Ads Top

மணத்தக்காளி கீரையின் நன்மைகள் / BENEFITS OF MANATHAKKALI KEERAI

  • உணவில் பயன்படுத்தக்கூடிய மணத்தக்காளி கீரை. உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது மேலும் இது நம் உடலில் ஏற்படக்கூடிய பல வகையான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  • மணத்தக்காளி கீரையில் காணப்படும் அதிகமான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இள வயதிலேயே ஏற்படும் நரை மற்றும் தோல் சுருக்கம் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.
  • மணத்தக்காளி கீரையில் சோலமார்கின், சோலாசோனைன், சோலனைன் மற்றும் சோலாசோடின் இருப்பதால் இவை கேன்சர் செல்களுக்கு எதிராக வீரியமுடன் செயலாற்றுகின்றன. 
  • மேலும் இந்த கீரையானது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு மறுபடியும் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க பயன்படுகிறது.
  • மஞ்சள் காமாலைக்கான மருத்துவத்தில் மணத்தக்காளிக் கீரையானது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது இது கல்லீரலின் தசைகளை வலுப்படுத்தி மஞ்சள் காமாலையின் வீரியத்தை குறைக்க உதவுகிறது. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி கீரையை பயன்படுத்தலாம்.
  • மணத்தக்காளி கீரை சிறுநீரகத்தின் செயல்பாட்டை தூண்டுவதற்கு பயன்படுகிறது. மேலும் இது சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகட்டவும் உதவக்கூடிய ஒன்றாகும். 
  • மேலும் இந்த கீரையில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்தின் காரணமாக இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுபண் போன்றவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.
  • மணத்தக்காளி கீரையில் வைட்டமின் ஏ வைட்டமின் சி இரும்புச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவை அடங்கியுள்ளன. இவை நம் உடலில் ஏற்படக்கூடிய அதிகப்படியான உஷ்ணத்தை போக்க பயன்படுகிறது. 
  • மேலும் இது சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோள்களில் ஏற்படும் அலர்ஜியை போக்கும் பயன்படுகிறது.

No comments:

Powered by Blogger.