Ads Top

விஜய்யின் வாரிசு 5 நாட்களில் 150 கோடி வசூல் வேட்டை

  • விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 
  • மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • விஜய்யின் வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
  • இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. 
  • இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மெகா ப்ளாக்பஸ்டர் வாரிசு உலகளவில் வெறும் 5 நாட்களில் 150 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்துள்ளது. ஆட்டநாயகன்!' என்று பதிவிட்டுள்ளது. வாரிசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், 150 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.