Ads Top

ஏலக்காய் / CARDAMOM (ELAKKAI)

  • உணவில் சேர்க்கப்படும் ஏலக்காய் வாசனையை மட்டும் தருவதில்லை. அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. 
  • தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல் நல்ல ப‌சி எடு‌க்கு‌ம். 
  • பசி ஏற்படாது சாப்பிட பிடிக்காது என கூறுபவர்கள் இதை செய்யலாம்.
  • நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌அவஸ்தைப்படுபவர்களும் ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து தொடர்ந்து இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.
  • ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.
  • மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
  • இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.

No comments:

Powered by Blogger.