்கான சேவைத் துறையை நம்பியுள்ளது.
இங்குள்ள வங்கி, காப்பீடு, முதலீடு உள்ளிட்டவற்றிலும் இருந்த அதிக வரி கிடைப்பதால் மக்களை வரி கட்ட பணிப்பது இல்லை. பிற நாடுகளும் இதேபோன்று மாற்று வழியில் வருவாய் ஈட்டி வருகின்றன.
மக்கள் தொகை குறைவாக இருக்கும் நிலையில் அவர்களின் அரசை நடத்த அதுவே போதுமானதாக உள்ளதால் வரி விதிப்பு முறை அங்கு தேவையானதாக இல்லையாம்.
மேலும் இந்த செய்தியில் குறிப்பிட்ட நாடுகளில் இந்தியாவை போன்ற வரி விதிப்பு முறை நிறைந்து இல்லாமல் சில விஷயங்களில் அதாவது தொழில்சார்ந்த செயல்பாடுகளுக்கு மிகக்குறைவான அளவில்வரி செலுத்தும் முறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: